search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சொன்ன நேரத்துக்கு வரமாட்டாராம் பாண்டிராஜ்
    X

    சொன்ன நேரத்துக்கு வரமாட்டாராம் பாண்டிராஜ்

    பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இது நம்ம ஆளு’. இப்படம் ரிலீஸ் குறித்து பாண்டிராஜ் கூறியதாவது...
    என்னடா இது, சிம்புவுடன் சேர்ந்து படம் எடுத்த பாண்டிராஜ் சிம்பு பாணியை கடைப்பிடிக்க ஆரம்பித்து விட்டாரா? என்று நீங்கள் நினைக்க வேண்டாம். பாண்டிராஜ் இப்படி சொன்னது, அவர் இயக்கி சிம்பு நடித்துள்ள ‘இது நம்ம ஆளு’ படத்தை பற்றித்தான். ஆம், இப்படம் இப்போது வெளிவந்துவிடும், அப்போது வெளிவந்துவிடும் என்று அறிவிப்புகள்தான் வருகிறதே தவிர, இன்னும் வெளிவந்தபாடில்லை.

    படத்தின் புரோமோஷனுக்காக சமீபத்தில் டி.ஆர். பாடிய ஒரு பாடலுக்கு சிம்பு குத்தாட்டம் போட்டதை படமாக்கிவிட்டு, தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. படம் எப்போது வெளிவரும் என்று எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் பாண்டிராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘நாங்கள் சொன்ன நேரத்துக்கு வரமாட்டோம், நெனச்ச நேரத்துக்குதான் வருவோம்’ என்று குறிப்பிட்டு அத்துடன் படத்தின் டீசர் ஒன்றையும் இணைத்துள்ளார். அதில் சீக்கிரமே வந்து விடுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளது. எது எப்படியோ, படம் சீக்கிரமாக வெளிவர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

    இப்படத்தில் சிம்புவுடன் நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். சிம்புவின் தம்பி குறளரசன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
    Next Story
    ×