பள்ளிபாளையத்தில் தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொலை || Pallipalayam near worker murder
Logo
சென்னை 04-05-2015 (திங்கட்கிழமை)
  • அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கியது
  • பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்: லட்சணக்கான பக்தர்கள் குவிந்தனர்
  • மங்களூரில் நடைபெற்று வரும் தேசிய தடகள போட்டியில் தமிழக வீராங்கனை சூர்யா தங்கம்
  • திண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் பலி
பள்ளிபாளையத்தில் தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொலை
பள்ளிபாளையத்தில் தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொலை

பள்ளிபாளையம், அக்.14–

பள்ளிபாளையம் ஓடப்பள்ளி அணைக்கட்டு பகுதியில் அழுகிய நிலையில் ஒருவர் பிணமாக கிடப்பதாக பள்ளிபாளையம் போலீசுக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சாந்தமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அப்போது பிணமாக கிடந்த வாலிபர் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

மேலும் அரை நிர்வாணமாக கிடந்தார். அதோடு கொலை செய்யப்பட்டு 4 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதால் உடல் அழுகிய போய் துர்நாற்றம் வீசியது.

போலீசார் விசாரணையில் இவர் தொழிலாளியாக இருக்கலாம் என்று தெரியவந்தது. ஆனால் அவர்,

பெயர் விபரம் ஏதும் தெரியவில்லை. இதையடுத்து போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தொழிலாளி பிணமாக கிடந்த இடம் ஒதுக்குப்புறமான இடமாகும். எனவே இவர் எதற்காக இங்கு வந்தார் என்றும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - மாநிலச்செய்திகள்

section1

ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் சப்ளை இல்லை: பொதுமக்கள் ஏமாற்றம்

தமிழகத்தில் நுகர்பொருள் வாணிபக்கழகம், கூட்டுறவு சங்கம், கூட்டுறவு நிறுவனங்கள், அமுதம் நியாயவிலை கடைகள் மூலம் ஏழை-எளிய, ....»

amarprakash160-600.gif