search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக அறிமுகமாகும் `படைவீரன் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
    X

    விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக அறிமுகமாகும் `படைவீரன்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

    இவோக் தயாரிப்பில் பிரபல பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் `படைவீரன்' என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இதுகுறித்த முழுதகவலை கீழே பார்ப்போம்.
    தேனி மாவட்டத்தில் உயிர்ப்போடு வாழும் ஒரு கிராமமும்... அதன் மண்சார்ந்த மனிதர்களின் வாழ்க்கையுமாக உருவாகும் படம்  `படைவீரன்'.

    பிரபல பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அம்ரிதா என்ற புதுமுகம்  கதாநாயகியாக நடிக்கின்றார். இப்படத்தை தனா என்ற புதுமுக இயக்குநர் இயக்குகிறார். இயக்குனர் இமயம் பாரதிராஜா  இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர்களுடன் `கல்லூரி' அகில், கலையரசன், இயக்குநர் விஜய்பாலாஜி,  இயக்குநர் மனோஜ் குமார், நித்தீஷ், இயக்குநர் கவிதா பாரதி, கன்யா பாரதி, `தெய்வம் தந்த வீடு' நிஷா உள்ளிட்ட பலர்  நடிக்கின்றனர்.



    `கடல்', `ஓ காதல் கண்மணி' படங்களில் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவியாளராக பணிபுரிந்த தனா இப்படத்தின் மூலம்  இயக்குனராக அறிமுகமாகிறார். ராஜவேல் மோகன் இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். கார்த்திக் ராஜா  இசைமைக்கிறார்.

    இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் `படைவீரன்' படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகர் அர்விந்த்சாமி இன்று வெளியிட்டார். இவோக் தயாரிப்பு நிறுவனம் சார்பில் மதிவாணன் இப்படத்தை தயாரிக்கிறார்.
    Next Story
    ×