Logo
சென்னை 25-04-2014 (வெள்ளிக்கிழமை)
அரசியல் தஞ்சம்: ஸ்னோடென் கோரிக்கையை ஐஸ்லாந்து பாராளுமன்றம் நிராகரித்தது
ரெய்க்ஜாவிக், ஜூலை 5-

உலக நாடுகளின் தூதரகங்களை அமெரிக்கா உளவு பார்த்த தகவலை வெளியிட்ட எட்வர்ட் ஸ்னோடென் தற்போது ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ விமான நிலையத்தில் தங்கியுள்ளார்.

அமெரிக்காவுக்கு சென்றால் தனது உயிருக்கு ஆபத்து என்று கருதும் ஸ்னோடென் உலகில் உள்ள பல நாடுகளிடம் அரசியல் தஞ்சம் கேட்டு மனு செய்துள்ளார். அவரது கோரிக்கையை இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் புறக்கணித்து விட்டன.

இந்நிலையில், ஐஸ்லாந்து நாட்டிடம் தஞ்சம் கேட்டு ஸ்னோடென் விடுத்துள்ள கோரிக்கை பற்றி அந்த நாட்டு எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் விவாதித்தனர்.

எட்வர்ட் ஸ்னோடென்னுக்கு ஐஸ்லாந்து குடியுரிமை வழங்க 3 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் 63 எம்.பி.க்கள் கொண்ட ஐஸ்லாந்து பாராளுமன்றத்தில் ஸ்னோடென்னுக்கு தஞ்சம் அளிக்க வேண்டும் என்று 6 எம்.பி.க்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர்.

சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, பின்லாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து, நார்வே, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டு மண்ணில் அவர் இருந்து அடைக்கலம் கேட்டால் மட்டுமே தஞ்சம் அளிப்பது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என கூறி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

டெல்லியில் தீவிபத்து: 500 குடிசைகள் சாம்பல்

புதுடெல்லி, ஏப்.25–டெல்லியின் தெற்கு பகுதியில் வசந்த் கஞ்ச் எனும் இடத்தில் ஏராளமான குடிசைகள் உள்ளது. இன்று ....»