உத்தரகாண்டில் பேய் மழை: கேதர்நாத் பாதுகாப்பு பணியிலிருந்த 45 போலீசார் மாயம் || Uttarakhand rain 45 cops missing
Logo
சென்னை 30-03-2015 (திங்கட்கிழமை)
உத்தரகாண்டில் பேய் மழை: கேதர்நாத் பாதுகாப்பு பணியிலிருந்த 45 போலீசார் மாயம்
உத்தரகாண்டில் பேய் மழை: கேதர்நாத் பாதுகாப்பு பணியிலிருந்த 45 போலீசார் மாயம்
டேராடூன், ஜூன் 18-

உத்தரகாண்டில் இடியுடன் கூடிய கன மழை கொட்டி வருகிறது. இதனால் அங்கு நிலச்சரிவு மற்றும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்திற்கு இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் பெரும்பாலான சாலைகள் சேறு சகதிகளால் மூடப்பட்டு கிடக்கின்றன. இதனால் பல லட்சம் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் முடங்கி கிடக்கின்றனர்.

புனித ஸ்தலமான கேதர்நாத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 40-க்கும் மேற்பட்ட போலீசாரை காணவில்லை என்று கூறப்படுகிறது. பணியில் இருந்த 50 பேரில் 5 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ளவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.

இந்நிலையில் அங்கு 3 இந்தோ திபெத்தின் எல்லைப்படை போலீஸ்காரர்களும், இரண்டு உள்ளூர் போலீஸ்காரர்களும் மழையில் சிக்கி இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், அங்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகளுடன் 73,000 பேர் எங்கும் செல்ல முடியாதபடி தவிக்கின்றனர்.

அவர்களை உடனடியாக காப்பாற்ற 10 ஹெலிகாப்டர்களில் சென்ற விமானப்படை வீரர்கள், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்டமாக அவர்கள் கேதர்நாத்தின் உயர் பகுதியில் இருந்த 200 சுற்றுலாப் பயணிகளை மீட்டு வந்தனர்.

அங்கு தவித்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்க தனியார் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

ஓடுபாதையில் மோதி விபத்துக்குள்ளான ஏர் கனடா விமானம்: 23 பயணிகள் காயம்

கனடாவில் ஏர் கனடா விமானம் தரையிறங்கும்போது மோசமான வானிலை காரணமாக ஓடுபாதையில் மோதி விபத்துக்கு உள்ளானது. ....»