ஊழலுக்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலக வேண்டும்: முரளி மனோகர் ஜோஷி || Prime Minister Manmohan Singh should step down over corruption
Logo
சென்னை 06-02-2016 (சனிக்கிழமை)
ஊழலுக்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலக வேண்டும்: முரளி மனோகர் ஜோஷி
ஊழலுக்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலக வேண்டும்: முரளி மனோகர் ஜோஷி
ஆலந்தூர், மே 12-

முன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான முரளி மனோகர் ஜோஷி டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜனநாயக நாட்டில் ஊழலுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டங்களை நடத்த அரசியல் கட்சிகளுக்கும், பொது மக்களுக்கும் உரிமை உள்ளது.

ஆனால் இன்று காலை டெல்லியில் பிரதமர் அலுவலகம் முன்பு பா.ஜனதாவினர் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய போது, போலீசார் தடியடி நடத்தி உள்ளனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இது ஜனநாயக முறையை மீறிய செயல் ஆகும்.

கர்நாடகாவில் ஏற்பட்ட தோல்வியை பா.ஜனதா ஒப்புக்கொள்கிறது. மக்கள் தீர்ப்பை தலை வணங்கி ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் இதே முடிவு பாராளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பாராளுமன்றத்தில் மக்களின் தீர்ப்பு வேறு விதமாக இருக்கும்.

மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு ஊழலில் திளைக்கிறது. இதனால் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

2ஜி உள்பட மத்திய மந்திரிகள் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருகிறார்கள். இதற்கு பிரதமர் மன்மோகன்சிங் தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். ஏனென்றால் மத்திய மந்திரி சபையின் தலைவர் பிரதமர் தான். எனவே மந்திரிகள் செய்யும் ஊழல்களுக்கு அவர்தான் பொறுப்பேற்க வேண்டும்.

இதனால் மன்மோகன்சிங், தார்மீக பொறுப்பேற்று பிரதமர் பதவியில் இருந்து உடனடியாக பதவி விலக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

வருமான வரி விலக்கு உச்சவரம்பை ரூ.4 லட்சமாக உயர்த்த வேண்டும்: நிதி அமைச்சக ஆலோசனை கமிட்டி யோசனை

வருமான வரி விலக்கு உச்சவரம்பை ரூ.4 லட்சமாக உயர்த்த வேண்டும், ‘பான்’ எண் குறிப்பிடுவதை கட்டாயமாக்கும் ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif