உணவு பாதுகாப்பு மசோதா: சோனியாகாந்திக்கு கருணாநிதி பாராட்டு || Food security bill Sonia Gandhi appreciation Karunanidhi
Logo
சென்னை 03-09-2014 (புதன்கிழமை)
  • உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக தத்து நியமனம்
  • சென்னையில் கருணாநிதி தலைமையில் இன்று டெசோ ஆர்ப்பாட்டம்
  • ராமேசுவரம் மீனவர்கள் 3-வது நாளாக உண்ணாவிரத போராட்டம்
  • என்.எல்.சி தொழிலாளர்கள் இன்று இரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்
உணவு பாதுகாப்பு மசோதா: சோனியாகாந்திக்கு கருணாநிதி பாராட்டு
உணவு பாதுகாப்பு மசோதா: சோனியாகாந்திக்கு கருணாநிதி பாராட்டு

சென்னை, ஆக. 27–

தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி: திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நீங்கள் கொடுத்த முக்கிய திருத்தங்களை ஏற்றுக்கொண்டு, நாடாளுமன்றத்தில் உணவுப் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறதே, அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: இந்தியத் திருநாடு விடுதலை பெற்று 66 ஆண்டுகளுக்குப் பிறகு, உணவு உரிமைக்கான சட்டம் நாடாளுமன்றத்திலே நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஏழை எளியோர் மகிழ்ச்சிப் பெருக்கோடு இதனை வரவேற்பார்கள் என்று நான் நம்புகிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், மற்ற கட்சிகளின் சார்பிலும் கொடுத்த முக்கியமான திருத்தங்களை ஏற்றுக் கொண்டிருப்பது திருப்தி அளிக்கிறது.

இந்தச் சட்டத்திலே இன்னும் செய்ய வேண்டிய ஒரு சில திருத்தங்கள் இருக்கின்றன. காலப்போக்கில் அவ்வப்போது ஏற்படுகின்ற அனுபவங்களின் அடிப்படையில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என்று நான் எதிர்பார்க்கிறேன். “பிடிக்காதவர்கள் கை பட்டால் குற்றம் கால்பட்டால் குற்றம்” என்ற மனப்பான்மை உள்ளவர்கள் வேண்டுமானால், இந்த மசோதாவை முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும், எதிர்க்க வேண்டும் என்ற நிலைமை இருக்கலாம்.

ஆனால் இது போன்ற பிரச்சினைகளில் வறட்டுப் பிடிவாதம் எதுவும் காட்டாமல், நல்லதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் அனைவருக்கும் இருக்க வேண்டும். முக்கிய எதிர்க்கட்சிகள் எல்லாம் கூட தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து விட்டு அதே நேரத்தில் மசோதாவை வரவேற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமூகமான முறையில் இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியிருப்பதற்காகவும், திராவிட முன்னேற்றக் கழகம் தந்த திருத்தங்களை ஏற்றுக் கொண்டிருப்பதற்காகவும் இந்தியாவில் உள்ள ஏழை எளிய, சாதாரண சாமான்ய, அடித்தட்டு மக்கள், மற்றும் நடுத்தர குடும்பத்தினரின் சார்பாக நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் அதற்கு வாக்களித்த பெருமக்களுக்கும், இந்த மசோதாவைக் கொண்டு வருவதற்குக் காரணமாக இருந்த அம்மையார் சோனியா காந்திக்கும் நான் என்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கே: தமிழக மீனவர்கள் 35 பேர் மீண்டும் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்களே?

ப: தமிழக மீனவர்கள் பிரச்சினை பற்றி தொடர்ந்து நான் எழுதிக் கொண்டே வருகிறேன். மேலும் மேலும் இலங்கை சிங்களவர்களின் வெறியாட்டம் தாங்க முடியாத அளவிற்குப் போய்க் கொண்டிருக்கிறது. இதற்கு ஒரு விடிவு காலம் காணப்பட வேண்டும். அதற்கு நம்முடைய பிரதமரும், சோனியா காந்தி அம்மையாரும் மத்திய அரசும் பொறுப்பேற்று உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கப்படுமென்று சொல்லிக் கொண்டே காலத்தைக் கடத்தினால், நம்முடைய மீனவர்களின் கதி அதோகதியாகிவிடும்.

கே: சொத்துக் குவிப்பு வழக்கில் நீங்கள் கேட்டுக் கொண்டவாறு அரசு வழக்கறிஞர் திரும்பப் பெறப்பட்டிருக்கிறாரே?

ப: அது ஒரு நல்ல செய்தி!

கே: மத்திய அரசு சமையல் சிலிண்டர் விலையை மாதந்தோறும் பத்து ரூபாய் வீதம் ஏற்றப் போவதாக செய்தி வந்திருக்கிறதே?

ப: சமையல் சிலிண்டர் விலையை உயர்த்தாமல், அதிலே நல்ல முடிவு எடுப்பார்களானால், பாதிக்கப்படுபவர்களோடு சேர்ந்து நானும் மகிழ்ச்சி அடைவேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

பல்கலைக்கழக ஆசிரியர்கள் தடையை மீறி ஆர்ப்பாட்டம்: 65 பேர் கைதாகி விடுதலை

தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் சார்பில், 2006-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு பணி மேம்பாடு ....»