search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பாவனா கொடுமை எனக்கு நேர்ந்தால் காம வெறியர்களை கொலை செய்து இருப்பேன்: ரகுல்பிரீத் சிங்
    X

    பாவனா கொடுமை எனக்கு நேர்ந்தால் காம வெறியர்களை கொலை செய்து இருப்பேன்: ரகுல்பிரீத் சிங்

    “நடிகை பாவனாவைப்போல் நான் பாலியல் தொல்லையை அனுபவிக்க நேர்ந்து இருந்தால், செக்ஸ் வெறியர்களை கொலை செய்து இருப்பேன்” என்று நடிகை ரகுல்பிரீத் சிங் கூறினார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    தடையற தாக்க, என்னமோ ஏதோ, புத்தகம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்த ரகுல்பிரீத் சிங், கேரளாவில் நடிகை பாவனாவுக்கு நடந்த பாலியல் தொல்லைக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது:-

    “நடிகை பாவனாவுக்கு ஓடும் காரில் நடந்துள்ள பாலியல் கொடுமையை கேள்விப்பட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். இது ஒரு வெட்கம்கெட்ட செயல். பெண்மையின் புனிதத்தை போற்றி மகளிர் தினம், அன்னையர் தினம் என்றெல்லாம் நிறைய விழாக்கள் எடுக்கப்படுகின்றன. இன்னொரு புறம் பெண்களுக்கு எதிராக இதுபோன்ற பாலியல் வக்கிரமங்களும் நடந்து கொண்டு இருக்கின்றன.

    இதனால் பெண்களுக்கு மரியாதை செய்து நடத்தப்படும் விழாக்களுக்கு அர்த்தம் இல்லாமல் போய் விடுகிறது. பெண்கள் மீது பாலியல் வக்கிரமங்களை ஏவுகிறவர்கள் மனிதராகவே இருக்க முடியாது. நடிகை பாவனா இடத்தில் நான் இருந்து எனக்கு பாலியல் பலாத்கார கொடுமைகள் நடந்து இருந்தால் அந்த செக்ஸ் வெறியர்களை சும்மா விட்டு இருக்க மாட்டேன். அவர்களை கொலை செய்து இருப்பேன்.



    நான் அத்லெடிக் வீராங்கனை. உடற்பயிற்சிகள் செய்து உடம்பை கட்டுக்கோப்பாக வைத்து இருக்கிறேன். படப்பிடிப்பில் ஓய்வு கிடைத்தால் உடனே உடற்பயிற்சி கூடத்துக்கு சென்று விடுவேன். எனவே என்னிடம் யார் வாலாட்டினாலும் தப்பிக்க முடியாது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று இருந்தபோது எனது அனுமதி இல்லாமல் ஒருவர் என்னை போட்டோ எடுத்தார். அதை பார்த்ததும் எனக்கு கோபம் வந்தது. அவரிடம் சண்டை போட்டேன். அந்த இளைஞரை அடிக்கவும் செய்தேன்.

    நான் வெளியே செல்லும்போதெல்லாம் எனது அம்மா, “ஜாக்கிரதையாக போ” என்று எச்சரிக்கை செய்து வழியனுப்பி வைப்பார். அப்போது அவர் சொல்வது எனக்கு சாதாரணமாகவே தெரிந்தது. என்னுடன் காரில் டிரைவர் இருக்கிறார், ஊழியர் இருக்கிறார். எனவே என்ன நடந்து விடும் என்று நினைத்தேன். ஆனால் பாவனாவுக்கு நடந்த சம்பவத்துக்கு பிறகு யாரை நம்புவது என்று புரியவில்லை.”

    இவ்வாறு ரகுல்பிரீத் சிங் கூறினார்.
    Next Story
    ×