இணையதளம் மூலம் தி.மு.க. வெற்றிக்கு பாடுபடுங்கள்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் || Website by DMK MK Stalin to strive for success
Logo
சென்னை 30-06-2015 (செவ்வாய்க்கிழமை)
இணையதளம் மூலம் தி.மு.க. வெற்றிக்கு பாடுபடுங்கள்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
இணையதளம் மூலம் தி.மு.க. வெற்றிக்கு பாடுபடுங்கள்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை, மார்ச்.3-

தேவையற்ற பணிகளை தவிர்த்து, இணையதளம் மூலம் தி.மு.க. வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்று இளைஞர் அணியினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திராவிட இனமும், தமிழ்ச் சமுதாயமும் தி.மு.க.வின் பணிகளால் மிகப்பெரிய பலன்களை பெற்று இன்று உயர்ந்து நிற்பதை இளைய தலைமுறைக்கு எடுத்துச்சொல்லி உண்மைகளை அவர்களின் நெஞ்சில் விதைக்க வேண்டியது நமது தலையாய பணியாகும்.

இணையதளம் என்பது ‘பேஸ்புக்’ மட்டுமல்ல, வலைதளம், டுவிட்டர் உள்பட அவற்றில் பல வகைகள் உள்ளன. இவை அனைத்திலும் நமது பணி சிறக்கும் வகையில் இளைஞர் அணியினரின் செயல்பாடு அமைய வேண்டும். அவற்றில் கவனம் செலுத்த வேண்டும். இணையதள தி.மு.க. நண்பர்கள் பொதுவெளியில் நிகழ்ச்சிகளை நடத்துவதிலும், பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகளை நடத்துவதிலும் ஆர்வம் காட்டுவதும், அதற்காகவே நேரத்தை செலவழிப்பதும் எவ்வகையிலும் தி.மு.க.வுக்கு பயன் தராது. அது இணையதள செயல்பாடும் ஆகாது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிற நிலையில் மாற்றுக்கட்சியினரும், தி.மு.க.வின் எதிரிகளும் நம் மீது சுமத்தும் அவதூறுகளை பொடிபொடியாக்கிடும் விதத்தில் உண்மை தகவல்களை இணையதளத்தில் உடனுக்குடன் பதிவு செய்திட வேண்டும்.

பெரியார், அண்ணா போன்ற நம் இயக்கத்தின் பெரும் தலைவர்களும், அவர்களுக்கு துணையாக பாடுபட்ட தலைவர்களும் இந்த சமுதாயத்தின் உயர்வுக்காக எப்படி பாடுபட்டார்கள் என்ற வரலாற்று நிகழ்வுகளை எடுத்துச்சொல்ல வேண்டும். தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சாதனைகளையும், அதனால் இந்த சமுதாயம் பெற்ற பயன்களையும் அழுத்தமாக குறிப்பிட வேண்டும்.

மத்திய அரசிடம் வாதாடி, போராடி தமிழகத்துக்கு தி.மு.க. பெற்று தந்த பலன்களை குறிப்பிட வேண்டும். இளைய சமுதாயத்தினருக்கு தி.மு.க.வின் தியாக வரலாற்றை எடுத்துச்சொல்லி, அவர்களும் தி.மு.க.வுக்கு ஆதரவான நிலையில் மேற்கொள்ளும் வகையில் பரப்புரை பணியை மேற்கொள்ள வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் இணையதளத்தில் செயல்படும் ஒவ்வொருவரும் தங்கள் பணியின் மூலமாக தி.மு.க.வுக்கு ஆதரவானவர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.

தேவையற்ற வேலைகளை தவிர்த்து, ஆக்கப்பூர்வமான பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

மெட்ரோ ரெயிலில் பயணிக்க டிக்கெட்டுக்கு பதில் டோக்கன் வழங்கப்படும்

மெட்ரோ ரெயிலில் பயணிக்க டிக்கெட்டுக்கு பதில் டோக்கன் வழங்கப்படுகிறது. மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய வருபவர்கள், முதலாவதாக ....»

MM-SCLV-Tamil.gif