புதிய நீதிகட்சி பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி?: ஏ.சி. சண்முகம் பேட்டி || puthiya neethi katchi parliament election who alliance ac shanmugam interview
Logo
சென்னை 28-08-2014 (வியாழக்கிழமை)
  • பிரதமர் மோடி ஜன்தன் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார்
  • இந்திய ராணுவம் தான் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்துகிறது: பாகிஸ்தான் குற்றச்சாட்டு
புதிய நீதிகட்சி பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி?: ஏ.சி. சண்முகம் பேட்டி
புதிய நீதிகட்சி பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி?: ஏ.சி. சண்முகம் பேட்டி

காஞ்சிபுரம், டிச. 16–

காஞ்சிபுரம் மாவட்ட புதிய நீதிக்கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் நடராஜன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் புதிய நீதிக் கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி சண்முகம் கலந்து கொண்டு பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

தமிழக அரசியலில் தற்போது பா.ஜ.க. மூன்றாவது அணியாக வந்துள்ளது. விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்த காங்கிரஸ் முன்வர வேண்டும். பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வினால் விலைவாசி அதிகரித்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த பெட்ரோல் டீசல் விலையினை உயர்த்தக் கூடாது. மேலும் மத்திய அரசு சேவை வரி உயர்வினை திரும்பப் பெற வேண்டும்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மும்முனைப் போட்டி நிகழும் புதிய நீதிக் கட்சியின் ஆதரவு யாருக்கு என்பது எங்களது கட்சியின் பொதுக் குழுவில் தீர்மானம் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்டத் தலைவர் கங்காதரன், நிர்வாகிகள் ராஜேந்திரன், கன்னியப்பன், பாலசுப்பிரமணி, ரவிக்குமார், சேதுராமன் உள்ளிட்ட பலர் பழனி பங்கேற்றனர்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - காஞ்சிபுரம்

section1

என்ஜினீயர் மனைவி கொலை: கள்ளக்காதலன்– நண்பர்களிடம் விசாரணை

தாம்பரம், டிச. 15–தாம்பரத்தை அடுத்த சேலையூர், மாடம்பாக்கம் டெல்லஸ் அவென்யூவில் வசித்து வந்தவர் ரோகன் சங்கர். ....»