ஆன்லைன் மூலம் 'வயாகரா' மாத்திரை விற்பனை || Vayakara tablet through online sales
Logo
சென்னை 29-08-2015 (சனிக்கிழமை)
ஆன்லைன் மூலம் 'வயாகரா' மாத்திரை விற்பனை
ஆன்லைன் மூலம் 'வயாகரா' மாத்திரை விற்பனை
நியூயார்க், மே 7-

ஆண்மை சக்தி குறைபாடுள்ளவர்களுக்கு புத்துணர்ச்சி தரும் 'வயாகரா' மாத்திரை 1998ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த 15 ஆண்டுகளாக உலகின் அதிக நாடுகளில் விற்பனையாகும் இந்த மாத்திரைக்கு இந்தியாவில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு 'வயாகரா' என்ற பெயருக்கு நெருக்கமான பெயர்களை கொண்ட பல போலி மாத்திரைகள் டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் தள்ளுபடி விலையில் இணைய தளங்களின் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.

ஆண்மை குறைபாடுகளை நீக்கும் என்ற நம்பிக்கையில் இந்த போலி மாத்திரைகளை வாங்கி உபயோகிக்கும் பலர், நாளடைவில் பக்கவிளைவு நோய்களுக்கு ஆளாகி ஆண்மையையே இழந்துப் போகும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

அதுமட்டுமின்றி, இணைய தளம் மூலமாக நடைபெறும் இந்த ரகசிய வியாபாரத்தால் வயாகரா மாத்திரையை தயாரிக்கும் 'பைசர்' நிறுவனத்தின் விற்பனை கணிசமாக சரிந்து விட்டது.

இதனை கருத்தில் கொண்டு, பைசர் நிறுவனமும் வயாகரா மாத்திரையை ஆன் லைன் மூலமாக விற்க ஏற்பாடு செய்துள்ளது.

அந்நிறுவனத்தின் இணைய தளத்தின் வாயிலாக உலகில் எந்த மூலையில் இருந்தும் இனி மாத்திரைகளை வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

30 மாத்திரைகள் கொண்ட ஒரு டப்பாவின் விலை 750 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்புக்கு சுமார் 40 ஆயிரம் ரூபாய்) எனவும் முதல் முறையாக வாங்கும் வாடிக்கையாளருக்கு 3 மாத்திரை இலவசம் எனவும் பைசர் நிறுவனம் விளம்பரம் வெளியிட்டுள்ளது.

இரண்டாவது முறையாக அடுத்த டப்பா வாங்குவோருக்கு 30 சதவீதம் தள்ளுபடி விலையில் கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

இரண்டு வயது குழந்தைகள், இருமுறை சொல்லும் அனைத்து சொற்களையும் புரிந்துகொள்கின்றனரா?

சிறு குழந்தைகளுக்கு புரிய வேண்டும் என்பதற்காக பெற்றோர் மற்றும் உறவினர், அவர்களிடம் ஏதேனும் சொல்லும்போது ஒற்றை ....»

amarprash.gif