search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ‘டோரா’ படத்துக்கு தடை கேட்டு வழக்கு 28-ந் தேதி விசாரணை
    X

    ‘டோரா’ படத்துக்கு தடை கேட்டு வழக்கு 28-ந் தேதி விசாரணை

    ‘டோரா’ படத்துக்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கில் 28-ந் தேதி விசாரணை நடத்தப்பட உள்ளது. இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
    நடிகை நயன்தாரா, நடிகர் தம்பிராமையா நடித்துள்ள ‘டோரா’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தின்  கதை, திரைக்கதை தனக்கு சொந்தமானது எனக் கூறி சினிமா இணை இயக்குனர் நாடிமுத்து என்பவர் சென்னை சிட்டி சிவில்  நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், ‘2013ம் ஆண்டு ‘நீயும் நானும்’ என்ற தலைப்பில் கதை, திரைக்கதை  எழுதியிருந்தேன்.

    அதை படமாக எடுப்ப தாகக் கூறிய தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக், என் கதையை வாங்கி படித்து விட்டு மறுநாள் திருப்பித் தந்தார்.  பின்னர், என் கதையின் தலைப்பை மட்டும் மாற்றி விட்டு, ‘டோரா’ என்ற பெயரில் என் கதையை திரைப்படமாக தயாரித்துள்ளார்.  இந்த படத்தை வெளியிட அனுமதித்தால் அது எனக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும். அதனால், படத்தை வெளியிட தடை விதிக்க  வேண்டும்’ என்று கூறியிருந்தார்.



    இந்த மனு 16-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதி சாந்தி முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மார்ச் 24ந்  தேதி (இன்று) தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக் நேரிலோ அல்லது வக்கீல் மூலமாகவோ ஆஜராகவேண்டும் என்று உத்தரவிட்டு  இருந்தார்.

    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தயாரிப்பாளர் சார்பில் வக்கீல்  சுரானா ஆஜரானார். அதேபோல மனுதாரர் சார்பில் வக்கீல் பி.ஆனந்தன் ஆஜரானார்.



    இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சாந்தி, இந்த வழக்கிற்கு எதிர்மனுதாரர் நேமிசந்த் ஜபக் பதில் மனுவை வருகிற 28ந்  தேதி (செவ்வாய்கிழமை) தாக்கல் செய்யவேண்டும் என்று அன்று இந்த வழக் கின் இறுதி விசாரணை நடத்தப்படும் என்றும் நீதிபதி  உத்தரவிட்டார்.
    Next Story
    ×