காற்று மாசுபாட்டால் ஆண்டுக்கு 20 லட்சம் பேர் இறப்பு: ஆய்வில் தகவல் || air pollution 20 lakhs people dead every year
Logo
சென்னை 30-07-2015 (வியாழக்கிழமை)
காற்று மாசுபாட்டால் ஆண்டுக்கு 20 லட்சம் பேர் இறப்பு: ஆய்வில் தகவல்
காற்று மாசுபாட்டால் ஆண்டுக்கு 20 லட்சம் பேர் இறப்பு: ஆய்வில் தகவல்
வாஷிங்டன், ஜூலை 14-

மக்களால் ஏற்படுத்தப்படும் வெளிப்புறக் காற்று மாசுபாட்டினால் ஆண்டுதோறும் இருபது லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறக்க நேரிடுகிறது என்று ஒரு புதிய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

ஓசோன் மண்டலத்தில் மக்கள் ஏற்படுத்தும் அசுத்தங்களால் ஆண்டுக்கு 4 லட்சத்து 70 ஆயிரம் பேர் இறப்பதாகவும், புற்றுநோய் மற்றும் பிற சுவாச நோய்களை ஏற்படுத்தும் நுண்ணிய துகள்கள் வெளிப்பாட்டினால் ஆண்டுக்கு 21 லட்சம் பேர் இறக்க நேரிடுவதாகவும் இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.

பொதுவாக சுகாதார சீர்கேட்டிற்கு வெளிப்புறக் காற்று மாசடைவதுதான் முக்கிய காரணமாக விளங்குகின்றது. மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள கிழக்கு மற்றும் தெற்கு ஆசிய நாடுகளிலேயே காற்று மாசடைவதும் அதிகமாக உள்ளது.

எனவே, இந்தப் பகுதிகளிலேயே மக்கள் இறப்பதுவும் அதிகளவில் இருக்கின்றது என்று வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜேசன் வெஸ்ட் என்ற இந்த ஆய்வின் உப தலைவர் தெரிவிக்கின்றார். காலநிலை மாறுபாட்டினால் ஏற்படும் காற்று மாசுபாடு கூட இறப்பு விகிதங்களை அதிகரிக்கும் என்றபோதிலும், இந்த மாறுபாடு குறைந்த பட்ச விளைவையே ஏற்படுத்தும் என்று இந்த அறிக்கை தெளிவுறுத்துகின்றது.

இதனால் ஏற்படும் இறப்புகள் சில ஆயிரங்களிலேயே காட்டப்பட்டுள்ளன. காலநிலை மாற்றமும் மாசுபாட்டின் அளவைக் கூட்டவோ, குறைக்கவோ முடியும் என்று கூறப்படுகின்றது. உதாரணத்திற்கு, வெப்பநிலை அல்லது ஈரப்பதம் ஒரு மாசுபடுத்தியின் உருவாக்கம் அல்லது வாழ்நாளைத் தீர்மானிக்கமுடியும். அதேபோல் மழைநீரும் மாசுபடுத்தியினைக் குவிக்கமுடியும். அதிக வெப்பமும் இத்தகைய மாற்றத்தினைக் கொண்டுவர முடியும். ஆராய்ச்சிகளே காற்றின் தன்மை, சுகாதாரம் போன்றவற்றில் காலநிலை மாற்றங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தினைப் பற்றி மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆயினும் இதுபோன்ற காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் குறைவான அளவிலேயே இருந்தது என்று கூறும் ஆய்வாளர்கள் காற்றில் அதிகரித்திருக்கும் நுண்ணிய துகள்களின் அளவினை 1850ம் ஆண்டின் அளவுடன் 2000வது ஆண்டின் அளவினை ஒப்பிட்டுப் பார்த்து விஞ்ஞானபூர்வமாக தங்கள் ஆய்வினை நிரூபித்துள்ளனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

பிச்சைக்காரர்களின் மறுவாழ்வுக்கு மத்திய அரசு புதிய திட்டம்

பிச்சைக்காரர்களின் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வுக்காக புதிய திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ....»

MM-TRC-B.gif