ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிசாட்–14 செயற்கைகோள் திங்கட்கிழமை ஏவப்படுகிறது || G SAT 14 satellite launched Monday from SriHarikotta
Logo
சென்னை 19-12-2014 (வெள்ளிக்கிழமை)
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிசாட்–14 செயற்கைகோள் திங்கட்கிழமை ஏவப்படுகிறது
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிசாட்–14 செயற்கைகோள் திங்கட்கிழமை ஏவப்படுகிறது

புதுடெல்லி, ஆக. 17–

இந்தியாவின் தொலைத் தொடர்பு சேவைக்காக ஜிசாட்–14 என்ற செயற்கைக் கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் அதிநவீன சக்திகள் கொண்ட 6 சி–பாண்ட் மற்றும் 6 கியூ–பாண்ட் என மொத்தம் 12 டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஜிசாட்–14 செயற்கை கோளை நாளை மறு நாள் (திங்கட்கிழமை) மாலை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவ திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் அனைத்தும் முடிந்து விட்டன.

ஜிசாட்–14 செயற்கைக் கோளை பறக்க விடுவதற்கான கவுண்ட்–டவுன் நாளை (ஞாயிறு) தொடங்குகிறது. 49 மீட்டர் உயரம் உள்ள ஜி.எஸ்.எல்.வி–டி5 ராக்கெட் மூலம் இந்த செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்படும்.

ஜிசாட்–14 செயற்கைக் கோளை சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி–டி5 ராக் கெட்டில் முழுவதும் நமது தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இந்திய விஞ்ஞானிகளே தயாரித்த மேம்படுத்தப்பட்ட கிரையோஜெனிக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2010–ம் ஆண்டு முதன் முறையாக கிரையோஜெனிக் கருவி பயன்படுத்தப்பட்ட போது அது தோல்வியில் முடிந்தது.

எனவே இந்த தடவை 3 ஆண்டுகளுக்குப் பிறகு கிரையோஜெனிக் எந்திரத்தின் செயல்பாட்டை விஞ்ஞானிகள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். அடுத்து நடத்தப்பட உள்ள 6 விண்வெளி திட்டங்களுக்கு இந்த கருவியையே பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதால் திங்கட்கிழமை ஜி.எல்.எல்.வி–டி5 ராக்கெட்டின் வெற்றியை இந்திய விஞ்ஞானிகள் நம்பிக்கையுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

ஆஸ்பத்திரியில் இருந்து சரத்பவார் வீடு திரும்பினார்

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரும், டெல்லி மேல்–சபை எம்.பி.யுமான சரத்பவார் கடந்த 3–ந் தேதி டெல்லியில் ....»