search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    தலைமுடியை வெட்டியது கேன்சர் நோயாளிகளுக்காகவே - நடிகை ஓவியா
    X

    தலைமுடியை வெட்டியது கேன்சர் நோயாளிகளுக்காகவே - நடிகை ஓவியா

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் தலையில் அடிபட்டதால் முடி வெட்டியதாக வெளியான தகவலை மறுத்துள்ள நடிகை ஓவியா கேன்சர் நோயாளிகளுக்கு விக் தயாரிப்பதற்காக முடி தானமாக அளித்துள்ளதாக கூறியுள்ளார்.
    பிக்பாஸ் நிகழ்ச்சியில் தலையில் அடிபட்டதால் முடி வெட்டியதாக வெளியான தகவலை மறுத்துள்ள நடிகை ஓவியா கேன்சர் நோயாளிகளுக்கு விக் தயாரிப்பதற்காக முடி தானமாக அளித்துள்ளதாக கூறியுள்ளார்.

    தனியார் தமிழ் தொலைக்காட்சியில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. பிரபலமான நபர்கள் ஒரே வீட்டில் ஒன்றாக 100 நாட்கள் இருக்குமாறு இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடிகர் கமல்ஹாசன் இதனை தொகுத்து வழங்குகிறார்.



    இந்நிகழ்ச்சியில் ஒரு பங்கேற்பாளராக நடிகை ஓவியா கலந்து கொண்டிருந்தார். பின்னர், பல்வேறு விவகாரங்கள் காரணமாக நிகழ்ச்சியின் பாதியிலேயே அவர் வெளியேறினார். ஆரவ் உடன் ஏற்பட்ட காதல் தொடர்பாக பிக்பாஸ் அரங்கில் அவர் தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வெளியாகின.

    தற்கொலைக்கு முயன்ற போது தலையில் அடிபட்டதால் சிகிச்சைக்காக தலை முடியை ஓவியா வெட்டியதாக செய்திகள் சமூக வலைதளங்களில் பரவின. இந்நிலையில், கொச்சியில் உள்ள தனது வீட்டிலிந்து ஓவியா இது தொடர்பாக வீடியோ மூலம் விளக்கமளித்துள்ளார்.



    அதில், ”எனக்கு இவ்வளவு ரசிகர்கள் அன்பாகவும், ஆதரவாக இருப்பீர்கள் என நினைத்து பார்த்ததே இல்லை. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. லவ் யூ கய்ஸ். எனது ஹேர் ஸ்டைல் குறித்து பல தகவல்கள் வருகின்றது. சிகிச்சைக்காக எனது தலைமுடி வெட்டப்படவில்லை.

    உண்மை என்னவென்றால் விக் தயாரிக்கும் நிறுவனம் என்னை அனுகியது. கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது முடிகள் போய்விடும். இதனால், அவர்களுக்கு விக் தேவைப்படுகிறது. அந்த விக் தயாரிப்பதற்காகவே எனது தலைமுடியை தானமாக வழங்கினேன். உங்களுக்கு இந்த ஹேர் ஸ்டைல் பிடிக்கும் என நம்புகிறேன். முடி வெட்டியதற்கு வேறு எந்த காரணமும் இல்லை” என அந்த வீடியோவில் ஓவியா தெரிவித்துள்ளார்.

    மேலும், “என்னை பல ரசிகர்கள் ரோல் மாடலாக எடுத்துக்கொள்வதாக தெரியவந்தது. அது மிகவும் தவறு. யாரும் இங்கு சரியானவராக இல்லை, நான் உள்பட. ஒவ்வொருவருக்கும் பாஸிட்டிவ், நெகட்டிவ் பக்கங்கள் உண்டு. மற்றொருவரை அப்படியே நகலாக நீங்கள் எடுத்துக் கொண்டால் அது உங்களது சுய மரியாதையை பாதிக்கும். ஒருவரிடம் பிடித்த விஷயங்களை நீங்கள் பின்பற்றலாம். ஆனால், மொத்தமாக ரோல்மாடலாக எடுத்துக்கொள்வது வேண்டாம்

    உங்களுக்கென ஒரு ஸ்டைலை உருவாக்குங்கள். மகிழ்ச்சியாக இருங்கள். என்னைப்பற்றி வெளியான அனைத்து தகவல்களுக்கும் இந்த வீடியோ மூலமாக பதிலளிக்க விரும்பினேன்” எனவும் ஓவியா தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×