சாதி மோதலை தூண்டும் வகையில் பேச்சு: டாக்டர் ராமதாஸ் மீது மதுரை ஐகோர்ட்டில் வழக்கு || caste clash Ramdoss speech Madurai high court case
Logo
சென்னை 09-10-2015 (வெள்ளிக்கிழமை)
சாதி மோதலை தூண்டும் வகையில் பேச்சு: டாக்டர் ராமதாஸ் மீது மதுரை ஐகோர்ட்டில் வழக்கு
சாதி மோதலை தூண்டும் வகையில் பேச்சு: டாக்டர் ராமதாஸ் மீது மதுரை ஐகோர்ட்டில் வழக்கு
மதுரை, மே. 3-

மதுரையை சேர்ந்தவர் மெய்யப்பன். தமிழ்ப்புலிகள் அமைப்பின் நிர்வாகியான இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார். தாழ்த்தப்பட்டோர் அல்லாத அமைப்புகளை ஒன்று சேர்த்து மாவட்டங்கள் தோறும் கூட்டம் நடத்தி தாழ்த்தப்பட்ட இளைஞர்களுக்கு எதிராக அவர் பிரசாரம் செய்து வருகிறார். இதன்மூலம் சாதி மோதலை உருவாக்கும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

பிறசாதிப் பெண்கள், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞர்களை திருமணம் செய்து கொள்வது போலி நாடகம் என்றும், பணத்துக்காக நடக்கிறது என்றும் அவர் பேசி வருகிறார். இதன்மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பிற சாதி மக்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலையை அவர் உருவாக்கி உள்ளார்.

மதுரையில் நடந்த கூட்டத்திலும் அவர், சாதி மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசி உள்ளார். இது குறித்து 20.12.2012 அன்று தல்லாகுளம் போலீசில் புகார் கொடுத்தேன். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, டாக்டர் ராமதாஸ் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, “மனுதாரரின் புகாரை தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரிக்க வேண்டும். புகாரில் முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் சட்டத்துக்கு உட்பட்டு இன்ஸ்பெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று உத்தரவிட்டார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - மதுரை

VanniarMatrimony_300x100px_2.gif