search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் சொந்தக்குரலில் பாடினார்
    X

    கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் சொந்தக்குரலில் பாடினார்

    கன்னட பட உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கிய ராஜ்குமார், பிற்காலத்தில் சொந்தக் குரலில் பாடினார். இதற்கு வழி வகுத்தவர் இளையராஜா.
    கன்னட பட உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கிய ராஜ்குமார், பிற்காலத்தில் சொந்தக் குரலில் பாடினார். இதற்கு வழி வகுத்தவர்
    இளையராஜா.இசை அமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாளராகப் பணியாற்றி வந்த காலக்கட்டத்தில் இந்த நìகழ்ச்சி நடந்தது.

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    "என் மானசீக குருவான சி.ஆர்.சுப்பராமனை வணங்கும் அதே நேரத்தில், அவர் குடியால் தன் உயிரை இழந்தது எனக்குப் பிடிக்கவில்லை. சங்கீதத்திற்காக உயிரைக் கொடுக்கலாம். ஆனால் குடிக்காக உயிரைக் கொடுக்கலாமா?

    சினிமாவில் பல இசைக் கலைஞர்கள் குடியால் கெட்டுப் போனார்கள். இசையைத் தொழிலாகக் கொண்ட ராஜரத்தினம் பிள்ளையில் இருந்து, கரகாட்டத்திற்கு வாசிக்கும் நையாண்டி மேளக்காரர் வரை, குடிப்பழக்கம் இல்லாத கலைஞர்களைக் காண்பது அரிது.

    சினிமாவில் இருக்கும் அத்தனை தொழில் நுட்பக் கலைஞர்களும் கூட இதற்கு விதி விலக்கு அல்ல. பாலுவின் கச்சேரிக்குப் போகும்போது, அதில் வாசிக்கும் அத்தனை பேரும் குடிப்பார்கள். மெதுவாக என்னையும் அதில் சேர்த்துக் கொண்டார்கள். வெறென்ன செய்வது? சேர்ந்து

    கொண்டேன்!வெளிïருக்கு போகிறோம். நாளெல்லாம் சும்மா இருந்து விட்டு, மாலையோ, இரவோதான் கச்சேரி. அது எப்போது முடியுமோ? அதற்கப்புறம் சாப்பிட்டு விட்டுப்படுத்து, அடுத்த நாள் ரெயிலைப் பிடித்து, பகலெல்லாம் காய்ந்து கருவாடாகித் திரும்புவோம்.

    இதில் அவர்களுக்கு இருக்கும் ஒரே சந்தோஷம் இந்தக் குடிதான். அவர்களுடன் அவ்வப்போது சேர்ந்து கொள்வேனே தவிர, அவர்களைப்போல் எப்போதும் அதிலேயே கிடப்பதில்லை.

    கச்சேரி முடிந்த பிறகுதான், எப்போதாவது அவர்களுடன் சேர்வேன். குடித்தால், ஆர்மோனியத்தை தொடமாட்டேன்.

    ராஜ்குமார் நடித்த "பங்காரத மனுஷியா'' என்ற படத்தின் பாடல் கம்போசிங்கிற்காக, ஜி.கே.வி.யுடன் பட அதிபர் கே.சி.என்.கவுடாவின் ஊரான தொட்டுபெள்ளாப்பூர் என்ற ஊருக்கு போயிருந்தோம். அங்கே, டிராவலர்ஸ் பங்களாவில் ரூம் புக் செய்திருந்தார்கள். அங்கே தங்கி பாடல் கம்போஸ் செய்தோம்.

    காலையில் எழுந்து நந்திஹில்ஸ் ரோட்டில் நடந்து விட்டு, 7 மணிக்கு கம்போசிங் தொடங்குவோம். 8ஷி - 9 மணிக்கு டிபன் சாப்பிட்டு விட்டு மறுபடியும் தொடங்க, தயாரிப்பாளரும், டைரக்டரும் வந்து கேட்பார்கள்.

    பிறகு மதிய உணவு. ஓய்வு. மாலை 4 மணிக்கு டீயுடன் மீண்டும் கம்போசிங் தொடங்கி, இரவு 9 மணி வரை தொடரும். அப்புறம், ஜீ.கே.வி.யாருடனாவது விஸ்கி, கோழி, டிபன்...

    இது தொடர்ச்சியாக ஒரு வாரம் நடந்தது.

    உதயசங்கர் பாடல் எழுதினார்.

    சமயத்தில், பட அதிபர் தன் நண்பர்களுடன் வந்து விடுவார். ஜி.கே.வி.யிடம் ட்ïனை வாசிக்கச் சொல்லி கேட்பார்.

    வாசிக்கத் தொடங்குவோம். ஜி.கே.வி.க்கு இடையில் மறந்து போகும். இடையில் நிறுத்தி, "எப்படி அது?'' என்று என்னிடம் கேட்டுவிட்டு, மறுபடியும் தொடங்குவார்.

    இப்படி இடையில் நிறுத்தி, மறுபடியும் பாட, அது மொத்தமாக என்ன ட்ïன் என்று தயாரிப்பாளர் கவுடாவுக்கு புரியாது. எனவே, "ராஜா! நீயே பாடப்பா! ஜி.கே.வி.யை விட நீ நல்லாப் பாடறே'' என்பார்.

    ஜி.கே.வி. இடையில் நிறுத்தி, நிறுத்திப் பாடுவதால் எனக்கு இந்த சர்ட்டிபிகேட். ஜி.கே.வி.யும், "டேய்! நீயே பாடு!'' என்பார்.

    நான் பாடுவேன்.

    கடைசி நாள் அன்று, கம்போசிங் முடிந்ததும், ஜி.கே.வி. விஸ்கி பாட்டிலை எடுத்து, தபேலா கன்னையாவை பார்த்து, "டேய் கண்ணா! இந்தா!'' என்று ஒரு கிளாசில் ஊற்றிக் கொடுத்தார்.

    அதோடு, உதய சங்கரும் இதில் கலந்து கொண்டார்.

    "டேய், ராஜா! நீயும் வா!'' என்று ஜி.கே.வி. அழைத்தார்.

    "அண்ணே, வேணாம்!'' என்றேன்.

    "அட, பரவாயில்லை! வாடா!'' என்றார்.

    "இல்லேண்ணா! திடீர் என்று புரொடிïசர் வந்து ட்ïனை கேட்டால், நல்லா இருக்காதுண்ணே!''

    "அட, ராத்திரி 9 மணி ஆச்சு. இனிமே யாருடா வரப்போறா?''

    "நான் குடிச்சா கிட்டாரை தொடமாட்டேன். என்னை கிட்டார் வாசிக்கும்படி சொல்லக்கூடாது!'' என்றேன்.

    "சரி வா!'' என்றார். கலந்து கொண்டேன்.

    சற்று நேரத்தில், படத்தயாரிப்பாளரும், ராஜ்குமாரின் சகோதரர் வரதப்பாவும் வந்துவிட்டார்கள்! `பாடலை கேட்கவேண்டும்'

    என்றார்கள்!ஜி.கே.வி.யும், கன்னையாவும் வாத்தியங்களை எடுத்து வைத்தார்கள். ஜி.கே.வி. பாடத்தொடங்கினார்.

    "ஏனு ராஜா! நீனு ஏறு மாடுத்தியா? ஹாடு!'' என்று என்னை பார்த்து சொன்னார், படத்தயாரிப்பாளர்.

    ஜி.கே.வி. என்னைப் பார்த்தார். நான் `மாட்டேன்' என்று தலையை ஆட்டினேன்.

    புரொடிïசரைப் பார்த்து, "வேண்டாம். அவனை வற்புறுத்த வேண்டாம்'' என்று ஜி.கே.வி. சொன்னார்.

    நான் அவரிடம் வேலை செய்பவன். வாசிக்கச் சொல்லி என்னை அவர் கட்டாயப்படுத்தி இருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில்லை.

    மற்றவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுக்கும் ஜி.கே.வி.யின் பண்பு, என்னைக் கவர்ந்தது.

    கன்னடப்படங் களில் ராஜ்குமாருக்கு பொதுவாக பி.பி.சீனிவாஸ்தான் பின்னணியில் பாடி வந்தார்.

    "சம்பத்திக்கே சவாலு'' என்ற ராஜ்குமாரின் படத்தில், அவர் முதல் காட்சியிலேயே எருமை மாட்டின் மீது உட்கார்ந்தபடியே பாடிக்கொண்டு வந்து அறிமுகம் ஆவார்.

    உதயசங்கர், பாடலை நன்றாக எழுதிவிட்டார். மிïசிக் எல்லாம் ரெடி.

    நான் ஜி.கே.வி.யிடம், "அண்ணா! ராஜ்குமார் பாடுவாரா?'' என்று கேட்டேன்.

    "என்னது! முத்துராஜ் (ராஜ்குமார்) பாடுவானா என்றா கேட்கிறாய்? அவன் நாடகத்தில்  பாடி நடித்து, சினிமாவுக்கு வந்தவன்டா!'' என்றார், ஜி.கே.வி.

    "அப்படின்னா, அவரே இந்தப்பாட்டை ஏன் பாடக்கூடாது?''

    "ஏண்டா?''

    "பாட்டு, பயங்கர குஷியோடு ரசிகர்கள் கைதட்டி ரசிக்கிற மாதிரி இருக்கு. பி.பி.சீனிவாஸ் பாடினா அதுவும் நல்லாத்தான் இருக்கும். ஆனா, அதிலே இந்த `பஞ்ச்' இருக்காது'' என்றேன்.

    ஜி.கே.வி. நேரே ராஜ்குமாரிடம் பேச, அவர் பாடுவதற்கு ஒப்புக்கொண்டார்.

    பிறகு பாடல் பதிவுக்கு ஏற்பாடு நடந்தது. ராஜ்குமார் பிரமாதமாகப் பாடிவிட்டார். அந்தப் படத்தில் வரும் எல்லாப் பாடல்களையும் அவரே பாடினார்.

    அவர் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. அதில் இருந்து, அவர் நடிக்கும் எல்லாப் படங்களிலும், இசை யாராக இருந்தாலும் அவரேதான் கடைசி வரை பாடினார். அதற்கு அடிபோட்டவன் நானாக இருந்தேன் என்பது, வரலாற்றில் முக்கிய விஷயம்.

    இதுகுறித்து, வழக்கமாக ராஜ்குமாருக்கு பாடி வந்த பி.பி.சீனிவாஸ் என்னிடம் வருத்தம் கொள்ளவில்லை. எப்போதும் போலவே என்னிடம் அன்பாகப் பழகினார்.

    Next Story
    ×