search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    எலெக்ட்ரிக் மோட்டார் கொண்ட ராயல் என்ஃபீல்டு: ஸ்பை படங்கள்
    X

    எலெக்ட்ரிக் மோட்டார் கொண்ட ராயல் என்ஃபீல்டு: ஸ்பை படங்கள்

    ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 500 எலெக்ட்ரிக் மோட்டார் கொண்ட மாடல் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையயத்தில் கசிந்துள்ளது.
    தாய்லந்து:

    எலெக்ட்ரிக் மோட்டார் கொண்ட ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 மாடல் தாய்லாந்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

    தாய்லாந்தின் பேங்காக் நகரில் உள்ள விற்பனையகத்தில் எலெக்ட்ரிக் மோட்டார் கொண்ட ராயல் என்ஃபீல்டு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் எலெக்ட்ரிக் மோட்டார் கொண்ட மாடல் சார்ந்து எவ்வித தகவலும் இல்லாத நிலையில், புதிய புகைப்படம் வெளியாகியிருக்கிறது.

    ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 புகைப்படத்தில் 500சிசி சிங்கிள் சிலிண்டர் ஸ்வாப் செய்யப்பட்ட பேட்டரி இடம்பெற்றுள்ளது. பேட்டரி பேக் மற்றும் மோட்டார் வைக்க சிறிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இத்துடன் முழுமையான டிஜிட்டல் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் புதிய எலெக்ட்ரிக் மோட்டார் சிறப்பம்சங்கள் சார்ந்து எவ்வித தகவலும் இல்லை.

    என்.எஸ்.ஜி. படை வீரர்கள் பயன்படுத்திய ராயல் என்ஃபீல்டு 15 கிளாசிக் 500 ஸ்டெல்த் பிளாக் மோட்டார்சைக்கிள்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்திருந்தது.

    ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 மாடலில் 499 சிசி சிங்கிள்-சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் 27.2 பி.எச்.பி. பவர், 41.3 என்.எம். டார்கியூ மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தை பொருத்த வரை இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மாடலாக கிளாசிக் மாடல்கள் இருக்கிறது.
    Next Story
    ×