search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    எகிறும் ரஜினியின் 2.0 பட பட்ஜெட்?
    X

    எகிறும் ரஜினியின் 2.0 பட பட்ஜெட்?

    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் 2.0 படம் அதிக பொருட்செலவில் தயாராகி வருகிறது. படத்தின் தயாரிப்பிற்கான செலவை கீழே பார்ப்போம்.
    ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் பிரபலம் அக்ஷய் குமார் இணைந்து `2.0' படத்தில் நடித்து வருகின்றனர்.  முக்கிய கதாபாத்திரத்தில் ஏமி ஜாக்சன் நடிக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் முதலில் வெளியான `எந்திரன்' படம் மிகப்பெரிய ஹிட்டை பெற்ற நிலையில், அதன் தொடர்ச்சியாக 2-வது பாகமாக `2.0' படம் தயாராகி வருகிறது.

    `2.0' படத்திற்கு இசையப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

    லைகா புரெடெக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று  வருகிறது. இந்திய திரைப்பட உலகில் அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் படங்களில் ஒன்றாக `2.0' படம் தயாராகி வருகிறது.  லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சுமார் 450 கோடி செலவில் `2.0' படத்தை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  2017 தீபாவளி ரிலீசாக படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

    காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
    Next Story
    ×