மலைவாழ் மக்கள் பள்ளியில் 94 மாணவர்களுக்கு ஒரே ஒரு ஆசிரியர் || Only one teacher for 94 students
Logo
சென்னை 23-10-2014 (வியாழக்கிழமை)
மலைவாழ் மக்கள் பள்ளியில் 94 மாணவர்களுக்கு ஒரே ஒரு ஆசிரியர்
மலைவாழ் மக்கள் பள்ளியில் 94 மாணவர்களுக்கு ஒரே ஒரு ஆசிரியர்

பொள்ளாச்சி, அக். 2–

பொள்ளாச்சியில் இருந்து 35 கி.மீ. தூரத்தில் உள்ளது டாப்சிலிப். இங்கு அரசு மலைவாழ் மக்கள் உண்டு உறைவிடப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 94 மாணவ–மாணவிகள் படித்து வருகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார். சராசரியாக 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். 3 ஆசிரியர்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில் ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளதால் மாணவ–மாணவிகளுக்கு சரியாக கல்வி கற்றுத்தர முடியவில்லை.

மேலும் டாப்சிலிப் மலைப்பாங்கான பகுதி என்பதால் ஆசிரியர்களும் இங்கு பணியாற்ற விரும்பி வருவதில்லை. மலைவாழ் மக்கள் நலன் கருதி டாப்சிலிப் அரசு மலைவாழ் மக்கள் உண்டு உறைவிடப்பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்களா? என்பது குறித்து கல்வி அதிகாரிகளிடம் கேட்ட போது கூடுதலாக ஆசிரியரை நியமிக்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம் என்று கூறினார்கள்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - கோவை

section1

அடுத்த வாரம் காதலனுடன் திருமணம்: இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

கோவை, அக். 23–கோவை சரவணம்பட்டி சின்னவேடம்பட்டி அஞ்சுகம் நகரை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகள் சத்யா ....»

Maalaimalar.gif
Maalaimalar.gif