search icon
என் மலர்tooltip icon

    கார்

    • மாருதி ஜிம்னி மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • இந்த காரில் 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் உள்ளது.

    இந்திய சந்தையில் மாருதி சுசுகி ஜிம்னி மாடலுக்கு அதிரடி விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த எஸ்.யு.வி. மாடலுக்கு ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் வரை பலன்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இவை மார்ச் மாத இறுதி வரை வழங்கப்படுகிறது.

    இந்த கார் சீட்டா மற்றும் ஆல்ஃபா என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. 2023 மாடலை வாங்கும் போது அதிகபட்சம் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. 2024 மாருதி ஜிம்னி மாடலுக்கு ரூ. 50 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.

     


    இத்துடன் ரூ. 3 ஆயிரம் வரை கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் ஒவ்வொரு பகுதி, ஸ்டாக் இருப்புக்கு ஏற்ப வேறுபடும். மாருதி ஜிம்னி மாடலில் 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படுகிறது.

    இந்த என்ஜின் 103 ஹெச்.பி. பவர், 134 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    • இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    • இந்த கார் 5 பேர் அமரக்கூடிய எஸ்.யு.வி. மாடல் ஆகும்.

    எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ஹெக்டார் எஸ்.யு.வி.-யை ஷைன் ப்ரோ மற்றும் செலக்ட் ப்ரோ என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்தது. இவற்றின் விலை முறையே ரூ. 16 லட்சம் மற்றும் ரூ. 17 லட்சத்து 30 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    தற்போது எம்.ஜி. ஹெக்டார் என்ட்ரி லெவல் மாடலுக்கான விலையை அந்நிறுவனம் அதிரடியாக குறைத்து இருக்கிறது. விலை குறைப்பின் படி எம்.ஜி. ஹெக்டார் மாடலின் விலை ரூ. 13 லட்சத்து 99 ஆயிரம் என துவங்குகிறது. முன்னதாக இதன் விலை ரூ. 14 லட்சத்து 95 ஆயிரம் என நிர்யணயம் செய்யப்பட்டு இருந்தது. அதன்படி தற்போது இதன் விலை ரூ. 96 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது.

    விலை குறைப்பு எம்.ஜி. ஹெக்டார் ஸ்டைல் 1.5 லிட்டர் பெட்ரோல் மேனுவல் வேரியண்டிற்கு மட்டுமே அறிவிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக எம்.ஜி. மோட்டார் நிறுவனம் தனது கொமெட் EV மாடலின் இரண்டு வேரியண்ட்களிலும் ஃபாஸ்ட் சார்ஜரை அறிமுகம் செய்தது.

    இந்திய சந்தையில் எம்.ஜி. ஹெக்டார் மாடல் ஐந்து பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்பில் கிடைக்கிறது. இந்த கார் 1.5 லிட்டர் மற்றும் 2 லிட்டர் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    • பிப்ரவரில் 3,73,177 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன
    • கார்கள் விற்பனை பிப்ரவரியில் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது

    கடந்த ஆண்டு பிப்ரவரியில் கார்கள் 3,35,324 யூனிட்கள் விற்பனையாகி இருந்த நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரில் 3,73,177 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. மேலும் கார்கள் விற்பனை பிப்ரவரியில் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது.

    தொழில்துறை மதிப்பீட்டின்படி இது கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் விற்பனையான 3,35,324 யூனிட்களை விட 11.3 சதவீதம் அதிகம். உள்நாட்டு சந்தையில் இதுவரை பதிவு செய்யப்பட்ட பயணிகள் வாகன விற்பனையில் 3-வது சிறந்த மாதமாக பிப்ரவரி அமைந்துள்ளது.

    உள்ளூர் சந்தையில் விளையாட்டு பயன்பாட்டு வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் விற்பனை பிப்ரவரியில் அதிகரித்துள்ளது. மஹிந்திரா வாகன விற்பனை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் வாகனங்கள் மாதாந்திர விற்பனை 23,300 ஆக உள்ளது

    • எலெக்ட்ரிக் கார் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்ததாக தகவல்.
    • திட்ட இயக்குனர் கெவின் லின்ச் கூட்டத்தில் கலந்து கொண்டதாக தகவல்.

    ஆப்பிள் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கார் திட்டத்தை ரத்து செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆப்பிள் நிறுவனம் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக எலெக்ட்ரிக் கார் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    ஊழியர்களுடன் நிறுவனத்திற்குள் நடைபெற்ற கூட்டத்தில் ஆப்பிள் கார் திட்டம் ரத்து செய்யப்படுதாக அதன் தலைமை நிர்வாக அலுவலர் ஜெஃப் வில்லியம்ஸ் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் போது திட்ட இயக்குனர் கெவின் லின்ச் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த திட்டத்தில் பணியாற்றி வந்த 2 ஆயிரத்திற்கும் அதிக டெக்னிஷியன்கள் ஆப்பிள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவுக்கு மாற்றப்படுவர் என தெரிகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் செயற்கை நுண்ணறிவு சார்ந்த திட்டங்களில் அதிக கவனம் செலுத்த முடியும். புதிய தகவல் குறித்து ஆப்பிள் சார்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    ஆப்பிள் கார் திட்டம் ரத்து செய்யப்படுவதற்கான மிகப்பெரிய காரணம், சந்தையில் தற்போது ஆப்பிள் சாதனங்கள் ஈட்டி வரும் லாபத்தை புதிய கார் ஈட்டுமா என்பதும், காரை வெளியிடுவதற்கு மட்டுமே இன்னமும் பல மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய வேண்டியிருக்கும் என்பதும் தான் என்று கூறப்படுகிறது.

    இது தொடர்பாக வெளியான தகவல்களின் படி ஒருவேளை ஆப்பிள் கார் வெளியாகும் பட்சத்தில் அதன் விலை நிச்சயம் 1 லட்சம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 83 லட்சம் வரையிலான விலையை கொண்டிருக்கும். இத்தனை விலை கொடுத்து காரை வாங்குவோர் எண்ணிக்கை மிகவும் குறைவு. இதனால் சந்தையில் இது எதிர்பார்த்த லாபத்தை ஈட்டும் வாய்ப்புகள் குறைவு தான் என ஆப்பிள் நிர்வாக குழு உறுப்பினர்கள் கவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    • எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் அசெம்பில் செய்யும் வால்வோ.
    • 690 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது.

    வால்வோ நிறுவனத்தின் இரண்டு புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்கள் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது. முற்றிலும் எலெக்ட்ரிக் வடிவில் உருவாக்கப்பட்ட வால்வோ EX90 மற்றும் EX30 EV மாடல்கள் அடுத்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என வால்வோ கார்ஸ் இந்தியா நிர்வாக இயக்குனர் ஜோதி மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

    இந்திய சந்தையில் வால்வோ நிறுவனம் XC40 ரிசார்ஜ் மற்றும் C40 ரிசார்ஜ் என இரண்டு எலெக்ட்ரிக் கார் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. வால்வோ புது அறிவிப்பின் படி இந்த எண்ணிக்கை அடுத்த ஆண்டு இருமடங்கு அதிகரிக்க இருக்கிறது.

     


    புதிய எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகம் செய்யப்படுவதோடு, இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை அசெம்பில் செய்வதற்கான பணிகளிலும் வால்வோ ஈடுபட்டு வருவதாக ஜோதி மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

    விற்பனையை பொருத்தவரை வால்வோ இந்தியா நிறுவனம் 2023 ஆண்டில் 690 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது. இது அந்நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 28 சதவீதம் ஆகும். இதில் 519 யூனிட்கள் XC40 ரிசார்ஜ், 180 யூனிட்கள் C40 ரிசார்ஜ் அடங்கும். இந்த ஆண்டு தனது எலெக்ட்ரிக் வாகன விற்பனை 33 சதவீதம் ஆக அதிகரிக்கும் என வால்வோ இந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

     


    எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. என்ற வகையில், வால்வோ EX90 மாடல் கடந்த 2022-ம் ஆண்டு சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஒரு 7 சீட்டர் எலெக்ட்ரிக் கார் ஆகும். இந்த கார் EV SPA2 ஆர்கிடெக்ச்சரில் உருவான வால்வோ-வின் முதல் மாடல் என்ற பெருமையை பெற்றது.

    இந்த காரின் டாப் எண்ட் மாடலில் 111 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படுகிறது. இது முழு சார்ஜ் செய்தால் 600 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்று இருக்கிறது. இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார்கள் 517 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்துகிறது.

    வால்வோ EX30 மாடல் என்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. ஆகும். இதில் 69 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படுகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 442 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என சான்று பெற்றிருக்கிறது. இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 427 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. 

    • மாருதி எஸ் பிரெஸ்ஸோ மாடல் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • எஸ் பிரெஸ்ஸோ மாடல் லிட்டருக்கு அதிகபட்சம் 25 கிமீ வரையிலான மைலேஜ் வழங்குகிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை குறைப்பதாக அறிவித்து இருக்கிறது. அந்த வகையில் மாருதி எஸ் பிரெஸ்ஸோ மாடலின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.

    புதிய அறிவிப்பின் படி எஸ் பிரெஸ்ஸோ VXi (O) AMT, VXi (O) AMT வேரியண்ட்களின் விலை ரூ. 5 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், மாருதி எஸ் பிரெஸ்ஸோ புதிய விலை ரூ. 5 லட்சத்து 71 ஆயிரம் மற்றும் ரூ. 6 லட்சம் என மாறியுள்ளது.

    இரண்டு வேரியண்ட்கள் தவிர மற்ற வேரியண்ட்களின் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. எஸ் பிரெஸ்ஸோ மாடலில் 998சிசி, K10C என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 49 கிலோவாட் பவர், 89 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    இத்துடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. இந்த கார் லிட்டருக்கு அதிகபட்சம் 25 கிலோமீட்டர்கள் வரையிலான மைலேஜ் வழங்கும் என சான்று பெற்றுள்ளது.

    இந்திய சந்தையில் மாருதி எஸ் பிரெஸ்ஸோ மாடலின் என்ட்ரி லெவல் விலை ரூ. 4 லட்சத்து 26 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 6 லட்சத்து 11 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த கார் Std, LXi, VXi, மற்றும் VXi (O) என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    • லேண்ட் குரூயிசர் 300 மாடல்களை திரும்ப பெற டொயோட்டா நிறுவனம் முடிவு.
    • எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக அப்டேட் செய்து கொடுப்பதாக தெரிவித்துள்ளது.

    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது லேண்ட் குரூயிசர் 300 ஆடம்பர எஸ்.யு.வி. மாடலை ரிகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. கடந்த பிப்ரவரி 2021 முதல் 2203 ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மொத்த 269 லேண்ட் குரூயிசர் 300 மாடல்களை திரும்ப பெற டொயோட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    லேண்ட் குரூயிசர் 300 மாடல்களின் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனின் ECU மென்பொருளை மாற்றியமைக்க முடிவு செய்திருப்பதால் கார்களை திரும்ப பெறுவதாக டொயோட்டா தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட கார்களின் மென்பொருளை எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக அப்டேட் செய்து கொடுப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

     


    மென்பொருள் முழுமையாக அப்டேட் செய்யப்படும் வரை வாடிக்கையாளர்கள் தொடர்ந்து காரை பயன்படுத்தலாம். பாதிக்கப்பட்ட கார்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை சம்பந்தப்பட்ட டொயோட்டா விற்பனை மையங்களை சேர்ந்த அதிகாரிகள் தொடர்பு கொள்வர். இது தொடர்பான சந்தேகம் மற்றும் விளக்கங்களை டொயோட்டா வாடிக்கையாளர் சேவை மையம் தெளிவுப்படுத்தும்.

    தற்போது விற்பனை செய்யப்படும் லேண்ட் குரூயிசர் LC300 மாடலின் விலை ரூ. 2 கோடியே 10 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது.

    இதில் 3.3 லிட்டர், V6 டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 305 ஹெச்.பி. பவர், 700 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 10-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    • எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. அறிமுகம் செய்ய எம்.ஜி. மோட்டார் திட்டம்.
    • இது எம்.ஜி.-யின் மூன்றாவது எலெக்ட்ரிக் கார் ஆகும்.

    எம்.ஜி. மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களை விரிவுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வரிசையில், புதிய எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலை எம்.ஜி. மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

    ஏற்கனவே எம்.ஜி. ZS EV மற்றும் கொமெட் EV என இரண்டு எலெக்ட்ரிக் கார்களை எம்.ஜி. நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. அந்த வரிசையில், எம்.ஜி.-யின் மூன்றாவது எலெக்ட்ரிக் கார் இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

     


    இந்த மாடல் 2024 பண்டிகை காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. வளர்ந்து வரும் இந்திய பொருளாதாரம் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை பயன்படுத்திக் கொள்ள எம்.ஜி. நிறுவனம் திட்டமிடுவதாக தெரிகிறது.

    எம்.ஜி. நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் எஸ்.யு.வி. மாடலாக இருக்கும் என்றும் இது இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எம்.ஜி.-யின் நிலையை வலுப்படுத்தும் வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    இந்த கார் அந்நிறுவனத்தின் பௌஜூன் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி.-யாக இருக்கும் என கூறப்படுகிறது. இதன் விலை ரூ. 10 லட்சம் பட்ஜெட்டிற்குள் நிலை நிறுத்தப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. 

    • இரு எலெக்ட்ரிக் வாகனங்களில் ஒன்று முற்றிலும் புதிய ரெனால்ட் க்விட் EV ஆகும்.
    • சர்வதேச சந்தையில் டேசியா ஸ்ப்ரிங் EV என அழைக்கப்படலாம்.

    இந்திய சந்தையில் ஆறு புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ரெனால்ட்-நிசான் அலையன்ஸ் சார்பில் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதில் இரண்டு எலெக்ட்ரிக் வாகனங்களும் அடங்கும். தற்போது இரண்டு எலெக்ட்ரிக் வாகனங்களில் ஒன்று முற்றிலும் புதிய ரெனால்ட் க்விட் EV என்பது தெரியவந்துள்ளது.

    டேசியா டஸ்டர் மாடலின் டிசைனை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் க்விட் EV மாடல் சர்வதேச சந்தையில் டேசியா ஸ்ப்ரிங் EV என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. இந்த காரின் முகப்பு பகுதியில் கிரில் மூடப்பட்டு முற்றிலும் புதிய டிசைன் கொண்ட எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன.

     


    இத்துடன் கிரில் பகுதியின் மத்தியில் அளவில் பெரிய DC லோகோ இடம்பெற்று இருக்கிறது. இதுவே காரின் சார்ஜிங் டாக் ஆகவும் செயல்படும் என்று தெரிகிறது. வெளிப்புற தோற்றத்தில் இந்த கார் அதன் ஐ.சி. என்ஜின் வெர்ஷனை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இதன் அலாய் வீல் வித்தியாசமாகவும், ரூஃப் ரெயில் மற்றும் டோர் கிளாடிங்கில் புளூ அக்சென்ச்ட்கள் செய்யப்பட்டுள்ளன.

    இதே போன்று காரின் பின்புறத்தில் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள், டுவீக் செய்யப்பட்ட பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் க்விட் எலெக்ட்ரிக் மாடலில் 26.8 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் வழங்கப்படும் எலெக்ட்ரிக் மோட்டார் 43 ஹெச்.பி. பவர், 125 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இந்திய சந்தையில் புதிய க்விட் EV மாடல் பன்ச் EV, சிட்ரோயன் eC3, டியாகோ EV மற்றும் எம்.ஜி. கொமெட் EV போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என்று தெரிகிறது.

    • முந்தைய மாதத்தை விட 37 சதவீதம் அதிகம் ஆகும்.
    • அதிகம் விற்பனையான கார்களின் பட்டியலிலும் பிரதிபலித்துள்ளது.

    இந்திய பயணிகள் வாகன சந்தைக்கு 2024 ஆண்டின் முதல் மாதம் நல்லவிதமாக அமைந்துள்ளது. 2024 ஜனவரி மாதத்தில் மட்டும் இந்திய சந்தையில் மொத்தம் 3 லட்சத்து 93 ஆயிரத்து 471 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

    இது கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தை விட 14 சதவீதமும், அதற்கும் முந்தைய மாதத்தை விட 37 சதவீதமும் அதிகம் ஆகும். வாகனங்கள் விற்பனையானது டாப் 10 அதிகம் விற்பனையான கார்களின் பட்டியலிலும் பிரதிபலித்துள்ளது.

    அந்த வகையில், ஜனவரி 2024 மாதத்தில் இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 10 கார்களின் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.

    மாதாந்திர விற்பனை விவரம்:

    மாருதி சுசுகி பலேனோ 19 ஆயிரத்து 630 யூனிட்கள்

    டாடா பன்ச் 17 ஆயிரத்து 978 யூனிட்கள்

    மாருதி சுசுகி வேகன்ஆர் 17 ஆயிரத்து 756 யூனிட்கள்

    டாடா நெக்சான் 17 ஆயிரத்து 182 யூனிட்கள்

    மாருதி சுசுகி டிசையர் 16 ஆயிரத்து 773 யூனிட்கள்

    மாருதி சுசுகி ஸ்விஃப்ட் 15 ஆயிரத்து 370 யூனிட்கள்

    மாருதி சுசுகி பிரெஸ்ஸா 15 ஆயிரத்து 303 யூனிட்கள்

    மாருதி சுசுகி எர்டிகா 14 ஆயிரத்து 632 யூனிட்கள்

    மஹிந்திரா ஸ்கார்பியோ 14 ஆயிரத்து 293 யூனிட்கள்

    மாருதி சுசுகி ஃபிரான்க்ஸ் 13 ஆயிரத்து 643 யூனிட்கள்

    • பாதுகாப்பான காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் என்ற பெருமையை தக்கவைத்தது.
    • இரு டாடா கார்களை பாதுகாப்பானவை என்று GNCAP அறிவித்து இருந்தது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முற்றிலும் புதிய நெக்சான் மாடல் குளோபல் என்கேப் என்கிற GNCAP டெஸ்ட்களில் பாதுகாப்பிற்கு ஐந்து நட்சத்திர குறியீடுகளை பெற்று அசத்தியிருக்கிறது. இதன் மூலம் நெக்சான் தொடர்ந்து பாதுகாப்பான காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் என்ற பெருமையை தக்கவைத்து கொண்டிருக்கிறது.

    ஏற்கனவே ஃபேஸ்லிஃப்ட்-க்கு முந்தைய நெக்சான் வெர்ஷனும், பாதுகாப்பிற்கு ஐந்து நட்சத்திர குறியீடுகளை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போதைய பரிசோதனையில் டாடா நெக்சான் மாடல் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முறையே 34-க்கு 32.22 புள்ளிகளையும் 49-க்கு 44.52 புள்ளிகளையும் பெற்று அசத்தி இருக்கிறது.

     


    சமீபத்தில் தான் டாடா சஃபாரி மற்றும் ஹேரியர் மாடல்களை பாதுகாப்பான கார்களாக GNCAP அறிவித்து இருந்தது. தற்போது நெக்சான் மாடல் இரண்டாவது இடம்பிடித்துள்ளது. பாதுகாப்பிற்கு டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ஆறு ஏர்பேக், ESC, ABS மற்றும் EBD, சீட்பெல்ட் ரிமைன்டர்கள், ISOFX மவுன்ட்கள் ஸ்டான்டர்டு அம்சங்களாக வழங்கப்பட்டு இருக்கின்றன.

    இத்துடன் பிலைன்ட் வியூ மானிட்டர், 360 டிகிரி சரவுன்ட் கேமரா, பார்க்கிங் சென்சார்கள், ஹில் ஹோல்டு கண்ட்ரோல், ஆட்டோ டிம்மிங் IRVM, ஃபாக் லேம்ப் மற்றும் கார்னெரிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    • டாடா எலெக்ட்ரிக் கார்களுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
    • சமீபத்தில் எம்.ஜி. நிறுவனம் தனது கொமெட் EV விலையை குறைத்தது.

    இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இரண்டு எலெக்ட்ரிக் கார்களின் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி டாடா நெக்சான் EV விலை அதிகபட்சமாக ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் வரை குறைந்துள்ளது.

    உலகளவில் பேட்டரி செல்களின் விலை கணிசமாக குறைந்து இருப்பதே திடீர் விலை குறைப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது. விலை குறைப்பு காரணமாக டாடா நெக்சான் EV மாடலின் பேஸ் வேரியன்ட் விலை ரூ. 14 லட்சத்து 49 ஆயிரம் என்று மாறி இருக்கிறது.

     


    டாடா நெக்சான் EV மாடலுக்கு குறைந்தபட்சமாக ரூ. 20 ஆயிரமும், அதிகபட்சம் ரூ. 1 லட்சத்து ஆயிரமும் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. டாடா டியாகோ EV மாடலின் விலை குறைந்தபட்சம் ரூ. 20 ஆயிரமும், அதிகபட்சம் ரூ. 70 ஆயிரம் வரை குறைக்கப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளன.

    தற்போதைய விலை குறைப்பு டாடா நெக்சான் EV மற்றும் டாடா டியாகோ EV தவிர டாடாவின் இதர எலெக்ட்ரிக் கார்களுக்கு பொருந்தாது. சமீபத்தில் எம்.ஜி. நிறுவனமும் தனது கொமெட் எலெக்ட்ரிக் காரின் விலையை குறைத்தது குறிப்பிடத்தக்கது.

    ×