ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு || ramanathapuram district drinking water project study minister
Logo
சென்னை 07-07-2015 (செவ்வாய்க்கிழமை)
  • பிரதமர் மோடி இன்று கஜகஸ்தான் பயணம்
  • பெரம்பலூர் அருகே கோழிப்பண்ணையில் தீ விபத்து
  • நடுக்கடலில் கஞ்சா கடத்தியதாக தனுஷ்கோடி மீனவர்கள் 4 பேர் இலங்கையில் கைது
ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு
ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு

ராமநாதபுரம், ஆக. 3–

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட குடிநீர் திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் கலெக்டர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் சுந்தர்ராஜ், ராமநாதபுரம் மாவட்டத்தின் குடிநீர் பிரச்சினை முழுவதும் தீர்க்கும் வகையில் திருச்சி மாவட்டம் காவிரி ஆற்றின் நீரை ஆதாரமாக கொண்டு ராமநாதபுரம் மாவட்டம் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டு ராமநாதபுரம் நகராட்சி, ராமேசுவரம் நகராட்சி, கீழக்கரை நகராட்சி, மண்டபம் பேரூராட்சி மற்றும் ராமநாதபுரம், திருப்புல்லாணி, போகலூர், நயினார்கோவில், மண்டபம் ஒன்றியங்களில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அளவில் குடிதண்ணீர் தினசரி வழங்கப்பட்டு வருவதை குறித்து ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ராமநாதபுரம் மாவட்டத்தின் 33 கூட்டு குடிநீர் திட்டங்கள் மற்றும் 18 உவர் நீரை நன்னீராக்கும் திட்டங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா? என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.

காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் குடிதண்ணீர் குழாய்கள் உடைப்பு ஏற்படாத வண்ணம் தொடர்ந்து கண்காணிப்பு செய்து தண்ணீர் வீணாகாமல் நடவடிக்கை எடுக்கவும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாத் தலங்களான ராமேசுவரம், தேவிபட்டிணம், சேதுகரை ஆகிய இடங்களில் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதுடன் அப்பகுதிகளை மிகத் தூய்மையாக தொடர்ந்து பராமரிக்க நகராட்சி ஆணையாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று உத்தரவிட்டார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ் நாடு சேமிப்பு கிடங்கு வாரியத்தலைவர் முனியசாமி, திட்ட அலுவலர் அய்யப்பன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர்கள் பாண்டி, பாலசண்முகம், குலாம்முகைதீன், ரவீந்திரன், தங்கதுரை, நகராட்சி ஆணையாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - இராமநாதபுரம்