7 தலிபான் தீவிரவாதிகளை விடுவித்தது பாகிஸ்தான் அரசு || 7 Taliban terrorist release pakistan government
Logo
சென்னை 27-11-2014 (வியாழக்கிழமை)
7 தலிபான் தீவிரவாதிகளை விடுவித்தது பாகிஸ்தான் அரசு
7 தலிபான் தீவிரவாதிகளை விடுவித்தது பாகிஸ்தான் அரசு
இஸ்லாமாபாத், செப்டம்பர் 7-

ஆப்கனிஸ்தான் நாடு உள்நாட்டுப் போராளிகளான தலிபான் தீவிரவாதிகளின் தொடர் தாக்கத்தினால் சிதறுண்டு கிடக்கின்றது. இவர்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் இந்த உள்நாட்டுக் கலவரங்களை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அரசு முயற்சித்து வருகின்றது. ஆப்கானிஸ்தானின் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு உதவும் விதமாக ஏழு தலிபான் தீவிரவாதிகளை விடுவித்துள்ளதாக பாகிஸ்தான் அரசு இன்று தெரிவித்துள்ளது. 

மன்சூர் ததுல்லா, சயித் வாலி, அப்துல் மனன், கரீம் ஆகா, ஷெர் அப்சல், குல் முகமது மற்றும் முகமது சை ஆகியோரை விடுதலை செய்துள்ளதாக அறிவித்த பாகிஸ்தான் அரசு சென்ற வருடமும் 26 தலிபான் தீவிரவாதிகளை விடுவித்துள்ளதைக் குறிப்பிட்டது. 

கடந்த ஜூன் மாதத்தில் தலிபான் கிளர்ச்சியாளர்கள் தங்களது அரசியல் அலுவலகம் ஒன்றை கத்தார் நாட்டில் திறந்தனர். ஆப்கானிஸ்தான் அரசுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இது ஒரு முன்னோடியாகக் கருதப்பட்டது. ஆயினும், தலிபான் தலைவர்கள் கர்சாயை அமெரிக்காவின் கைப்பாவை என்று குறிப்பிட்டு அவருடன் எந்தப் பேச்சுவார்த்தைக்கும் தயாராக இல்லை என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார்கள். சென்ற வாரத்தில் ஆப்கனிஸ்தானின் அதிபர் ஹமித் கர்சாய் இரண்டு நாட்கள் அரசுமுறைப் பயணமாக பாகிஸ்தான் சென்றார்.மே மாதம் நடந்த பொதுத் தேர்தலில் பாகிஸ்தானின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நவாஸ் ஷெரிப்பை அவர் முதன்முதலாக இப்போதுதான் சந்தித்தார்.

தலிபான் தீவிரவாதிகளுடனான பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் உதவ வேண்டும் என்று கர்சாய் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாகிஸ்தான் அரசு தலிபான் இயக்கத்தின் மீது எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

சிரியாவில் வான்வழி தாக்குதலில் 63 பேர் உயிரிழப்பு

ஈராக் மற்றும் சிரியா நாடுகளின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்கும் ....»