search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    • புதிய வெர்ஷன் பலவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும்.
    • இந்த கார் குளோபல் சி பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது.

    மாருதி சுசுகி நிறுவனத்தின் மிட்-சைஸ் எஸ்.யு.வி. கிராண்ட் விட்டாரா மாடல் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்ட டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடலும் அதிக யூனிட்கள் விற்பனையாகி வருகிறது.

    மிட்-சைஸ் எஸ்.யு.வி.-யை தொடர்ந்து மாருதி நிறுவனம் 7 சீட்டர் பிரிவில் கவனம் செலுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், விரைவில் புதிய 7 சீட்டர் கார்களை மாருதி சுசுகி அறிமுகம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக வெளியான தகவல்களில் மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மாடலின் 7 சீட்டர் வெர்ஷன் உருவாக்கப்படுவதாக தெரிகிறது.

    மேலும், இந்த கார் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா 7 சீட்டர் வெர்ஷனை தொடர்ந்து டொயோட்டா பிரான்டிங்கில் ஹைரைடர் 7 சீட்டர் மாடல் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய மூன்றடுக்கு இருக்கை கொண்ட எஸ்.யு.வி. மாடல்கள் குளோபல் சி பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது.

    இவற்றில் 1.5 லிட்டர் K15C பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் ஸ்டிராங் ஹைப்ரிட் பெட்ரோல் என்ஜின்கள் வழங்கப்படலாம். இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் மற்றும் e-CVT கியர்பாக்ஸ் உள்ளிட்டவை ஆப்ஷனாக வழங்கப்படலாம்.

    • டூயல் டோன் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    • எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட சன்ரூஃப் உள்ளது.

    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது i20 ஹேச்பேக் காரின் புதிய ஸ்போர்ட்ஸ் (O) வேரியன்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. ஸ்போர்ட்ஸ் ட்ரிமை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் ஹூண்டாய் i20 ஸ்போர்ட்ஸ் (O) மாடலின் விலை ரூ. 8 லட்சத்து 73 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய i20 வேரியன்ட் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. இந்த கார் சிங்கில் மற்றும் டூயல் டோன் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் டூயல் டோன் விலை ரூ. 8 லட்சத்து 88 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

     


    இது வழக்கமான ஸ்போர்ட்ஸ் வேரியன்டை விட ரூ. 35 ஆயிரம் வரை அதிகம் ஆகும். கூடுதல் விலைக்கு இந்த காரில் வயர்லெஸ் சார்ஜர், கதவின் ஆரம்-ரெஸ்ட்-இல் லெதர் ஃபினிஷ், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட சன்ரூஃப் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹூண்டாய் i20 மாடலில் 1.2 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் iVT யூனிட் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 82 ஹெச்.பி. பவர், 115 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    புதிய ஸ்போர்ட்ஸ் (O) வேரியன்ட் சேர்த்து i20 மாடல் இரா, மேக்னா, ஸ்போர்ட்ஸ், ஆஸ்டா மற்றும் ஆஸ்டா (O) என ஐந்து வேரியன்ட்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 7 லட்சத்து 04 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 11 லட்சத்து 21 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

    • புதிய எலெக்ட்ரிக் வாகனத்தை வோக்ஸ்வேகன் அறிமுகம் செய்யலாம்.
    • வோக்ஸ்வேகன் இந்தியா தலைமை செயல் அதிகாரி பியூஷ் அரோரா பதில் அளித்தார்.

    வோக்ஸ்வேகன் குழுமம் இந்திய சந்தையில் என்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக வோக்ஸ்வேகன் நிறுவனம் முலீடுகளை ஈர்க்க திட்டமிட்டு வருகிறது. இந்த வகையில், இந்திய சந்தைக்கு ஏற்ற வகையில் முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் வாகனத்தை வோக்ஸ்வேகன் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கலாம்.

    இந்த தசாப்தத்தின் இரண்டாவது பாதியில் வோக்ஸ்வேகன் நிறுவனம் என்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. இது குறித்து பாரத் மொபிலிட்டி நிகழ்வில் தனியார் செய்தி நிறுவனம் எழுப்பிய கேள்விக்கு வோக்ஸ்வேகன் இந்தியா நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான பியூஷ் அரோரா பதில் அளித்தார்.

     

    கோப்புப்படம் 

    கோப்புப்படம் 


    அப்போது பேசிய அவர், "இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன யுக்தி எங்களது ஐ.சி. என்ஜின் மாடல்களுக்கான யுக்திகளை விட அதிக வித்தியாசமாக இருந்துவிடாது. இதனால், இந்திய சந்தைக்கு ஏற்றவகையிலும், சர்வதேச வாகனங்களை அறிமுகம் செய்வதில் கவனம் செலுத்துவோம். புதிய எலெக்ட்ரிக் வாகனம் என்ட்ரி லெவல் பிரிவில் நிலைநிறுத்தப்படும்."

    "எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்வதற்காக வோக்ஸ்வேகன் குழுமம் சார்பில் பல மில்லியன் யூரோக்கள் அடங்கிய பெரும் தொகை முதீலடு செய்யப்படுகிறது. இந்த முதலீட்டை நியாயப்படுத்தும் வகையில், புதிய வாகனங்களை இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வது பற்றி திட்டமிடுவோம்," என்று தெரிவித்தார்.

    • இந்த காருடன் ஏராளமான ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
    • இந்த காரில் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் தனது AMG GLE 53 கூப் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய AMG GLE 53 கூப் மாடலின் விலை ரூ. 1 கோடியே 85 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது தற்போது விற்பனை செய்யப்படும் AMG GLE 53 கூப் மாடலை விட ரூ. 14 லட்சம் அதிகம் ஆகும்.

    பென்ஸ் AMG GLE 53 கூப் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் கேபினில் புதிய தொழில்நுட்பம், அதிக திறன் கொண்ட என்ஜின் மற்றும் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக வழங்கப்பட்டுள்ளன. இதில் வழங்கப்படும் ஏராளாமான இதர ஆப்ஷன்களை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் பட்சத்தில் இந்த காரின் விலை ரூ. 2.2 கோடி, எக்ஸ்-ஷோரூம் வரை அதிகரிக்கும் என மெர்சிடிஸ் இந்தியா தெரிவித்துள்ளது.

     


    தோற்றத்தில் புதிய கார் அதிக மாற்றங்கள் இன்றி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் கிரில் வடிவம் சற்றே மாற்றப்பட்டு, ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லைட்களில் புதிய லைட்டிங் வழங்கப்பட்டுள்ளது. பம்ப்பர்களில் சிறு மாற்றங்கள் செய்யப்படு, புதிய டிசைன் கொண்ட அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இதன் கேபின் பகுதியில் இரண்டு டிஸ்ப்ளேக்கள் உள்ளன. இன்டீரியர் முழுக்க மென்மையான அனுபவத்தை வழங்கும் பொருட்களால் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் முற்றிலும் புதிய MBUX இயங்குதளம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டச் சென்சிடிவ் கன்ட்ரோல்கள் கொண்ட புதிய AMG ல்டீரிங், கப் ஹோல்டர்களில் டெம்பரேச்சர் கன்ட்ரோல், 100 வாட் டைப் சி சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஷன், பர்மெஸ்டர் 3D சவுண்ட் சிஸ்டம், ஹெட்-அப் டிஸ்ப்ளே, ஹீடெட் மற்றும் வென்டிலேடெட் முன்புற இருக்கைகள், பானரோமிக் சன்ரூஃப், வயர்லெஸ் போன் சார்ஜர், 360 டிகிரி கேமரா, ஆக்டிவ் பிரேக் அசிஸ்ட், பிலைன்ட் ஸ்பாட் மானிட்டரிங் போன்ற வசதிகள் உள்ளன.

    புதிய மெர்சிடிஸ் பென்ஸ் AMG GLE 53 கூப் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 3.0 லிட்டர் 6 சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது தற்போது 40 நியூட்டன் மீட்டர் வரை அதிக டார்க் வெளிப்படுத்தும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்த என்ஜின் 429 ஹெச்.பி. பவர் மற்றும் 600 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இந்த என்ஜினுடன் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த யூனிட் 20 ஹெச்.பி. பவர், 200 நியூட்டன் மீட்டர் டார்க் வரை இழுவிசையை அதிகப்படுத்துகிறது. இத்துடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 5 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

    இந்திய சந்தையில் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் AMG GLE 53 கூப் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஆடி RS Q8 மற்றும் போர்ஷே கேயென் கூப் பேஸ் வேரியன்ட் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • புதிய ரேன்ஜ் ரோவர் எவோக் மாடல் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    • இந்த காரில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    ஜாகுவார் லேன்ட் ரோவர் நிறுவனம் இந்திய சந்தையில் தனது ரேன்ஜ் ரோவர் எவோக் மாடலை அப்டேட் செய்திருக்கிறது. புதிய 2024 ரேன்ஜ் ரோவர் எவோக் மாடலின் விலை ரூ. 67 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் 2024 எவோக் மாடல் ஐந்துவிதமான நிறங்களில் கிடைக்கிறது.

    டிசைனை பொருத்தவரை 2024 ரேன்ஜ் ரோவர் எவோக் மாடல் கூப் போன்ற தோற்றம் கொண்டிருக்கிறது. இதில் ஃபுளோட்டிங் ரூஃப், புது டிசைன் கொண்ட முன்புற கிரில், புதிய எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், டி.ஆர்.எல்.கள், சிவப்பு நிற பிரேக் கேலிப்பர்கள், டைமன்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. இந்த கார் காரிந்தியன் பிரான்ஸ் மற்றும் டிரைபெகா புளூ என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது.

     


    உள்புறம் 11.4 இன்ச் கர்வ்டு கிளாஸ் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், பிவி ப்ரோ தொழில்நுட்பம், கிளைமேட் கன்ட்ரோல், ஹீடெட் மற்றும் வென்டிலேஷன் வசதி கொண்ட முன்புற இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜர், கேபின் ஏர் பியூரிஃபயர், 3டி சரவுன்ட் வியூ உள்ளது.

    புதிய ரேன்ஜ் ரோவர் எவோக் மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இவை முறையே 247 ஹெச்.பி. பவர், 365 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 201 ஹெச்.பி. பவர், 430 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கின்றன.

    • இந்த கார் J4U எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்படுகிறது.
    • முழுமையான எலெக்ட்ரிக் மாடலாக இருக்கும் என தகவல்.

    அடுத்த தலைமுறை ஜீப் காம்பஸ் எஸ்.யு.வி. மாடல் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாடல் 2026-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. இந்த மாடல் J4U எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்படுகிறது.

    ஜீப் பிரான்டின் தாய் நிறுவனமான ஸ்டெலான்டிஸ் STLA M பிளாட்ஃபார்ம்-ஐ தழுவி புதிய காம்பஸ் மாடல் உருவாக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த பிளாட்ஃபார்ம் ஐ.சி. என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் பவர்டிரெயின் என பலவிதங்களில் பயன்படுத்தக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஜீப் காம்பஸ் மாடல் முழுமையான எலெக்ட்ரிக் மாடலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

     

    கோப்புப்படம் 

    கோப்புப்படம் 


    கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்ட STLA மீடியம் பிளாட்ஃபார்ம் எலெக்ட்ரிக் மாடலை கருத்தில் கொண்டே வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. எனினும், இதில் பெட்ரோல், டீசல் பவர்டிரெயின் ஆப்ஷன்களுக்கு ஏற்ற வகையிலும் பயன்படுத்தப்படலாம் என தெரிகிறது. இது முன்புறம் மற்றும் 4-வீல் டிரைவ் ஆப்ஷன்களை கொண்டிருக்கும்.

    இந்த காரில் அதிகபட்சம் 98 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் என்றும் இதன் பெர்ஃபார்மன்ஸ் பேக் முழு சார்ஜ் செய்தால் 700 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என WLTP சான்று பெற்று இருக்கிறது.

    • வாகனம் அறிமுகம் செய்யப்படுவது இதுவே முதல்முறை.
    • எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், 3 சக்கர ஆட்டோ ரிக்ஷா வடிவில் பயன்படுத்தலாம்.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்டார்ப்-அப் பிரான்டு சர்ஜ் தனது முதல் வாகனத்தை அறிமுகம் செய்தது. S32 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் வாகனம் புதுவித பயன்பாட்டை கொண்டிருக்கிறது. இது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் மூன்று சக்கரங்களை கொண்ட பயணிகள் அல்லது சரக்கு வாகனம் ஆகும்.

    சொந்தமாக தொழில் செய்ய விரும்புவோரை குறிவைத்து இந்த வாகனம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் இது போன்ற வாகனம் அறிமுகம் செய்யப்படுவது இதுவே முதல்முறை ஆகும். ஹீரோ சர்ஜ் S32 மாடலை பயனர்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் 3 சக்கர ஆட்டோ ரிக்ஷா வடிவில் பயன்படுத்த செய்கிறது.

     


    கான்செப்ட் வடிவில் உருவாக்கப்பட்டு இருக்கும் ஹீரோ சர்ஜ் S32 மாடலை வாங்கும் போது பயனர்கள் ஒரே கட்டணத்தில் இரண்டு வாகனங்களை பெற முடியும். ஹீரோ சர்ஜ் S32 கொண்டு பயனர்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் 3 சக்கர வாகனமாகவும் பயன்படுத்தலாம். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் 3 சக்கர வாகனமாக மாற்ற மூன்று நிமிடங்களே ஆகும்.

    சர்ஜ் S32 மாடல் தோற்றத்தில் 3 சக்கர எலெக்ட்ரிக் கார்கோ வாகனம் அல்லது ரிக்ஷா போன்றே காட்சியளிக்கிறது. இதன் முன்புற கேபினில் வின்ட்-ஸ்கிரீன், ஹெட்லைட்கள், டர்ன் இன்டிகேட்டர்கள் வழங்கப்பட்டு உள்ளன. பட்டனை க்ளிக் செய்யும் போது முன்புற வின்ட்ஷீல்டு பகுதி மேலே உயர்ந்து, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியே வரும்.

     


    3 சக்கர வாகனம் மற்றும் ஸ்கூட்டர் இடையே பேட்டரி மற்றும் பவர்டிரெயின் வழங்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் முறையே 10 கிலோவாட் மற்றும் 3 கிலோவாட் மோட்டார் வழங்கப்படுகிறது. 3 சக்கர வாகனத்தில் 11 கிலோவாட் ஹவர் பேட்டரியும், எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.5 கிலோவாட் ஹவர் பேட்டரியும் வழங்கப்படுகிறது.

    இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. மூன்று சக்கர எலெக்ட்ரிக் வாகனம் 500 கிலோ எடையை சுமக்கும் திறன் கொண்டிருக்கிறது.



    • மக்கான் டர்போ மாடலுக்கான முன்பதிவு துவங்கியது.
    • எலெக்ட்ரிக் வடிவில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும்.

    போர்ஷே நிறுவனம் தனது முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் கார் - மக்கான் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய போர்ஷே மக்கான் EV இரண்டு 4-வீல் டிரைவ் வேரியன்ட்களில் கிடைக்கிறது. ஒன்று 408 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் மக்கான் 4, மற்றொன்று 639 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் மக்கான் டர்போ ஆகும்.

    புதிய போர்ஷே மக்கான் டர்போ மாடலுக்கான முன்பதிவு இந்திய சந்தையில் துவங்கியுள்ளது. இதன் விலை ரூ. 1 கோடியே 65 லட்சம் ஆகும். வினியோகம் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் துவங்கும் என்று தெரிகிறது.


     

    புதிய மக்கான் 4 மாடலின் விலை மற்றும் இதர விவரங்களை போர்ஷே இதுவரை அறிவிக்கவில்லை. அடுத்த ஆண்டு இறுதி வரை மக்கான் எலெக்ட்ரிக் மாடல் அதன் பெட்ரோல் வெர்ஷனுடன் விற்பனை செய்யப்படும். அதன்பிறகு இந்த சீரிஸ் முழுமையாக எலெக்ட்ரிக் வடிவில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும்.

    எலெக்ட்ரிக் திறன் கொண்ட மக்கான் மாடல் தற்போதைய பெட்ரோல் வெர்ஷனுடன் ஒப்பிடும் போது 103mm நீளமாகவும், 15mm அகலமாகவும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் ஆடி Q6 இ-டிரான் மாடலுடன் உருவாக்கப்பட்டது. இரு கார்களும் பிரீமியம் பிளாட்ஃபார்ம் எலெக்ட்ரிக் ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்டுள்ளன.


     

    வெளிப்புறத்தில் புதிய மக்கான் எலெக்ட்ரிக் மாடலின் ஸ்டைலிங் ஒரிஜினல் மக்கான் மாடலை தழுவியும், டிசைனிங் அம்சங்கள் டேகேன் மாடலை தழுவியும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் ஹெட்லைட்கள் செவ்வக வடிவிலும், பின்புறம் ராப்-அரவுண்ட் எல்.இ.டி. லைட் பார் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய போர்ஷே மக்கான் எலெக்ட்ரிக் மாடல்களில் டூயல் பெர்மனன்ட் சின்க்ரோனஸ் மோட்டார்களும், ஒவ்வொரு ஆக்சில்களிலும் சிங்கில் ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை மக்கான் 4 மாடலில் 408 ஹெச்.பி. பவர், 650 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

     


    இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 5.2 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 220 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. மக்கான் டர்போ மாடலில் இவை 639 ஹெச்.பி. பவர், 1130 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. இது மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.3 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 260 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

    மக்கான் எலெக்ட்ரிக் கார்களில் உள்ள 95 கிலோவாட் ஹவர் பேட்டரியை 800 வோல்ட் டி.சி. சிஸ்டம் மூலம் 270 கிலோவாட் மூலம் சார்ஜ் செய்யலாம். இவ்வாறு செய்யும் போது 10-இல் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 21 நிமிடங்களே ஆகும். இத்துன் பிரேக்கிங் மற்றும் காரின் வேகத்தை குறைக்கும் போது 240 கிலோவாட் வரையிலான திறன் பெற முடியும்.

    போர்ஷே மக்கான் 4 மாடல் முழு சார்ஜ் செய்தால் 613 கிலோமீட்டர்களும், மக்கான் டர்போ மாடல் 591 கிலோமீட்டர்களும் செல்லும் என WLTP சான்று பெற்றுள்ளன.

    • எம்.பி.வி. மாடல்கள் வரும் ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்படலாம்.
    • மாருதி சுசுகி YDB காம்பேக்ட் எம்.பி.வி. மாடல் ஆகும்.

    மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனம் தயர்போது எர்டிகா மற்றும் XL6 என இரண்டு எம்.பி.வி. கார்களை விற்பனை செய்து வருகிறது. இதில் XL6 மாடல் ஆறு பேர் பயணம் செய்யக்கூடிய எம்.பி.வி. மாடல் ஆகும்.

    7 சீட்டர் மாடல்கள் எண்ணிக்கையை விரிவுப்படுத்தும் வகையில், மாருதி சுசுகி நிறுவனம் இரண்டு புதிய மாடல்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. புதிய எம்.பி.வி. மாடல்கள் வரும் ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

     


    இரண்டு கார்களில் ஒன்று மாருதி சுசுகி YDB காம்பேக்ட் எம்.பி.வி. மாடல் ஆகும். இது எர்டிகா மாடலின் கீழ் நிலைநிறுத்தப்பட இருக்கிறது. இந்த கார் தற்போது சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் சுசுகி ஸ்பேசியா மாடலை தழுவி உருவாக்கப்படுகிறது. இந்த கார் அளவில் 4 மீட்டர் நீளமாகவும், சற்றே வித்தியாசமான டிசைன் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    இதுதவிர காரின் ஒட்டுமொத்த தோற்றம் சதுரங்க வடிவம் கொண்டிருக்கும். புதிய YDB காம்பேக்ட் எம்.பி.வி. மாடல் ரெனால்ட் டிரைபர் மாடலுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. இந்த கார் நெக்சா பிரான்டிங்கில் விற்பனை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. இதில் 1.2 லிட்டர் Z சீரிஸ் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது.

     


    கிரான்ட் விட்டாரா சார்ந்த 7 சீட்டர் எம்.பி.வி. மாடலை மாருதி சுசுகி உருவாக்கி வருகிறது. இந்த கார் Y17 எனும் பெயரில் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இந்த கார் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம். இது சுசுகியின் குளோபல் சி பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது. இதே பிளாட்ஃபார்மில் தான் கிரான்ட் விட்டாரா மாடலும் உருவாக்கப்பட்டது. 

    • ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
    • இந்த எலெக்ட்ரிக் கார் 450 கி.மீ. ரேன்ஜ் கொண்டிருக்கும் என தகவல்.

    மஹிந்திரா நிறுவனம் XUV.e9 கான்செப்ட் மாடல்களை கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட்டது. 2025 வாக்கில் அறிமுகமாக இருக்கும் நிலையில், மஹிந்திரா XUV.e9 மாடல் டெஸ்டிங் செய்யப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

    அதன்படி புதிய மஹிந்திரா எலெக்ட்ரிக் கார் முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது. இத்துடன் மெல்லிய எல்.இ.டி. டெயில் லைட்கள், கனெக்டெட் லுக், ஷார்க்-ஃபின் ஆன்டெனா, எக்ஸ்டென்டட் ரூஃப் ஸ்பாயிலர், இன்டகிரேட் செய்யப்பட்ட ஸ்டாப் லேம்ப் வழங்கப்படுகிறது.


     

    அளவீடுகளை பொருத்தவரை XUV.e9 மாடல் 4790mm நீளம், 1905mm அகலம், 1690mm உயரம் மற்றும் 2755mm வீல்பேஸ் கொண்டிருக்கிறது. இந்த கூப் எஸ்.யு.வி. மாடல் INGLO பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது. இந்த பிளாட்ஃபார்மை மஹிந்திரா மற்றும் ஃவோக்ஸ்வேகன் பகிர்ந்து கொள்கின்றன.

    முன்னதாக வெளியான ஸ்பை படங்களில் XUV.e9 மாடலின் இன்டீரியர் விவரங்கள் தெரியவந்தது. இதில் 3 ஸ்கிரீன் செட்டப், 2-ஸ்போக் ஸ்டீரிங் வீல், புதிய சென்டர் கன்சோல், டிரைவ் மோட் செலக்டர் லீவர் வழங்கப்படுகிறது.

    மஹிந்திரா XUV.e9 மாடலில் 80 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 450 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

    • விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
    • டாடா எலெக்ட்ரிக் கார்களில் இதுபோன்ற வழக்கம் பின்பற்றப்படுகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் ஹேரியர் EV மாடலை காட்சிக்கு வைத்தது. கான்செப்ட் வடிவில் அறிமுகம் செய்யப்பட்ட ஹேரியர் EV மாடலுக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது காப்புரிமை பெற்று இருக்கிறது. இது தொடர்பான விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

    காப்புரிமை படங்களின் படி ஹேரியர் EV மாடல் சமீபத்திய ஹேரியர் ஃபேஸ்லிஃப்ட் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என தெரியவந்துள்ளது. இதில் புதிய அலாய் வீல்கள், டெயில் கேட் பகுதியில் ஹேரியர் EV என்ற பேட்ஜ்-க்கு மாற்றாக .ev என்ற பேட்ஜிங் மட்டும் இடம்பெற்று இருக்கிறது. சமீபத்திய டாடா எலெக்ட்ரிக் கார்களில் இவ்வாறான வழக்கம் பின்பற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.

     


    இந்த காரின் தோற்றம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஹேரியர் ஐ.சி. என்ஜின் வெர்ஷனின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் போன்றே காட்சியளிக்கிறது. அந்த வகையில், அந்த வெர்ஷனில் உள்ள அம்சங்கள் புதிய மாடலிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். ஹேரியர் EV மாடலின் முன்புறம் மட்டும் சற்றே வித்தியாசமாக காட்சியளிக்கும் என்று தெரிகிறது.

    டாடா ஹேரியர் EV மாடல் பலவித பேட்டரி பேக் ஆப்ஷன்கள் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார்களுடன் கிடைக்கும் என தெரிகிறது. இந்த காரில் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் மற்றும் 500 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கலாம். இந்த கார் டாடா நிறுவனத்தின் முற்றிலும் புதிய Acti.EV பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் புதிய டாடா ஹேரியர் EV மாடல் இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். இதன் விலை ரூ. 30 லட்சம், எக்ஸ்-ஷோரூம் முதல் துவங்கும் என்று தெரிகிறது. இந்திய சந்தையில் புதிய டாடா ஹேரியர் EV மாடல் மஹிந்திரா XUV.e8, ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் மற்றும் எம்.ஜி. ZS EV போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.

    • என்ட்ரி லெவல் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்.
    • எக்ஸ்டிரீம் சீரிஸ் மாடல்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த திட்டம்.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அடுத்த வாரம் தனது மேவரிக் 440 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருக்கிறது. ஹார்லி டேவிட்சன் உடனான கூட்டணியில் ஹீரோ பிரான்டிங்கில் அறிமுகம் செய்யப்படும் முதல் மோட்டார்சைக்கிள் மாடல் இது ஆகும். இந்த மோட்டார்சைக்கிளுடன் ஹீரோ நிறுவனம் என்ட்ரி லெவல் மோட்டார்சைக்கிள் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

    மேவரிக் மோட்டார்சைக்கிள் வெளியீட்டை உணர்த்தும் வகையில், பல்வேறு டீசர்களை ஹீரோ மோட்டோகார்ப் வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில், தற்போது ஹீரோ எக்ஸ்டிரீம் 125R மாடலின் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. புதிய 125R மூலம் ஹீரோ நிறுவனம் எக்ஸ்டிரீம் சீரிஸ் மாடல்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

     


    புதிய எக்ஸ்டிரீம் 125R மாடலில் எல்.இ.டி. லைட்டிங், ஸ்லென்டர் எல்.இ.டி. இன்டிகேட்டர்கள், எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்படும் என தெரிகிறது. இந்த மாடலில் 124.7சிசி ஏர் கூல்டு Fi என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இதே என்ஜின் ஹீரோவின் கிளாமர் மோட்டார்சைக்கிளிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    செயல்திறனை பொருத்தவரை கிளாமர் மாடலை போன்றே 11 பி.எஸ். பவர், 10.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். இத்துடன் 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் இந்த மோட்டார்சைக்கிள் டி.வி.எஸ். ரைடர் 125 மாடலுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.

    ×