கடலூர் அருகே தமிழக வாழ்வுரிமை கட்சி கொடிகம்பம் உடைப்பு: தொண்டர்கள் சாலை மறியல் || tamilaga valvurimai katchi flag attack members siege
Logo
சென்னை 02-02-2015 (திங்கட்கிழமை)
  • சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து கோபானி நகரம் மீட்பு
  • ஜப்பானின் 2-வது பணயக் கைதியும் தலை துண்டித்து கொலை: ஒபாமா கடும் கண்டனம்
  • தாயகம் திரும்பி செல்வது குறித்து இலங்கை தமிழர்களிடம் கருத்து கேட்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • டெல்லியில் ஆட்சியை பிடித்தால் மீண்டும் ராஜினாமா செய்யமாட்டேன்: கெஜ்ரிவால் உறுதி
கடலூர் அருகே தமிழக வாழ்வுரிமை கட்சி கொடிகம்பம் உடைப்பு: தொண்டர்கள் சாலை மறியல்
கடலூர் அருகே தமிழக வாழ்வுரிமை கட்சி கொடிகம்பம் உடைப்பு: தொண்டர்கள் சாலை மறியல்

கடலூர், ஜன.1–

கடலூரை அடுத்த பில்லாலிதொட்டி கிராமத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி கொடி கம்பம் நடப்பட்டிருந்தது. நேற்று நள்ளிரவில் மர்ம கும்பல், இரும்பினாலான அந்த கொடி கம்பத்தை உடைத்து சேதப்படுத்தியது. பின்னர் அதனை அந்த பகுதியில் தூக்கி வீசிவிட்டு தப்பி சென்றது.

இன்று காலையில் கொடி கம்பம் உடைக்கப்பட்டிருப்பதை கண்ட கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவல் பரவியவுடன் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆத்திரத்துடன் திரண்டனர்.

கட்சி கொடிகம்பத்தை சேதப்படுத்திய மர்ம மனிதர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடலூர்–பாலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி அறிந்தவுடன் நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, போலீசார் விரைந்து வந்தனர். கொடிகம்பத்தை சேதப்படுத்தியவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதாக கூறி அந்த கட்சியினரை சமாதானப்படுத்தினர். அதையடுத்து சுமார் ½ மணி நேரமாக நடந்த மறியல் முடிவுக்கு வந்தது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - கடலூர்

section1

வேப்பூர் அருகே 10–ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு: விவசாயி கைது

திட்டக்குடி, ஜன.1–கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கொளவாய் கிராமத்தை சேர்ந்தவர் செல்வி (வயது 15) (பெயர் ....»