பாகிஸ்தான் தாக்குதலில் 5 இந்திய வீரர்கள் பலி: பாராளுமன்றத்தில் கடும் கண்டனம் || pakistan attack 5 indian army men dead parliament condemn
Logo
சென்னை 12-02-2016 (வெள்ளிக்கிழமை)
  • 20 ஆயிரம் வாக்குசாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்: தலைமை தேர்தல் ஆணையர்
  • ராணுவ வீரர் ஹனுமந்தப்பா உடலுக்கு ராகுல்காந்தி, மனோகர் பாரிக்கர், கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மரியாதை
பாகிஸ்தான் தாக்குதலில் 5 இந்திய வீரர்கள் பலி: பாராளுமன்றத்தில் கடும் கண்டனம்
பாகிஸ்தான் தாக்குதலில் 5 இந்திய வீரர்கள் பலி: பாராளுமன்றத்தில் கடும் கண்டனம்
புதுடெல்லி, ஆக.6–

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதில் 5 இந்திய வீரர்கள் பலியான சம்பவம் அங்கு பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. சில மாதங்களுக்கு முன் காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி பாகிஸ்தான் படைகள் இந்திய வீரர்கள் 2 பேரை சுட்டுக்கொன்று அவர்களது தலையையும் துண்டித்து சென்றனர். இதற்கு இந்திய வீரர்களும் சரியான பதிலடி கொடுத்தனர்.

இதனால் சில வாரங்கள் எல்லையில் பதட்டம் நீடித்தது. அதன் பிறகு பதட்டம் தணிந்தது. இந்த நிலையில் நேற்று இரவு இந்திய எல்லையில் பாகிஸ்தான் படைகள் மீண்டும் தாக்குதல் நடத்தியது. காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் சகன்தாபாக் என்ற இடத்தில் சர்வதேச எல்லை கட்டுப்பாடு கோடு அருகே உள்ள இந்திய படைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. லஷ்கர்–இ–தொய்பா தீவிரவாதிகள் உதவியுடன் பாகிஸ்தான் வீரர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவி தாக்குதலை நடத்தினார்கள்.

கை எறிகுண்டுகளாலும், துப்பாக்கியாலும் இந்திய முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 5 இந்திய வீரர்கள் பலியானார்கள். இங்கு இந்திய ராணுவத்தின் பீகார் ரெஜிமெண்ட்டின் 21–வது பட்டாலியனைச் சேர்ந்த வீரர்கள் முகாமிட்டு இருந்தனர். இதேபோல் காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் இந்தியா– பாகிஸ்தான் எல்லையிலும் நள்ளிரவில் பாகிஸ்தான் வீரர்கள் துப்பாக்கியால் 2 ரவுண்டு சுட்டனர். இதில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயம் அடைந்தார். அவர் பெயர் ராம் நிவாஸ் மீனா. 200–வது பட்டாலியனைச் சேர்ந்தவர்.

கடந்த ஜூலை மாதம் 27–ந்தேதி இதுபோல் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயம் அடைந்தார். பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு காஷ்மீர் முதல்– மந்திரி உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலால் இருநாடுகளுக்கு இடையேயான உறவு பாதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். அடுத்த மாதம் நியூயார்க்கில் பிரதமர் மன்மோகன்சிங், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்செரீப் இடையே இந்தியா– பாகிஸ்தான் உறவு பற்றிய பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது. பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எல்லையில் நிலவும் நிலைமை குறித்து ராணுவ தலைமை தளபதி விக்ரம்சிங் கவனித்து வருகிறார்.

இதற்கிடையே 5 வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பாராளுமன்றத்தில் புயலை கிளப்பியது. பாரதீய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒட்டு மொத்தமாக எழுந்து நின்று பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்து பேசினார்கள். தொடர்ந்து பாகிஸ்தானை கண்டித்து கோஷம் எழுப்பியவாறு இருந்ததால் சபையில் அமளி ஏற்பட்டது. பாகிஸ்தான் தாக்குதல் பற்றி பிரதமர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். மேலும் ஆந்திராவைச் சேர்ந்த எம்.பி.க்கள் தெலுங்கானா விவகாரத்தை கிளப்பியதாலும் மற்ற பல பிரச்சினைகளாலும் பாராளுமன்றத்தில் கூச்சல் அமளி ஏற்பட்டது.

இதையடுத்து மதியம் 12 மணி வரை வரை பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது. இதேபோல் டெல்லி மேல்– சபையிலும் இதே பிரச்சினையை பாரதீய ஜனதா கிளப்பியது. துணை ஜனாதிபதி அமீத்அன்சாரி ஜெர்மனியில் வெண்கலம் வென்ற இந்திய ஜுனியர் மகளிர் ஆக்கி அணிக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது எதிர்க் கட்சி தலைவர் அருண் ஜெட்லி எழுந்து, பாகிஸ்தான் தாக்குதல் பற்றி பிரதமர் மன்மோகன்சிங் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்தியாவின் வெளி விவகார கொள்கை தோல்வி அடைந்துவிட்டதாக குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியால் மேல்– சபையும் மதியம் வரை ஒத்தி வைக்கப்பட்டது. முன்னதாக மேல்– சபையில் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் பாகிஸ்தானை கண்டித்து ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தார். காங்கிரஸ் மீது குற்றம்சாட்டியதால் சமாஜ்வாடி எம்.பி.க்களுக்கும், காங்கிரஸ் எம்.பி.க்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சபை மதியம் வரை ஒத்தி வைக்கப்பட்டது.

12 மணிக்குப்பின் பாராளுமன்றம் கூடியதும் பாகிஸ்தான் தாக்குதல் குறித்து விவாதம் நடந்தது. சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் பேசினார்கள். முன்னதாக உத்தரகாண்ட் வெள்ள நிவாரண மீட்பு பணி குறித்து ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி அறிக்கை வாசித்தார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

பேஸ் புக் இலவச அடிப்படை சேவை இனி இல்லை: டிராய் கட்டுப்பாடு காரணமாக அதிரடி

‘டிராய்’ என்னும் இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கடந்த 8-ந் தேதி புதிய கட்டுப்பாடுகள் விதித்து ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif