'மாஸ்டர்’ ஸ்ரீதர் திடீர் மரணம்: மாரடைப்பால் உயிர் பிரிந்தது || Master Sridhar sudden death
Logo
சென்னை 31-10-2014 (வெள்ளிக்கிழமை)
  • புனே அருகே 7 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்து
  • மராட்டிய மாநில் முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் இன்று பதவியேற்பு
  • சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட 2.5 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்
  • ராமநாதபுரத்தில் போராட்டம்: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • 30–ம் ஆண்டு நினைவு தினம்: இந்திரா சமாதியில் சோனியா, மன்மோகன், ராகுல் அஞ்சலி
  • இலங்கை நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பார்வையிட்டார்
  • தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை திகார் சிறைக்கு மாற்ற வேண்டும்: சுப்ரமணியசாமி
  • போபால் விஷவாயு கசிவு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான வாரன் ஆண்டர்சன் உயிரிழந்தார்
'மாஸ்டர்’ ஸ்ரீதர் திடீர் மரணம்: மாரடைப்பால் உயிர் பிரிந்தது
'மாஸ்டர்’ ஸ்ரீதர் திடீர் மரணம்: மாரடைப்பால் உயிர் பிரிந்தது
நடிகர் ‘மாஸ்டர்’ ஸ்ரீதர் இன்று அதிகாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 60.

மாஸ்டர் ஸ்ரீதர் ‘குறத்தி மகன்’ படத்தில் ஜெயசித்ரா ஜோடியாக நடித்தார். ‘கர்ணன்’ படத்தில் சிவாஜியுடன் நடித்துள்ளார். ‘கந்தன் கருணை’ படத்தில் முருக கடவுள் வேடத்தில் வந்தார். 150–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஏராளமான நாடகங்களிலும் நடித்துள்ளார்.

மாஸ்டர் ஸ்ரீதருக்கு நீண்ட நாட்களாக ஆஸ்துமா கோளாறு இருந்தது. அதற்கு சிகிச்சை பெற்று வந்தார். இன்று அதிகாலை 4 மணிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு சிறிது நேரத்தில் உயிர் பிரிந்தது.

மரணம் அடைந்த மாஸ்டர் ஸ்ரீதருக்கு இந்திரா என்ற மனைவியும், பிரசாந்த், ரக்ஷித் பாலாஜி என்ற மகன்களும் உள்ளனர். மாஸ்டர் ஸ்ரீதர் உடல் கொட்டிவாக்கம் கற்பகாம்பாள் நகரில் உள்ள வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.

நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி உள்ளிட்ட திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். இன்று மாலை பெசன்ட் நகர் மயானத்தில் இறுதி சடங்கு நடக்கிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - சினிமா செய்திகள்

section1

நடிகை இந்துவுக்கு செக்ஸ் தொல்லை: போலீசில் புகார்

ஜெய் ஆகாஷ் நடித்த ‘காதலுக்கு கண்ணில்லை’ படத்தை தயாரித்தவர் ஒய்.இந்து. இவர் அந்த படத்துக்கு கதை, ....»