search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    என்னை உயர்த்திய இந்த சமூகத்துக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும்: விஷால்
    X

    என்னை உயர்த்திய இந்த சமூகத்துக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும்: விஷால்

    நடிகர் விஷால் ஒரு பள்ளி விழாவில் கலந்துகொண்டு பல்வேறு விஷயங்களை பற்றி பேசியுள்ளார். அவர் பேசிய விவரங்களை கீழே விரிவாக பார்ப்போம்.
    நடிகரும், நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சிதம்பரம் மாவட்டம் பிச்சாரவத்தில் நடந்து வருகிறது. பிச்சாவாரத்தில் உள்ள பள்ளி விழாவில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஷால் மற்றும் பிரசன்னாவும் கலந்து கொண்டனர்.

    இவர்களோடு ஆபர் தொண்டு நிறுவன தலைவி நடிகை பூங்கோதையும் கலந்துகொண்டார். தென்னிந்திய நடிகர் சங்கமும் , ஆபர் தொண்டு நிறுவனமும் இனைந்து எம்.ஜி.ஆர் நகர் மக்களுக்கு வெள்ள நிவாரண உதவி செய்தனர். இந்த விழாவில் விஷால் மாணவர்களுக்கு காலணிகள், நோட்டு புத்தகங்கள், சீருடைகள் வழங்கிய பின் பேசினார்.



    அவர் பேசும்போது, ஒவ்வொரு முறை ஒரு நிகழ்ச்சிக்கு செல்லும்போது அங்கே நாம் எதற்காக போகிறோம், என்ன செய்ய போகிறோம், நாம் அங்கு செல்வதனால் அவர்களுக்கு என்ன பலன் கிடைக்க போகிறது என்பதை அலசி பார்த்துதான் எல்லா நிகழ்ச்சிக்கும் நான் செல்கிறேன்.

    நான் இங்கு இருந்து கிளம்பியவுடன் எனக்கு அணிவித்த இந்த சால்வைகளை எல்லாம் விற்று அதிலிருந்து கிடைக்கும் பணத்தில் இன்னும் ஒரு குழந்தையை படிக்க வைக்க போகிறேன். எனக்கு பிடிக்காத ஒரு விஷயம் சால்வை அணிவிப்பது. முதலில் மாணவர்களாகிய நீங்கள் தான் இந்த மேடையில் அமர வேண்டும். நான் உங்கள் இடத்தில் அமர்ந்து பேச வேண்டும். உங்களுக்கு தான் இந்த மேடை. நான் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை இங்கே நின்று பேசுவதற்கு.



    நான் இந்த கிராம மக்களுக்கு மட்டுமல்ல காதால் கேட்கும் விஷயங்களுக்கும், கண்ணால் பார்க்கும் விஷயங்களுக்கும் முடிந்த அளவிற்கு உதவி செய்கிறேன். நான் உதவி செய்வது பெரிய விஷயம் அல்ல இந்த பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவி வயதான பெண்மணி ஒருவருக்கு உதவி செய்துள்ளார். இது மிகப்பெரிய ஒரு விஷயமாகும்.

    நான் வளர்ந்து இந்த நிலைக்கு வந்த பிறகு தான் அனைவருக்கும் உதவி செய்கிறேன். நான் நல்ல நிலைக்கு வர நீங்கள் தான் காரணம், நீங்கள் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி என் படத்தை பார்ப்பதனால் தான் நான் இந்த இடத்தில் இருக்கிறேன். என்னை நல்ல நிலைக்கு கொண்டு வந்துள்ள இந்த சமூகத்துக்கு ஏதாவது நாம் நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு நான் உதவி வருகிறேன்.

    என்னை பாராட்டுவதை விட எட்டாம் வகுப்பு படிக்கும் போதே பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்டுள்ள இந்த மாணவியை பாராட்டுவது தான் சரியாக இருக்கும் என்றார் விஷால்.
    Next Story
    ×