இனம் திரைப்படம் உருவான விதம்: மனம் திறக்கிறார் சந்தோஷ் சிவன் || making inam movie Santosh Sivan cinema
Logo
சென்னை 11-02-2016 (வியாழக்கிழமை)
  • 20 ஆயிரம் வாக்குசாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்: தலைமை தேர்தல் ஆணையர்
  • ராணுவ வீரர் ஹனுமந்தப்பா உடலுக்கு ராகுல்காந்தி, மனோகர் பாரிக்கர், கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மரியாதை
இனம் திரைப்படம் உருவான விதம்: மனம் திறக்கிறார் சந்தோஷ் சிவன்
இனம் திரைப்படம் உருவான விதம்: மனம் திறக்கிறார் சந்தோஷ் சிவன்
சினிமா ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான சந்தோஷ் சிவன், 'இனம்' என்ற தலைப்பில் இலங்கையை களமாகக் கொண்டு ஒரு திரைப்படத்தினை இயக்கி வருகிறார். இப்படம் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் தயாராகிறது.

இப்படத்தைப் பற்றி இயக்குனர் சந்தோஷ் சிவன் கூறும்போது, “நான் என் நண்பர் ஒருவர் வீட்டிற்கு மதிய உணவுக்கு சென்றிருந்தேன். அங்கு இலங்கை பாரம்பரிய உணவுகளை தயார் செய்திருந்தார்கள். யார் இதையெல்லாம் செய்தார்கள் என்று கேட்டதற்கு ஒரு பெண்தான் இந்த உணவையெல்லாம் செய்தார் என்று கூறினார். அந்த பெண்ணை நான் பார்த்தேன், அவர் எதுவும் பேசவில்லை. ஆனால் அந்த பெண்ணின் கண்களில் ஒரு கதை தெரிந்தது. விசாரித்தபோது அவர் இலங்கை அகதி என்பது தெரிந்தது. ஒரு அகதி அங்கு இருந்து இங்கு வந்து எப்படி இருக்கிறார், என்ன ஆச்சு, என்று பல கேள்விகள் என்னுள் எழுந்து என் மனசே கேட்கவில்லை. அதுதான் ‘இனம்’ படம் உருவாக காரணமாக இருந்தது.

பொதுவாக இந்த மாதிரி படங்களை உருவாக்க ஒரு டீம் கிடைப்பது கடினம். ஆனால் எனக்கு நல்ல டீம் கிடைத்திருக்கிறது. இனம் படத்தை சென்சார் போர்டு பார்க்கும் போது நல்ல வரவேற்பு கிடைத்தது. இதில் முக்கியமான வரவேற்பாக இயக்குனர் லிங்குசாமி படத்தை பார்த்து நான் இந்தப் படத்தை வெளியிடுகிறேன் என்று கூறியது எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. அதற்கு நான் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படத்திற்கான ஆய்வு 3, 4 வருடமாக நடந்தது. ஒரு அகதியை வைத்துதான் கதைக்களத்தை அமைக்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது. ஆதரவற்றவர்களை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது. பல ஆதரவற்றவர்கள் ஒன்று கூடி ஒரு குடும்பமாக செயல்படுகிறார்கள். இவற்றின் பின்னணியில் கதை நகரும். மகாராஷ்டிரா, கேரளா, திருநெல்வேலி, இலங்கை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது.

இப்படம் ஆங்கிலத்தில் 'சிலோன்' என்ற பெயரிலும் தமிழில் ‘இனம்’ என்ற பெயரிலும் வெளிவர உள்ளது” என்றார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - சினிமா செய்திகள்

section1

பிப்ரவரி இறுதியில் கபாலி டீசர் வெளியாகிறது

ந் தேதிக்குள் படப்பிடிப்பு முடிந்துவிடும். படக்குழு சென்னை வந்ததும் பிப்ரவரி 25-ந் தேதிக்கு மேல் டீசரை ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif