search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    • இந்திய ராணுவத்திற்காக விசேஷமாக உருவாக்கி இருக்கிறது.
    • பாதுகாப்பு மற்றும் பல்வேறு இதர பணிகளில் இதனை பயன்படுத்த முடியும்.

    இந்திய ராணுவத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஆயுதம் தாங்கிய இலகுரக வாகனம்- அர்மாடோ (Armoured Light Specialist Vehicle-ASLV) 2024 குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொண்டது. மஹிந்திரா நிறுவனம் இந்த வாகனத்தை இந்திய ராணுவத்திற்காக மிகவும் விசேஷமாக உருவாக்கி இருக்கிறது.

    முழுக்க முழுக்க இந்தியாவிலேயே டிசைன் செய்யப்பட்ட மஹிந்திரா அர்மாடோ ராணுவ பயன்பாட்டுக்கு தேவையான அதிநவீன தொழில்நுட்பங்கள், அதிகளவு பாதுகாப்பு வசதிகளை கொண்டிருக்கிறது. பலவிதங்களில் பயன்படுத்தக்கூடிய மிக முக்கிய வாகனங்களில் ஒன்றாக ஆயுதம் தாங்கிய இலகுரக வாகனம் விளங்குகிறது.

     


    அந்த வகையில், மஹிந்திரா உருவாக்கும் அர்மாடோ மாடலில் பி7 மற்றும் ஸ்டனாக் லெவல் II பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. அதிநவீன வாகனம் என்ற வகையில், இது சிறப்பு படையினர், தீவிரவாத தடுப்பு படை, எல்லை பாதுகாப்பு மற்றும் பல்வேறு இதர பணிகளில் இதனை பயன்படுத்த முடியும். அர்மாடோ மாடலில் 3.2 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட டைரக்ட் இன்ஜெக்ஷன் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த என்ஜின் பலவித எரிபொருள்களில் இயங்கும் திறன் கொண்டிருக்கிறது. செயல்திறனை பொருத்தவரை இந்த யூனிட் 215 ஹெச்.பி. பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் ஆல்-வீல் டிரைவ் வசதி மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

     


    வாகனத்தில் 1000 கிலோ எடை ஏற்றப்பட்ட நிலையிலும் அர்மாடோ மாடல் மணிக்கு அதிகபட்சம் 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இந்த வாகனத்தின் டயர்களில் காற்று இல்லாமலோ அல்லது பன்ச்சர் ஆன நிலையில்கூட 50 கிலோமீட்டர்கள் வரை பயணிக்க முடியும். கடினமான சூழலிலும் பயன்படுத்த ஏதுவாக இதில் செல்ஃப்-கிளீனிங் எக்சாஸ்ட் மற்றும் ஃபில்ட்ரேஷன் சிஸ்டம் உள்ளது.

    இவைதவிர அர்மாடோ மாடலில் ஆயுதங்களை பொருத்திக் கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. தோற்றத்தில் ஹம்மர் போன்ற டிசைன் கொண்டிருக்கும் அர்மாடோ அசாத்திய செயல்திறன், அதிநவீன தொழில்நுட்பத்துடன் ராணுவ பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா அர்மாடோ குறித்த பதிவை தனது எக்ஸ் அக்கவுண்டில் பகிர்ந்து இருக்கிறார்.



    • காரின் அம்சங்கள் செடான் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டுள்ளது.
    • இந்த காரில் லெவல் 2 ADAS, 360 டிகிரி சரவுண்ட் கேமரா, பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்படுகிறது.

    பி.ஒய்.டி. நிறுவனம் தனது 2024 அட்டோ 3 மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மேம்பட்ட மாடலின் வெளிப்புறம் காஸ்மடிக் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு, புதிய நிற ஆப்ஷன்கள் மற்றும் மேம்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் சில அம்சங்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சீல் செடான் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டுள்ளது.

    புதிய கார் காஸ்மோஸ் பிளாக் பெயரில் புது நிறத்தில் கிடைக்கிறது. இத்துடன் புதிய பேட்டன் டிசைன் கொண்ட 18-இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. இதன் பின்புறம் பில்டு யுவர் டிரீம்ஸ் லோகோவுக்கு மாற்றாக பி.ஒய்.டி. எழுத்துக்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. உள்புறத்தில் 15.6 இன்ச் அளவில் சுழலக்கூடிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது.

     


    பி.ஒய்.டி. அட்டோ 3 மாடலில் டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், வென்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கைகள், பவர்டு டிரைவர் சீட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், வயர்லெஸ் சார்ஜர், லெவல் 2 ADAS, 360 டிகிரி சரவுண்ட் கேமரா, பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்படுகிறது.

    புதிய அட்டோ 3 மாடலில் 60.48 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 521 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்று இருக்கிறது. இதில் உள்ள பேட்டரி பேக் 80 கிலோவாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதை கொண்டு காரை 50 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்திட முடியும்.

    சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் இந்த மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பி.ஒய்.டி. அட்டோ 3 மாடலின் விலை ரூ. 33 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • ஸ்கோடா மாடல்களில் இந்த அம்சம் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது.
    • கார்களை அப்டேட் செய்யும் பணிகளில் அந்நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

    ஸ்கோடா நிறுவனத்தின் குஷக் மற்றும் ஸ்லேவியா மாடல்கள் அப்டேட் செய்யப்பட்டு விரைவில் இவற்றின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. ஸ்கோடா இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் கார் மாடல்களை அப்டேட் செய்யும் பணிகளில் அந்நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

    இந்த நிலையில், ஸ்கோடா ஃபேஸ்லிஃப்ட் கார் மாடல்களில் கூடுதல் அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது. இதனை ஸ்கோடா இந்தியா பிரான்டு இயக்குநர் பீட்டர் ஜனேபா தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.


     

    ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா போன்ற மிட்சைஸ் செடான்கள், ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் ஹோண்டா எலிவேட் போன்ற மிட்சைஸ் எஸ்.யு.வி. மாடல்களில் தற்போது லெவல் 2 ஆட்டோனோமஸ் டிரைவல் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) வசதி வழங்கப்பட்டு விட்டது. எனினும், ஸ்கோடா மாடல்களில் இந்த அம்சம் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது.

    இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜனேபா, "ADAS 2.0-வை பொருத்தவரை MQB AO-IN பிளாட்ஃபார்மில் உருவான அனைத்து கார்களின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்களிலும் படிப்படியாக வழங்கப்பட்டு விடும்," என்று தெரிவித்தார்.


     

    தொடர்ந்து பேசிய அவர், "இந்திய சந்தை மிகவும் அதிவேகமான ஒன்று. எங்களது போட்டியாளர்கள் இன்றைய சூழலில் அதிவேகமாக செயல்படுகின்றனர், ஆனால் நாங்கள் விரைவில் இந்த நிலையை எட்டிவிடுவோம். ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் மட்டுமின்றி இடையில் வேறுசிலவற்றையும் கொண்டுவருவோம்."

    "அந்த வகையில், 2.5 மாடல்களான காம்பேக்ட் எஸ்.யு.வி.-யில் தற்போது குஷக் மாடலில் இல்லாத சில அம்சங்களும் வழங்கப்படும். இதில் ஒன்று 360-டிகிரி கேமரா," என்று அவர் தெரிவித்தார்.

    அதன்படி மார்ச் 2025 அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஸ்கோடா காம்பேக்ட் எஸ்.யு.வி.-க்களில் லெவல் 2 ADAS மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற வசதிகள் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது.

    • மொத்தத்தில் 120 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.
    • இந்த மாடலில் 6.75 லிட்டர் டுவின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட வி12 என்ஜின் உள்ளது.

    ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முற்றிலும் புதிய கோஸ்ட் மாடல் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இந்நிறுவனத்தின் 120-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் அறிமுகமாகி இருக்கிறது. ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ப்ரிசம் என்று அழைக்கப்படும் இந்த கார் மொத்தத்தில் 120 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட உள்ளது.

    புதிய கோஸ்ட் ப்ரிசம் மாடலில் ஏராளமான காஸ்மடிக் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இவை இந்த காலத்துக்கு ஏற்ற வகையில் டிரெண்டிங் டிசைன் மற்றும் அழகு சாதன துறையை தழுவி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் வெளிப்புறம் கன்மெட்டல் கிரே நிறம் கொண்டிருக்கிறது.

    இதுதவிர புதிய கோஸ்ட் ப்ரிசம் மாடல்- ஃபீனிக்ஸ் ரெட், டர்சீஸ், மாண்டரின் மற்றும் ஃபோர்ஜ் எல்லோ போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இவை காரின் பம்ப்பர் இன்சர்ட்கள், பிரேக் கேலிப்பர்கள மற்றும் கோச்லைன் உள்ளிட்டவைகளில் இடம்பெற்றுள்ளன. இதன் இன்டீரியர் பற்றிய விவரங்கள் அதிகளவு வெளியாகவில்லை.

    ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ப்ரிசம் மாடலில் 6.75 லிட்டர் டுவின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட வி12 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 555 ஹெச்.பி. பவர், 850 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. 

    • பிக்ஸ்டர் மாடல் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் வெளியானது.
    • பின்புற டிசைன் சற்று வித்தியாசமாக காட்சியளிக்கும்.

    ரெனால்ட் நிறுவனத்தின் புதிய தலைமுறை டஸ்டர் மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட டஸ்டர் மாடல் இந்திய சந்தையில் மிட் சைஸ் எஸ்.யு.வி. பிரிவில் நிலைநிறுத்தப்படும் என தெரிகிறது.

    புதிய மாடல் இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகளில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இந்த கார் 5 சீட்டர் வடிவில் அறிமுகமாகுமா அல்லது 7 சீட்டர் வடிவில் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த நிலையில், டஸ்டரின் 7 சீட்டர் வெர்ஷனான பிக்ஸ்டர் மாடல் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

     


    புதிய பிக்ஸ்டர் மாடல் CMF-B ஆர்கிடெக்ச்சரில் உருவாகி இருக்கும் என்று தெரிகிறது. இந்த கார் 4.6 மீட்டர் நீளமாக இருக்கும் என்றும் இதன் வீல்பேஸ் பின்புற இருக்கைகளுக்கு ஏற்ற வகையில் அளவில் நீண்டு இருக்கும் என்று தெரிகிறது. இதன் காரணமாக இந்த காரின் புன்புற டிசைன் வழக்கமான டஸ்டர் போன்றில்லாமல் சற்று வித்தியாசமாக காட்சியளிக்கும்.

    எனினும், இதன் விலை மற்றும் உற்பத்தி செலவீனங்களை குறைவாக வைத்துக் கொள்ளும் நோக்கில், புதிய பிக்ஸ்டர் மாடலின் பாடி பேனல்கள், மெக்கானிக்கல் பாகங்கள் மற்றும் பவர்டிரெயின் ஆப்ஷன்கள் டஸ்டர் மாடலில் இருப்பதை போன்றே வழங்கப்படும் என்று தெரிகிறது.

    இந்திய சந்தையில் அறிமுகமாகும் பட்சத்தில் புதிய டஸ்டர் மாடல் மஹிந்திரா XUV700, டாடா சஃபாரி, ஹூண்டாய் அல்கசார், எம்.ஜி. ஹெக்டார் பிளஸ் மற்றும் சிட்ரோயன் C3 ஏர்கிராஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். 

    • மூன்று எலெக்ட்ரிக் வாகனங்கள் இடம்பெற்று இருக்கும் என்று தெரிகிறது.
    • பல்வேறு பாடி ஸ்டைல்களில் கார்களை உருவாக்க முடியும்.

    மாருதி சுசுகி நிறுவனம் அடுத்த சில ஆண்டுகளில் பல்வேறு கார் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இதில் பலேனோ, ஃபிரான்க்ஸ், ஸ்விஃப்ட் மற்றும் இதர கார் மாடல்களின் ஹைப்ரிட் வெர்ஷன்கள் இடம்பெற்றிருக்கும் என்று கூறப்பட்டது.

    இவைதவிர மாருதி நிறுவனம் தனது வாகனங்களை முழுமையாக மாற்றியமைக்கும் நோக்கில் முற்றிலும் புதிதாக எட்டு கார் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் எஸ்.யு.வி.-க்கள், எம்.பி.வி.-க்கள் மற்றும் மூன்று எலெக்ட்ரிக் வாகனங்கள் இடம்பெற்று இருக்கும் என்று தெரிகிறது.

     


    இதில் ஒரு மாடல் தாமதமாகவே வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த மாடல் எலெக்ட்ரிக் எம்.பி.வி. என்றும் இது YMC எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக மாருதி மற்றும் டொயோட்டா நிறுவனங்கள் இணைந்து பார்ன்-இவி (Born EV) ஆர்கிடெக்ச்சரை உருவாக்கி வருகின்றன.

    இதை கொண்டு பல்வேறு பாடி ஸ்டைல்களில் கார்களை உருவாக்க முடியும். இந்த ஆர்கிடெக்ச்சரில் உருவாகும் எம்.பி.வி. மாடல் தான் YMC எனும் குறியீட்டு பெயர் கொண்டிருக்கிறது என்றும், இந்த மாடல் eVX அறிமுகமாகி ஒன்றரை ஆண்டுகள் கழித்தே அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அறிமுகமாகும் போது மாருதி YMC மாடல் அந்நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் எம்.பி.வி.-யாக இருக்கும்.

    மாருதியின் புதிய எம்.பி.வி. மாடல் பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ள நிலையில், இதில் 40 கிலோவாட் ஹவர் மற்றும் 60 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த காரின் ரேன்ஜ் மாருதி eVX மாடலுக்கு இணையாக 550 கிலோமீட்டர்கள் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. 

    • ஃபோர்டு எவரஸ்ட் பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • டொயோட்டா ஹிலக்ஸ், இசுசு டி மேக்ஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    ஃபோர்டு நிறுவனத்தின் முற்றிலும் புதிய ரேஞ்சர் மாடல் இந்தியாவில் டெஸ்டிங் செய்யப்படுகிறது. இந்த கார் டிரக் ஒன்றின் மீது எடுத்துச் செல்லப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இத்துடன் ஃபோர்டு என்டேவர் மாடலும் காணப்பட்டது. இதே கார் சர்வதேச சந்தையில் ஃபோர்டு எவரஸ்ட் பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இரு மாடல்களும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் காணப்பட்டுள்ளது. ஃபோர்டு நிறுவனத்தின் ரேஞ்சர் மாடல் உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படும் பிரபல எஸ்.யு.வி. ஆகும். இந்த மாடல் டொயோட்டா ஹிலக்ஸ் மற்றும் இசுசு டி மேக்ஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

     


    இந்த எஸ்.யு.வி. பெட்ரோல், டீசல் என இருவித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த காரின் ரேப்டர் பெர்ஃபார்மன்ஸ் வேரியண்டில் உள்ள 3.0 லிட்டர் வி6 பெட்ரோல் என்ஜின் 288 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    ரேஞ்சர் எஸ்.யு.வி. மாடல் இதுவரை இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டதே இல்லை. எனினும், இந்த மாடலின் தோற்றம் கிட்டத்தட்ட ஃபோர்டு என்டேவர் எஸ்.யு.வி.-யை போன்றே காட்சியளிக்கிறது. ஒருவேளை இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகமாகும் பட்சத்தில் டொயோட்டா ஹிலக்ஸ் மற்றும் இசுசு டி மேக்ஸ் மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்தும்.

    • வால்வோ XC40 ரிசார்ஜ் மாடலில் ADAS சூட் உள்ளது.
    • இந்த கார் முழு சார்ஜில் 475 கிமீ ரேன்ஜ் வழங்குகிறது.

    வால்வோ நிறுவனம் தனது XC40 ரிசார்ஜ் எலெக்ட்ரிக் காரின் புதிய வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய வேரியண்டில் ஒற்றை மோட்டார் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. இது காரின் பின்புற ஆக்சிலில் பொருத்தப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் புதிய வால்வோ XC40 ரிசார்ஜ் வேரியண்டின் விலை ரூ. 54 லட்சத்து 95 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய வேரியண்ட் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் XC40 ரிசார்ஜ் டூயல் மோட்டார், ஆல்வீல் டிரைவ் வேரியண்டின் கீழ் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த வேரியண்டின் விலை ரூ. 57.9 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     


    என்ட்ரி லெவல் மாடல் என்ற வகையில், புதிய வேரியண்ட்-இல் பிக்சல் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், ஃபாக் லேம்ப்கள், 360 டிகிரி கேமரா, ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் போன்ற வசதிகள் வழங்கப்படவில்லை. மாற்றாக இந்த காரில் 8 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், 2-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், 12 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, 9 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் உள்ளது.

    இத்துடன் பார்க் அசிஸ்ட், 19 இன்ச் அலாய் வீல்கள், பானரோமிக் சன்ரூஃப், முன்புறம் பவர்டு இருக்கைகள், வயர்லெஸ் போன் சார்ஜிங் போன்ற வசதிகள் உள்ளன. பாதுகாப்பிற்கு 7 ஏர்பேக், லேன் கீப் அசிஸ்ட், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், கிராஸ் டிராஃபிக் அலர்ட்கள், ரியர் கொலிஷன் வார்னிங் போன்ற வசதிகளை வழங்கும் ADAS சூட் உள்ளது.

     


    இதில் உள்ள ஒற்றை மோட்டார் 238 ஹெச்.பி. பவர், 420 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 7.3 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 180 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும்.

    வால்வோ XC40 ரிசார்ஜ் புதிய வேரியண்டில் 69 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 475 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்றுள்ளது.

    • NS 400 இதுவரை இல்லாத விலை ரூ.2 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயிக்கப்பட்டது
    • இளைய தலைமுறையினரை கவரும் வகையில் ஸ்டைலிங்' ஆக வடிவமைக்கப்பட்டுள்ளது

    பஜாஜ் ஆட்டோவின் புதிய தயாரிப்பான NS 400 பல்சர் நவீன மாடல் இளைய தலைமுறையினரை கவரும் வகையில் மற்ற பல்சர்களில் இருந்து 'ஸ்டைலிங்' ஆக வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய பல்சர் NS 400 இதுவரை இல்லாத விலை உயர்வாக ரூ.2 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயிக்கப்பட்டது.

    புனே நகரில் உள்ள தொழிற்சாலையில் இதன் உற்பத்தி தொடங்க திட்டமிடப்பட்டது. தற்போது மார்ச் மாத இறுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்த தயார் நிலையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரென புதிய பஜாஜ் பல்சர் NS 400 அறிமுகம் அடுத்த ஆண்டுக்கு (2025) தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    அதிகாரப்பூர்வ அனுமதி கிடைக்காத காரணத்தால் அடுத்த ஆண்டு ஏப்ரல், ஜூன் மாதங்களில் புதிய பஜாஜ் பல்சர் NS 400 வெளியீடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பி.ஒய்.டி. சீல் மூன்றாவது மாடல் ஆகும்.
    • பி.ஒய்.டி. சீல் மாடல் நான்கு நிறங்களில் கிடைக்கிறது.

    பி.ஒய்.டி. இந்தியா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சீல் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய பி.ஒய்.டி. சீல் மாடலின் விலை ரூ. 41 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் பி.ஒய்.டி. இ6 மற்றும் அட்டோ 3 மாடல்களின் வரிசையில் பி.ஒய்.டி. சீல் மூன்றாவது மாடல் ஆகும்.

    புதிய பி.ஒய்.டி. சீல் மாடல் டைனமிக், பிரீமியம் மற்றும் பெர்ஃபார்மன்ஸ் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் ஆர்க்டிக் புளூ, அரோரா வைட், அட்லான்டிஸ் கிரே மற்றும் காஸ்மோஸ் பிளாக் என நான்கு நிறங்களில் கிடைக்கிறது.

     


    தோற்றத்தில் இந்த கார் டெஸ்லா மாடல் 3 போன்றே காட்சியளிக்கிறது. முன்புறம் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், முன்புற பம்ப்பரில் ஏரோ வடிவம் கொண்ட இன்சர்ட்கள் உள்ளன. இத்துடன் ஸ்லோபிங் ரூஃப்லைன், ஃபிளஷ் டோர் ஹேண்டில்கள், பின்புறம் எல்.இ.டி. பார், எல்.இ.டி. டெயில் லேம்ப்கள், பிளாக் டிஃப்யுசர் உள்ளது.

    அம்சங்களை பொருத்தவரை பி.ஒய்.டி. சீல் மாடலில் அதிநவீன இன்டெலிஜன்ட் காக்பிட், 15.6 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், 10.2 இன்ச் எல்.சி.டி. டிரைவர் டிஸ்ப்ளே, எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட ஏ.சி. வென்ட்கள், எலெக்ட்ரிக் டெயில்கேட், ரெயின் சென்சிங் வைப்பர்கள் உள்ளன.

     


    இத்துடன் 360 டிகிரி கேமரா, இரு வயர்லெஸ் போன் சார்ஜர்கள், முன்புறம் பவர்டு மற்றும் வென்டிலேட் செய்யப்பட்ட இருக்கைகள், பானரோமிக் சன்ரூஃப், ADAS பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த மாடல் 61.44 கிலோவாட் ஹவர் மற்றும் 72.56 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    இவை முறையே 510 கிலோமீட்டர்கள் மற்றும் 650 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இதன் பேஸ் மாடலில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 201 ஹெச்.பி. பவர், 310 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் டாப் என்ட் மாடலில் உள்ள பேட்டரி 308 ஹெச்.பி. பவர், 360 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் பெர்ஃபார்மன்ஸ் வேரியண்ட் 523 ஹெச்.பி. பவர், 670 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    விலை விவரங்கள்:

    பி.ஒய்.டி. சீல் டைனமிக் ரூ. 41 லட்சம்

    பி.ஒய்.டி. சீல் பிரீமியம் ரூ. 45 லட்சத்து 55 ஆயிரம்

    பி.ஒய்.டி. சீல் பெர்ஃபார்மன்ஸ் ரூ. 53 லட்சம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    • டார்க் எடிஷன் மாடல்களில் முழுமையான கருப்பு நிறம் பூசப்பட்டுள்ளது.
    • நெக்சான் EV டார்க் எடிஷன் லாங் ரேன்ஜ் வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் டார்க் எடிஷன் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. டார்க் எடிஷன் மாடல்கள் ஃபேஸ்லிஃப்ட்-க்கு முந்தைய வெர்ஷன்களிலும் கிடைத்தது. புதிய ஸ்பெஷல் எடிஷன் வேரியண்ட்களில் ஏராளமான காஸ்மடிக் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    புதிய டாடா நெக்சான் டார்க் எடிஷன் விலை ரூ. 11 லட்சத்து 45 ஆயிரம் என துவங்குகிறது. டாடா நெக்சான் EV டார்க் எடிஷன் விலை ரூ. 19 லட்சத்து 49 ஆயிரம் என நிரணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     


    தோற்றத்தில் நெக்சான் மற்றும் நெக்சான் EV டார்க் எடிஷன் மாடல்களில் முழுமையான கருப்பு நிறம் பூசப்பட்டு, பிளாக் அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள், டாடா லோகோ வழங்கப்பட்டு இருக்கிறது. இன்டீரியரிலும் பிளாக் தீம் செய்யப்பட்டுள்ளது. பிளாக் நிற லெதர் இருக்கைகள், டேஷ்போர்டு மற்றும் சென்டர் கன்சோல் என அனைத்தும் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது.

    தோற்றத்தில் மட்டும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் நிலையில், பவர்டிரெயின் ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், புதிய டார்க் எடிஷனிலும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின்கள் வழங்கப்படுகின்றன. இவை முறையே 87 ஹெச்.பி. பவர், 170 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 84.5 ஹெச்.பி. பவர், 260 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன.

    இதன் பெட்ரோல் என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல், AMT, DCT கியர்பாக்ஸ், டீசல் என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. டாடா நெக்சான் EV டார்க் எடிஷன் லாங் ரேன்ஜ் வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது. இதில் எலெக்ட்ரிக் மோட்டார் 143 ஹெச்.பி. பவர், 215 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 465 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது.

    • ஹூண்டாய் பிரான்டிங்கில் மூன்றாவது N சீரிஸ் மாடல் இது.
    • கிரெட்டா N லைன் மாடலின் புகைப்படங்கள் வெளியானது.

    ஹூண்டாய் நிறுவனம் தனது கிரெட்டா N லைன் மாடலுக்கான முன்பதிவை துவங்கியது. புதிய காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் ஆகும். இந்திய சந்தையில் மார்ச் 11-ம் தேதி புதிய கிரெட்டா N லைன் மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஹூண்டாய் பிரான்டிங்கில் மூன்றாவது N சீரிஸ் மாடலாக கிரெட்டா அறிமுகமாக உள்ளது.

    புதிய கிரெட்டா N லைன் மாடலின் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் ஸ்போர்ட் அம்சங்கள் வழங்கப்படுகிறது. முன்னதாக ஹூண்டாய் நிறுவனம் தனது கிரெட்டா N லைன் மாடலின் புகைப்படங்களை வெளியிட்டது. இதன் முன்புறம் ஸ்போர்ட் தோற்றம் கொண்டிருக்கிறது. இத்துடன் புதிய கிரில் மற்றும் பம்ப்பர் வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    ஹெட்லேம்ப் மற்றும் எல்.இ.டி. லைட்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த காரின் பிரேக் கேலிப்பர்கள் சிவப்பு நிறம் கொண்டிருக்கின்றன. பின்புறம் ரூஃப்-இல் ஸ்பாயிலர் உள்ளது. இத்துடன் ஸ்போர்ட் பம்ப்பர், டிஃப்யூசர் உள்ளது. கிரெட்டா N லைன் மாடல் தண்டர் புளூ மற்றும் பிளாக் ரூஃப் எனும் புதிய ஆப்ஷனில் கிடைக்கிறது.

    புதிய கிரெட்டா N லைன் மாடலில் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 160 ஹெச்.பி. பவர், 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படும் என்று தெரிகிறது.

    ×