search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    `குங்பூ யோகா படத்திற்காக இந்தியா வந்துள்ளார் ஜாக்கி சான்
    X

    `குங்பூ யோகா' படத்திற்காக இந்தியா வந்துள்ளார் ஜாக்கி சான்

    `குங்பூ யோகா' படத்தின் ப்ரமோஷன் வேலைகளுக்காக நடிகர் ஜாக்கி சான் இந்தியா வந்துள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
    `குங்பூ யோகா' படத்தின் ப்ரமோஷன் வேலைகளுக்காக நடிகர் ஜாக்கி சான் இந்தியா வந்துள்ளார். இன்று காலை 11 மணியளவில் மும்பை விமான நிலையம் வந்த அவரை சோனு சூட் விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றார்.

    அவர்கள் இருவரும் கபில் ஷர்மா நடத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாகவும் பின்னர் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாகவும்
    கூறப்படுகிறது. `குங்பூ யோகா' படத்தை சீனாவின் ஸ்டான்லி டாங் இயக்கியுள்ளார். இப்படம் பிப்ரவரி 3-ம் தேதி வெளியாக உள்ளது
    குறிப்பிடத்தக்கது.

    பஞ்சாபியான சோனு சூட், தமிழில் வெளியான ‘அனேகன்’ படத்தில் கதாநாயகியாக தோன்றிய அமிரா தஸ்துர் ஜாக்கி சானுடன் இணைந்து ‘குங்பூ யோகா’ படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×