திருக்கோவிலூர் அருகே காட்டுயானைகள் கூட்டம்: கிராம மக்கள் தொடர்ந்து பீதி || tirukkoyilur near elephant problem
Logo
சென்னை 18-04-2015 (சனிக்கிழமை)
  • நிலம் கையகப்படுத்தும் மசோதா: விவசாய சங்கத்தினருடன் இன்று ராகுல் ஆலோசனை
  • 20 தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தை தேசிய பழங்குடியினர் ஆணைய துணைத்தலைவர் இன்று ஆய்வு
  • நாடு திரும்பினார் பிரதமர் மோடி
  • கோடிக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம்
  • கர்நாடகாவில் முழுஅடைப்பு: பெங்களூரு செல்லும் பேருந்துகள் ஓசூரில் நிறுத்தம்
திருக்கோவிலூர் அருகே காட்டுயானைகள் கூட்டம்: கிராம மக்கள் தொடர்ந்து பீதி
திருக்கோவிலூர் அருகே காட்டுயானைகள் கூட்டம்: கிராம மக்கள் தொடர்ந்து பீதி

திருக்கோவிலூர், ஆக.14–

சேலம் மாவட்டம் ஆத்தூர் வழியாக கடந்த 1–ந் தேதி 6 யானைகள் விழுப்புரம் மாவட்டத்துக்குள் புகுந்தன. கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள கிராம பகுதிகளில் அட்டகாசம் செய்தன. பின்னர் சங்கராபுரம் பகுதியில் பயிர்களை சேதப்படுத்தியதுடன் வீடுகளையும் இடித்து தள்ளின.

பொதுமக்கள் ஒத்துழைப்புடன் அந்த யானைகளை வனத்துறையினர் விரட்டினர். எனவே அவை கடந்த 11–ந் தேதி திருவண்ணாமலை மாவட்ட காட்டுக்கு திரும்பின. நேற்று முன்தினம் விழுப்புரம் மாவட்டத்துக்குள் மீண்டும் நுழைந்தன.

திருக்கோவிலூரை அடுத்த காங்கேயனூர், சீர்பாதநல்லூர் கிராமங்களில் வாழை, கரும்பு தோட்டங்களை நாசம் செய்தன. மேலும் அந்த பகுதியில் உள்ள கோவிலில் சாமி சிலையையும் உடைத்து சேதப்படுத்தின. யானைகளின் அட்டகாசத்துக்கு பயந்து நேற்று சீர்பாதநல்லூர் உயர்நிலை பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.

நேற்று இரவு அந்த யானைகள் திருக்கோவிலூரை அடுத்த செம்படை கிராமத்துக்கு திரும்பின. அங்கு உள்ள ஒரு மாந்தோப்பில் இரவு முழுவதும் முகாமிட்டன. இன்று காலையிலும் அந்த தோப்பிலேயே வலம் வந்தன. இதனால் அந்த பகுதி கிராம மக்கள் தொடர்ந்து பீதியில் உள்ளனர்.

யானை கூட்டத்தை மீண்டும் திருவண்ணாமலை மாவட்ட காட்டு பகுதிக்குள் விரட்ட கள்ளக்குறிச்சி வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - விழுப்புரம்