search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    நடிகை விஜயலட்சுமியின் தாயார் திடீர் மரணம்
    X

    நடிகை விஜயலட்சுமியின் தாயார் திடீர் மரணம்

    நடிகை விஜயலட்சுமியின் தாயார் மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்துள்ளார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்...
    ‘சென்னை 6000028’, ‘அஞ்சாதே’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. இவர் பிரபல இயக்குனர் அகத்தியனின் மகளாவார். விஜயலட்சுமியின் தாயார் ராதா அகத்தியன் இன்று மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 68.

    அகத்தியன்-ராதா தம்பதியருக்கு கார்த்திகா, விஜயலட்சுமி, நிரஞ்சனி என மூன்று மகள்கள். ராதா அகத்தியனின் மறைவு அவரது குடும்பத்தாரை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ராதா அகத்தியனின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலும், அஞ்சலியும் செலுத்தி வருகிறார்கள்.

    ராதா அகத்தியனின் இறுதி ஊர்வலம் நாளை கோடம்பாகத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து தொடங்கும் என கூறப்படுகிறது. 
    Next Story
    ×