ஆதிவாசிகள் கிராமத்தில் துப்பாக்கியுடன் திரிந்த மாவோயிஸ்டுகள் அடையாளம் தெரிந்தது: போட்டோவை காட்டி விசாரித்தனர் || gun with Maoists identified
Logo
சென்னை 29-11-2015 (ஞாயிற்றுக்கிழமை)
ஆதிவாசிகள் கிராமத்தில் துப்பாக்கியுடன் திரிந்த மாவோயிஸ்டுகள் அடையாளம் தெரிந்தது: போட்டோவை காட்டி விசாரித்தனர்
ஆதிவாசிகள் கிராமத்தில் துப்பாக்கியுடன் திரிந்த மாவோயிஸ்டுகள் அடையாளம் தெரிந்தது: போட்டோவை காட்டி விசாரித்தனர்

கூடலூர், நவ. 14–

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ளது முச்சிக்குன்னு. இங்கு ஆதிவாசி இனத்தவர்கள் வசித்து வருகிறார்கள்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு 7 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கிகளுடன் இந்த கிராமத்துக்குள் புகுந்தது. காக்கி சீருடை அணிந் திருந்தனர். துப்பாக்கியுடன் வந்த அந்த கும்பல் ‘நாங்கள் மாவோயிஸ்டு இயக்கத்தை சேர்ந்தவர்கள் நீங்கள் அனைவரும் எங்கள் இயக்கத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்’ என தமிழ், இந்தி, மலையாளத்தில் பேசினர். துண்டு பிரசுரங்களையும் வினியோகம் செய்தனர். 1 மணி நேரம் அங்கு தங்கியிருந்த அவர்கள் ஆதிவாசிகள் வீட்டிலிருந்த அரிசி, பருப்பு மற்றும் பொருட்களை வாங்கிக்கொண்டு சென்று விட்டனர்.

இது குறித்து ஆதிவாசிகள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசாரும், வனத்துறையினரும் அந்த பகுதியில் சல்லடை போட்டு தேடினர். யாரும் கிடைக்க வில்லை.

இந்நிலையில் கேரள– தமிழக எல்லையில் உள்ள கூடலூர், பந்தலூர், சேரம் பாடி பகுதிகளில் முகாமிட்டிருந்த அதிவிரைவு படையினர் முச்சிக்குன்னு பகுதியில் தேடுதல் வேட்டையை தொடங்கினார்கள். முச்சிக்குன்னு கிராம ஆதிவாசி மக்களிடம் போட்டோக்களை காட்டி துப்பாக்கியுடன் வந்தவர்களில் இதில் யாராவது இருக்கிறார்களா? என்று கேட்டனர்.

அப்போது கிராம மக்கள் போட்டோவில் இருந்த 2 பேரை அடையாளம் காட்டினர். விசாரணையில் அவர்கள் இருவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரிய வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து தேடுதல் வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - நீலகிரி

MudaliyarMatrimony_300x100px.gif