search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    லிட்டருக்கு 90 கிலோமீட்டர் செல்லும் பஜாஜ் சிடி100 இந்தியாவில் அறிமுகம்
    X

    லிட்டருக்கு 90 கிலோமீட்டர் செல்லும் பஜாஜ் சிடி100 இந்தியாவில் அறிமுகம்

    எலெக்ட்ரிக் ஸ்டார்ட் வசதி கொண்ட பஜாஜ் நிறுவனத்தின் சிடி100 மாடல் பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் புதிய அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    பஜாஜ் சிடி100 எலெக்ட்ரிக் ஸ்டார்ட் கொண்ட மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அலாய் வீல் கொண்ட பஜாஜ் சிடி100 எலெக்ட்ரிக் ஸ்டார்ட் விலை ரூ.38,806 (எக்ஸ்-ஷோரூம், மும்பை) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    பஜாஜ் சிடி100 மாடல்களின் நான்காவது தலைமுறை மாடலாக வெளியிடப்பட்டுள்ள சிடி100 முந்தைய சிடி100B மாடலை விட ரூ.6,800 வரை அதிகம் ஆகும். புதிய சிடி100 ES அலாய் 99.27சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 8.08 bhp மற்றும் 8.05Nm டார்கியூ மற்றும் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

    மணிக்கு அதிகபட்சம் 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ள பஜாஜ் சிடி100 ES லிட்டருக்கு 90 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. பழைய மாடல்களில் இருந்து வித்தியாசப்படுத்தும் நோக்கில் சிடி100 மாடலுக்கு பஜாஜ் நிறுவனம் புதிய சலுகைகள், ஃபியூயல் காஜ், ஃப்ளெக்சிபிள் சைடு இன்டிகேட்டர்களை கொண்டுள்ளது. 

    ஃபிளேம் ரெட் மற்றும் எபோனி பிளாக் என இரண்டு வித நிறங்களில் கிடைக்கும் பஜாஜ் சிடி100 ES அலாய் முத்நைய மாடல்களை போன்றே நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×