search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    மூன்று புதிய மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்த ஹீரோ மோட்டோகார்ப்
    X

    மூன்று புதிய மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்த ஹீரோ மோட்டோகார்ப்

    முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் இந்தியாவில் மூன்று புதிய மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது.
    புதுடெல்லி:

    உலகின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் இந்தியாவில் 125சிசி சூப்பர் ஸ்பிளென்டர், 110சிசி பேஷன் ப்ரோ மற்றும் 110சிசி பேஷன் ப்ரோ என மூன்று மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது.

    மூன்று புதிய மோட்டார்சைக்கிள்களும் ஜனவரி 2018 முதல் ஒவ்வொரு கட்டமாக விற்பனை துவங்க இருக்கிறது. இந்திய  ஆட்டோமொபைல் சந்தையில் ஹீரோ மோட்டோகார்ப் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், மூன்று புதிய மாடல்களை அறிமுகம் செய்து இதே நிலையை தக்க வைத்துக் கொள்ளும் என கூறப்படுகிறது.

    புதிய 110சிசி பேஷன் ப்ரோ மாடலில் பாதுகாப்பு மற்றும் சவுகரியத்தை வழங்கும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகிறது.  இத்துடன் சீராக இயக்க ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் 110சிசி TOD BS-IV ரக இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 9.27 பி.எச்.பி பவர் மற்றும் 9 என்.எம். டார்கியூ கொண்டுள்ளது.

    இத்துடன் புதிய பேஷன் ப்ரோ மாடலில் ஹீரோ i3S மற்றும் தற்போதைய மாடலை விட 12 சதவிகிதம் கூடுதல் திறன் மற்றும் டார்கியூ   வெளிப்படுத்தும். புதிய பேஷன் ப்ரோ மாடல் மணிக்கு 0-60 கிலோமீட்டர் வேகத்தை 7.45 நொடிகளில் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    புதிய பேஷன் ப்ரோ மாடலில் டிஜிட்டல் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், எந்நேரமும் எரியக்கூடிய ஹெட்லேம்ப், சைடு இன்டிகேட்டர் உள்ளிட்ட வசதிகளும், புதிய ஃபியூயல் டேன்க் மற்றும் டெயில் லேம்ப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. புதிய பேஷன் X ப்ரோ அழகிய வடிவமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் செயல்திறன் உள்ளிட்டவை இளம்  தலைமுறை வாடிக்கையாளர்களை கவரும் வகையில் உள்ளது.

    இந்த மாடலிலும் 10சிசி TOD BS-IV ரக இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 9.27 பி.எச்.பி பவர் மற்றும் 9 என்.எம். டார்கியூ வெளிப்படுத்தும். வடிவமைப்பை பொருத்த வரை புதிய மாடலில் கூர்மையான ஃபியூயல் டேன்க், ஸ்போர்ட் தோற்றம் கொண்ட  கௌவுல், டூயல் டோன் கண்ணாடிகள், எல்இடி டெயில் லேம்ப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    புதிய பேஷன் X ப்ரோ ஐந்து பிரீமியம்  டூயல் டோன் நிறங்களிலும், டிஸ்க் பிரேக் மற்றும் டிரம் பிரேக் வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    இவற்றுடன் அறிமுகம் செய்யப்பட்ட சூப்பர் ஸ்பிளென்டர் மாடல் 125சிசி ஏர்-கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 11.2 பி.எச்.பி. பவர் மற்றும் 11 என்.எம். டார்கியூ செயல்திறன் கொண்டிருக்கிறது.

    புதிய ஸ்பிளென்டர் மாடல் முந்தைய மாடலை விட 27 சதவிகிதம் கூடுதல் செயல்திறன் மற்றும் ஆறு சதவிகிதம் கூடுதல்  டார்கியூ கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்பிளென்டர் மாடல் மணிக்கு அதிகபட்சம் 94 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் பல்வேறு இதர அம்சங்களும் வழங்கப்படுகிறது.
    Next Story
    ×