search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ‘சைத்தான்’ படத்தில் விஜய் ஆண்டனியின் கதாபாத்திரம் வெளியானது
    X

    ‘சைத்தான்’ படத்தில் விஜய் ஆண்டனியின் கதாபாத்திரம் வெளியானது

    ‘சைத்தான்’ படத்தில் விஜய் ஆண்டனி எந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அது என்னவென்பதை கீழே பார்ப்போம்..
    ‘பிச்சைக்காரன்’ வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சைத்தான்’. இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். அருந்ததி நாயர், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்திருக்கிறார். பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார்.

    தீபாவளி வெளியீடாக வரவுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. அந்த டிரைலரில் விஜய் ஆண்டனி வித்தியாசமான தோற்றங்களுடன் நடித்து அனைவரையும் வியக்க வைத்திருந்தார். இந்நிலையில், இப்படத்தில் விஜய் ஆண்டனி எந்தமாதிரியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பதற்கு விடை கிடைத்துள்ளது.

    அதன்படி, இப்படத்தில் விஜய் ஆண்டனி பிரதீப் என்ற பெயரில் நடித்துள்ளார். சாப்ட்வேர் என்ஜினியரான இவர் மூளைக் கோளாறால் பாதிக்கப்பட்டவராக நடித்துள்ளாராம். முழுக்க முழுக்க திரில்லர் படமாக இது உருவாகியிருக்கிறது. கண்டிப்பாக இந்த படம் ரசிகர்களை கவரும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ஆரோ சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×