Logo
சென்னை 25-04-2014 (வெள்ளிக்கிழமை)
கவிதைச் சுரங்கமாக வாழ்ந்தவர் வாலி: கருணாநிதி புகழஞ்சலி
சென்னை, ஜூலை 19-

கவிஞர் வாலி மறைவுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

திரையுலக வரலாற்றில் வாலி ஒரு அழிக்க முடியாத அத்தியாயம். அந்த அத்தியாயம் இன்றைக்கு முடிந்து விட்டது. ஆனால் அவர் தனது பாடல்கள் மூலம் பரப்பி வந்த புகழொளி என்றைக்கும் நிலைத்திருக்கக் கூடியது.

பல்லாண்டுகளாக அவரும் நானும் நண்பர்களாக பழகி இருக்கிறோம். எந்த ஒரு நேரத்திலும் அவர் தன் பகைவர்களை இகழ்ந்து பேசியதில்லை. நண்பர்கள் காட்டிய அன்பை மறக்கும் தன்மையும் அவரிடத்திலே இல்லை. இதிகாசங்களையும் தமிழ் இலக்கியங்களாக மாற்றிய பெருமை அவருக்கு உண்டு. கவிதைச் சுரங்கமாகவே அவர் வாழ்ந்தார். இன்றைக்கு அவர் மறைந்துவிட்ட நிலையிலும், அவர் எழுதிய பாடல்கள் மறையாமல் மக்கள் மனதில் பசுமையாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றன.

எனக்கு மிகச் சிறந்த நண்பராக விளங்கிய வாலியை இழந்துவிட்டேனா என்ற கேள்வி என் மனதிலே எழுகிறது. வாலியின் புகழ் வாழும். அவருடைய பெயருக்கு என்றைக்கும் ஒரு பெருமை உண்டு.

வாலியை இழந்து நிற்கும் திரையுலகத்திற்கு நான் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவருடைய குடும்பத்தாருக்கு நெஞ்சார்ந்த துயரத்தை வெளிப்படுத்தி இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

நாட்டில் எங்கும் மோடி அலை இல்லை: மன்மோகன் சிங் பேட்டி

பிரதமர் மன்மோகன் சிங் அசாம் மாநிலத்தில் இருந்து டெல்லி மேல்-சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரது வீடு கவுகாத்தி ....»