சிங்கப்பூரில் இருந்து ரூ.15 லட்சம் தங்க பிஸ்கட் கடத்தியவர் கைது || 15 lakhs gold biscuit smuggling man arrest in chennai airport
Logo
சென்னை 23-05-2015 (சனிக்கிழமை)
  • தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜெயலலிதா
  • அமைச்சர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் பதவியேற்றனர்
  • பதவியேற்பு விழா நிறைவு: அமைச்சர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்
  • தேசிய கொடி மற்றும் சின்னம் பொருத்திய காரில் போயஸ் தோட்ட இல்லத்துக்கு புறப்பட்டார் ஜெயலலிதா
  • சொத்துக் குவிப்பு வழக்கு: கர்நாடக சட்டத்துறை ஆய்வு செய்து கொண்டிருக்கிறது- சித்தராமையா தகவல்
  • பாகிஸ்தானிடமிருந்து 12 மாதங்களுக்குள் முதல் அணு ஆயுதத்தை வாங்குவோம்: ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் அறிவிப்பு
சிங்கப்பூரில் இருந்து ரூ.15 லட்சம் தங்க பிஸ்கட் கடத்தியவர் கைது
சிங்கப்பூரில் இருந்து ரூ.15 லட்சம் தங்க பிஸ்கட் கடத்தியவர் கைது
ஆலந்தூர், ஜூலை. 5-

சிங்கப்பூரில் இருந்து சென்னை வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டனர்.

சிங்கப்பூர் விமானம் இரவு வந்ததும் பயணிகள் இறங்கி சென்றனர். சந்தேகம் அடைந்த ஒரு பயணியை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவரை தனியாக அழைத்து சென்று உடைகளை கழற்றி பரிசோதித்தபோது அவரது கோட்- சூட்டில் தங்க பிஸ்கட் மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. 2 இடத்தில் 5 பிஸ்கட் இருந்ததை அதிகாரிகள் கைப்பற்றினர். அவற்றின் மதிப்பு ரூ.15 லட்சமாகும்.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரது பெயர் மோகன் (வயது38). திருச்சியைச் சேர்ந்தவர். சுற்றுலா விசாவில் சிங்கப்பூர் சென்று விட்டு திரும்பி வரும்போது தங்கத்தை கடத்தியுள்ளார். அவர் யாருக்காக தங்கத்தை கடத்தி வந்தார் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

28 அமைச்சர்களும் மொத்தமாக பதவியேற்பு

புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா நடைபெறும் போது முதல்வரைத் தொடர்ந்து ஒவ்வொரு அமைச்சர்களும் தனித்தனியாக ....»

160x600.gif