search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சவாலுக்கு சவால் - பாரதிராஜாவிடம் இளையராஜா சபதம்
    X

    சவாலுக்கு சவால் - பாரதிராஜாவிடம் இளையராஜா சபதம்

    இசை அமைப்பாளராக வர முடியுமா என்பது குறித்து பாரதிராஜாவுக்கும், இளையராஜாவுக்கும் இடையே வேடிக்கையாக எழுந்த வாக்குவாதம், ஒரு சபதத்தில் முடிந்தது.
    இசை அமைப்பாளராக வர முடியுமா என்பது குறித்து பாரதிராஜாவுக்கும், இளையராஜாவுக்கும் இடையே வேடிக்கையாக எழுந்த வாக்குவாதம், ஒரு சபதத்தில் முடிந்தது.

    பாரதிராஜா உதவி இயக்குனராகவும், இளையராஜா ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாளராகவும் பணியாற்றி வந்த காலக்கட்டத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    "தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் (என்.எப்.டி.சி.) உதவியோடு படம் எடுக்க `மயில்' என்ற கதையை பாரதிராஜா உருவாக்கினார். அதற்கான விண்ணப்ப மனுவில், திரைக்கதை, டைரக்ஷன் பாரதிராஜா என்றும், கேமரா நிவாஸ் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இசை அமைப்பாளராக என் பெயரையும் குறிப்பிட்டு விண்ணப்பத்தைக் கொடுத்து விட்டார்.

    நிதி உதவி எப்படி யும் கிடைத்துவிடும், படம் எடுத்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால் இழுத்துக்கொண்டே போயிற்று.

    பாரதிக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று, அவர் தாயார் விரும்பினார்.

    விரைவில், சொந்தத்திலேயே பெண் பார்த்து முடிவு செய்தார்கள். மணமகள் பெயர் சந்திரலீலா.

    கல்யாண நாள் குறித்தார்கள். திருமண வேலைகள் ஆரம்பம் ஆயின. அப்போது அவினாசி மணி இயக்கத்தில் "தலைப்பிரசவம்'' என்ற படத்தை, கே.ஆர்.ஜி. தயாரித்துக் கொண்டிருந்தார். கே.ஆர்.ஜி.க்கு பாரதி மீது ரொம்பப் பிரியம். அது, அடுத்த படத்தை பாரதிக்கு கொடுக்கலாம் என்கிற அளவுக்கு வளர்ந்தது. அவரே கல்யாண விஷயங்களில் கலந்து கொண்டு நிறைய உதவி செய்தார்.

    திருமணம் ஆன பிறகு, காரணீஸ்வரர் கோவில் தெருவில் ஒரு வீடு பார்த்துக்கொண்டு, பாரதிராஜா குடியேறினார். பாரதிராஜாவின் அம்மா கொஞ்சநாள் வந்து இருந்துவிட்டுப் போனார்கள்.

    திருமணத்துக்குப்பின், நானும், பாரதியும் சந்திப்பது குறைந்து போயிற்று. அதைப் புதுப்பித்துக் கொள்ள நாங்கள் எப்போதாவது கடற்கரைக்கோ, டிபன் சாப்பிட லஸ் கார்னருக்கோ போய் வருவதுண்டு.

    அப்படி போகும்போது ஒருநாள், புதிய போட்டி ஒன்றை பாரதிராஜா தொடங்கினார்.

    நான் எப்போதும் ஜி.கே.வி., குமார், விஜயபாஸ்கர், ராஜன், நாகேந்திரா, ராகவலு, உபேந்திரகுமார், தேவராஜன், ஏ.டி.உமர், பாபுராஜ், தட்சிணாமூர்த்தி ஆகியோரிடம் கிட்டாரோ, காம்போவோ வாசிக்கப்போய் வருவதைப் பார்த்த பாரதிராஜா, அதுபற்றி குறிப்பிட்டார். சிலர் வாழ்நாள் முழுவதும் உதவி டைரக்டராகவே காலம் கழித்துவிட்டு, அறுபது வயதுக்கு மேலும் வேலை செய்வதை சுட்டிக்காட்டினார்.

    பிறகு, "டேய்! நீ எல்லாம் மிïசிக் டைரக்டர் ஆக முடியாது போலிருக்கே! இப்படி கிட்டார் வாசிச்சுக்கிட்டே இருக்கணும்னு விதியோ என்னமோ! ஆனா ஒண்ணு! நீ மிïசிக் டைரக்டரா எப்போது ஆகமுடியும் தெரியுமா? நானெல்லாம் ஒரு இருபத்தஞ்சு முப்பது படம் டைரக்ட் பண்ணி, எம்.ஜி.ஆர்., சிவாஜி மாதிரி பேர் எடுத்துப் புகழோடு இருக்கிறபோது, `சரி, போனாப்போகுது, நம்ம இவனுக்கு ஒரு படம் கொடுப்போம் என்று கொடுத்தாத்தான் நீ மிïசிக் டைரக்டர் ஆக முடியும்!'' என்றார்.

    எனக்குத்தான் மிïசிக் டைரக்டர் ஆகவேண்டும் என்ற ஐடியாவே இல்லையே! இசையைக் கற்றுக்கொண்டால் போதும் என்று இருக்கிறபோது பாரதி ஏன் இப்படி பேசுகிறார்! நாமும் ஒரு உதார் விடுவோம் என்று நினைத்தேன்.

    "பாரதி! நீ பெரிய டைரக்டர் ஆகு, அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை. ஆனா, உன் படத்துக்கு நான் மிïசிக் பண்ணணும்னா, உன்னை புட்டண்ணாவிடம் அனுப்பி அசிஸ்டெண்ட் டைரக்டரா சேர்த்து விட்டாரே ஜி.கே.வி, அவர் உன் படத்துக்கு மிïசிக் பண்ணியிருக்க வேண்டும். அதற்கப்புறம் அவர் என்னிடம், `டேய், ராஜா! போனாப் போகுது. பாரதி படத்துக்கு மிïசிக் பண்ணுடா' என்று சொன்னாத்தான் நான் மிïசிக் பண்ணுவேன். இல்லேன்னா பண்ணவே மாட் டேன்'' என்று சபதம் செய்தேன்.

    பெண்டியாலா சீனிவாசன் என்ற தெலுங்கு இசை அமைப்பாளர் இசை அமைக்கும் தமிழ்ப்படமான "பட்டாம்பூச்சி'' படத்துக்கு, உதவி இசை அமைப்பாளராக கோவர்த்தன் பணியாற்றினார். இவர் எம்.எஸ்.வி. அவர்களிடம் உதவி இசை அமைப்பாளராகப் பணியாற்றியவர்.

    இந்தப் படத்திற்கு கதை - வசனம்: ஏ.எஸ்.பிரகாசம். கமலஹாசன் ஹீரோ. ஜெயசித்ரா கதாநாயகி.

    இந்தப் படத்திற்கு கோம்போ ஆர்கன் வாசிக்க கோவர்த்தன் என்னை அழைத்தார். நானும் சம்மதித்து, வாசித்தேன். என் வாசிப்பைப் பார்த்துவிட்டு எனக்கு நிறைய சான்ஸ் கொடுத்து, பல இடங்களில் வாசிக்க வைத்தார்.

    ஒருநாள் சாப்பாடு இடைவேளை முடிந்து நான் வேலை தொடங்குவதற்கு முன், அவருக்கு இசையமைக்க ஒரு படம் வந்திருப்பதாக சொன்னார். "நíயும், நானும் சேர்ந்து இசை அமைக்கலாமா? பெயரை `கோவர்த்தன் - ராஜா' என்று போட்டுக்கொள்ளலாம்'' என்றார்.

    "சரி'' என்று சொல்லிவிட்டேன்.

    Next Story
    ×