search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    எங்கள் உணர்வுகளை கொச்சைப்படுத்த வேண்டாம் : பீட்டா ராதாராஜனுக்கு சதீஷ் கொடுத்த பதிலடி
    X

    எங்கள் உணர்வுகளை கொச்சைப்படுத்த வேண்டாம் : பீட்டா ராதாராஜனுக்கு சதீஷ் கொடுத்த பதிலடி

    பீட்டா ராதாராஜன் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களை கொச்சைப்படுத்தும் விதமாக கருத்து ஒன்றை வெளியிட்டிருந்தார். அவருக்கு பதிலடி கொடுக்கும்விதமாக காமெடி நடிகர் சதீஷ் டுவிட் செய்துள்ளார். அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
    சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு கோரி இளைஞர்களும், மாணவர்களும் ஒன்றிணைந்து அறவழி போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இவர்களின் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில், ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்கிய பீட்டா மீதும் ஆவேசமான கோஷங்களை போராட்டக்காரர்கள் எழுப்பி வருகின்றனர்.

    இந்நிலையில், சமீபத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தை கொச்சைப்படுதத்தும் வகையில் பீட்டா அமைப்பை சேர்ந்த ராதாராஜன் என்பவர், இலவச செக்ஸ் என்றால்கூட மெரீனாவில் அதிகமான இளைஞர்கள் கூடுவார்கள் என்று கூறியிருந்தார். இவருடைய இந்த கருத்துக்கு தமிழ் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இவரை கைது செய்யவேண்டும் என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் காமெடி நடிகர் சதீஷும் தனது சமூக வலைத்தளத்தில் ராதராஜனுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுமபோது, ராதாராஜன் அவர்களே உங்கள் வீட்டு பெண்கள் மெரீனா வந்தாலும் பாதுகாப்பு கொடுப்பவர்கள் எங்கள் தமிழ் இளளஞர்கள். எங்கள் உணர்வுகளை கொச்சைப்படுத்த வேண்டாம். இதுபோன்ற சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். பீட்டாவுக்கு எதிராக போராடும் எங்களை ஒரு பாட்டிக்கு எதிராக போராட வைக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.

    Next Story
    ×