திருப்பூர் மாவட்டத்தில் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 1942 பேர் மீது வழக்கு: கலெக்டர் கோவிந்தராஜ் தகவல் || case filed against Cellphone Speaking Drivers
Logo
சென்னை 15-02-2016 (திங்கட்கிழமை)
திருப்பூர் மாவட்டத்தில் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 1942 பேர் மீது வழக்கு: கலெக்டர் கோவிந்தராஜ் தகவல்
திருப்பூர் மாவட்டத்தில் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 1942 பேர் மீது வழக்கு: கலெக்டர் கோவிந்தராஜ் தகவல்

திருப்பூர், நவ. 1–

திருப்பூர் மாவட்ட தன்னார்வ நுகர்வோர் அமைப்பினரின் கலந்தாய்வுக் கூட்டம் கலெக்டர் கோவிந்த ராஜ் தலைமையில் நடைபெற்றது.

கோவை மண்டல நுகர்வோர் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் சொக்கலிங்கம், மாவட்ட வழங்கல் அலுவலர் கணேசசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நுகர்வோர் குழு உறுப்பினர்களிடமிருந்து காவல்துறை, மாநகராட்சி, போக்குவரத்து ,நெடுஞ்சாலைத்துறை ஆகிய துறைகள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டு அந்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

கலந்தாய்வு கூட்டத்தில் கலெக்டர் கோவிந்தராஜ் பேசியதாவது:–

திருப்பூர் மாவட்டத்தில் விபத்துக்களை தடுக்கும் பொருட்டு செல்போன் உபயோகித்து வாகனம் ஓட்டிய 1942 வாகன ஓட்டிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்கும்பொருட்டு அவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அவ்வாறு விழிப்புணர்வு ஏற்படும் பட்சத்தில் விபத்துகள் வெகுவாக குறையும்.

மேலும் இருசக்கர வாகனம் உபயோகிப்பவர்கள் தலைக் கவசம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும். போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் வாகனங்கள் காவல் துறையின் மூலம் அகற்றி போக்குவரத்தை இடையூறின்றி இருக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநகராட்சியின் மூலம் நொய்யலாற்றில் உள்ள ஆகாய தாமரைச் செடிகள் மாநகராட்சி நிதியிலிருந்து செலவு செய்து அகற்றப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத்துறையின் மூலம் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையின் உயரத்தை குறைக்கவும், தேவையான இடங்களில் போக்குவரத்திற்கு வசதியாக பிரதிபலிப்பு பெயர்பலகையை வைக்கவும், சாலைகளில் பிரதிபலிப்பான் பொறுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

உணவகங்களில் விலைப் பட்டியல் வைக்க உணவகங்கள் உரிமையாளர்கள் சங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டு விரைவில் விலைப் பட்டியல் பலகை வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் நுகர்வோரின் நலன் கருதி இக்குழுவினர் வழங்கும் மனுக்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேற்கண்டவாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர், காவல் துறை அலுவலர்கள், போக்குவரத்து கழக அலுவலர்கள், போக்குவரத்து துறை அலுவலர்கள், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பிற துறை அலுவலர்கள, நுகர்வோர் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - திருப்பூர்

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif