சூலூர் ஒன்றிய அலுவலக மாடியில் 67 வகை கீரை தோட்டம் || lettuce garden on the terrace
Logo
சென்னை 11-02-2016 (வியாழக்கிழமை)
சூலூர் ஒன்றிய அலுவலக மாடியில் 67 வகை கீரை தோட்டம்
சூலூர் ஒன்றிய அலுவலக மாடியில் 67 வகை கீரை தோட்டம்

சூலூர், செப். 17–

கோவையை அடுத்துள்ளது சூலூர். அங்குள்ள பெரியகுளம் அருகே புதிதாக அமைந்துள்ளது சூலூர் ஒன்றிய அலுவலகம்.

அதன் மொட்டை மாடியில் ரூ. 3 லட்சம் செலவில் 7500 சதுர அடி பரப்பளவில் தரை தளத்திலிருந்து அரை அடி உயர்வுக்கு சவுக்கு மரக்கட்டைகளால் சாரம் அமைத்து, இயற்கை உரம், செம்மண், தேங்காய் மஞ்சி போன்றவைகளை 720 மூங்கில் கூடைகளில் கொட்டி செயற்கை கலக்காமல் இயற்கையான முறையில் காய்கள், கீரைகள் போன்ற 67–வகையான பயிர்களை பயிரிட்டுள்ளனர்.

மேலும் கொடிகள் படர்வதற்கென தனி கவனம் செலுத்தப்பட்டு, சுவற்றை ஒட்டியே கயிற்றால் பந்தலும் அமைத்துள்ளனர்.

அனைத்து செடி கொடிகளுக்கும் தேவையான தண்ணீரை நீர்த் தொட்டிகளில் இருந்து தனித்தனி குழாய்கள் மூலம் பாய்ச்சுவதற்கு வழிவகை செய்துள்ளனர். இயற்கையான முறையில் பராமரிக்கப்பட்டு இங்கு வளரும் சத்தான கீரை, காய்களை அறுவடைசெய்து ஒன்றியத்திற்கு உட்பட்ட சத்துணவுக் கூடங்களுக்கும், அலுவலக பணியாளர்களுக்கும் மலிவு விலையில் ஒன்றிய அலுவலகத்தின் மூலம் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.

இது குறித்து சூலூர் ஒன்றியக் குழுத்தலைவர் மாதப்பூர் பாலுவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–

பருவநிலை மாற்றங்களாலும், விவசாய நிலங்கள் சுருங்கி வருவதாலும், விளை நிலங்கள் எல்லாம் விலை நிலங்களாக மாறி வருவதாலும் விவசாயத் தொழில் சிறுக, சிறுக மறைந்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், இது போன்ற வீட்டுத் தோட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அப்பொழுது தான் விவசாயத்தின் மேல் நாட்டம் கொண்டு மக்கள் தங்கள் அன்றாட தேவைக்கான காய்கறிகளை தாங்களாகவே பயிரிட்டு சுகாதாரமான முறையில் வளர்த்து, அவற்றை பயன்படுத்திக் கொள்ள முன்வருவார்கள்.

அதற்காகவும, விவசாயத்தை ஊக்குவிக்கவும், பொது மக்கள் விழிப்புணர்வு பெறவும் தமிழக முதல்வர் அவர்களின் கனவு திட்டமான இதனை இங்கு நிறைவேற்றியுள்ளோம்.

கோவை மாவட்டத்தில் முதல் முறையாக இந்தத் திட்டத்தை விவசாயத்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோரின் அனுமதியுடன் முன்மாதிரியாக சூலூர் ஒன்றிய அலுவலக மொட்டை மாடியில் அலுவலக பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஒத்துழைப்புடன் செயல் படுத்தியுள்ளோம்.

தற்போது இங்கு விளையும் கீரை வகைகளை ஒன்றிய அலுவலக ஊழியர்களுக்கும், சத்துணவு கூடங்களுக்கும் வினியோகம் செய்து வருகிறோம். கூடிய விரைவில் பொது மக்களுக்கும் விற்பனை செய்ய உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - கோவை

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif