search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    தமிழர்களை குறைசொன்னால் விடமாட்டேன்: சுருதிஹாசன்
    X

    தமிழர்களை குறைசொன்னால் விடமாட்டேன்: சுருதிஹாசன்

    தமிழர்களை குறைசொன்னால் விடமாட்டேன் என நடிகை சுருதிஹாசன் ஆவேசமாக கூறியுள்ளார். அது குறித்த செய்தியை பார்ப்போம்...
    நடிகை சுருதிஹாசன் தனது அனுபவம் குறித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது...

    “இசை துறையில் இருந்த நான் நடிகை ஆனேன். அப்பா எனக்கு எந்த சிபாரிசும் செய்தது இல்லை. நான் நல்லது செய்தாலும், தவறு செய்தாலும் அதற்கு நான் தான் பொறுப்பு.

    விதம் விதமான வேடங்களில் நடித்து அப்பா சாதித்து இருக்கிறார். நான் இதுவரை சாதிக்கவில்லை.

    இன்றைய சூழ்நிலையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. நமது சமூக அமைப்பு அப்படி. காரணம் ஆண்களுக்கு தான் நமது நாட்டில் மரியாதை அதிகம். ஆண்குழந்தை பிறந்தால் கொண்டாடுவார்கள். பெண் குழந்தை பிறந்தால் கொண்டாட்டம் இல்லை. ஆனால் எங்கள் வீட்டில் அப்படி அல்ல. எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தால், நான் தான் என் குழந்தைக்கு பெண்களை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.

    நான் ஒரு தமிழ்பெண் என்பதில் பெருமைப்படுகிறேன். தமிழ் நாட்டையோ, தமிழர்களையோ யார் குறை சொன்னாலும் அவர்களை உண்டு- இல்லை என்று செய்துவிடுவேன். மும்பையில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா எல்லா மாநிலங்களையும் சேர்த்து ‘மதராசி’ என்று கிண்டல் செய்வது போல சிலர் பேசுவது உண்டு. அவர்களுக்கு நான் தமிழ்நாட்டை பற்றி வகுப்பு எடுப்பேன்.

    இயக்குனர் என்பது பெரிய பொறுப்பு. இதுவரை அது பற்றிய எண்ணம் இல்லை. அப்படி ஒருவாய்ப்பு வந்தால் அது வரம்.

    நான் இன்னும் நடிப்பில் திருப்தி அடையவில்லை. தெலுங்கில் அதிர்ஷ்டகாரி, அதிர்ஷ்டம் இல்லாதவள் என்று மாற்றி மாற்றி சொல்கிறார்கள். எனக்கு எல்லாம் கிடைத்து இருக்கிறது. அடுத்து என் தகுதியை வளர்த்து கொள்ள வேண்டும்.

    என் தங்கை முதல் தமிழ் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி. ஜி.எஸ்.டி. பற்றி தெரியாது. ஆனால் என்காசு என் கையில் இருந்தால் சந்தோ‌ஷம்”.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×