எதிர்நீச்சல், சூதுகவ்வும், மூன்று பேர் மூன்று காதல் ஆகிய படங்கள் நாளை ரிலீஸ் || ethineechal soothu kavvum moontru per moontru kathal
Logo
சென்னை 30-05-2015 (சனிக்கிழமை)
எதிர்நீச்சல், சூதுகவ்வும், மூன்று பேர் மூன்று காதல் ஆகிய படங்கள் நாளை ரிலீஸ்
சென்னை, ஏப். 30-

மே தினத்தையொட்டி நாளை எதிர் நீச்சல், சூதுகவ்வும், மூன்று பேர் மூன்று காதல் ஆகிய மூன்று படங்கள் ரிலீசாகிறது.

எதிர்நீச்சல் படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாகவும், பிரியா ஆனந்த், நந்திதா நாயகிகளாகவும் நடித்துள்ளனர். ஆர்.எஸ். செந்தில் இயக்கி உள்ளார். நடிகர் தனுஷ் இப்படத்தை தயாரித்து உள்ளார். இதில் நயன்தாரா சம்பளம் வாங்காமல் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளதாக ஆர்.எஸ். செந்தில்குமார் தெரிவித்தார். காமெடி படமாக தயாராகி உள்ளது என்றும் ஒரு இளைஞர் வாழ்க்கையில் மூன்று பெண்கள் குறுக்கிடுகின்றனர். நாயகன் சந்திக்கும் பிரச்சினைகளும் அவன் வாழ்க்கையில் எத்தகு மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதும் கதை என்றும் அவர் கூறினார்.

சிவகார்த்திகேயன் கூறும்போது: எதிர்நீச்சல் போட்டு நாயகன் எப்படி முன்னேறுகிறான் என்பதே கதை என்றார். இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

சூதுகவ்வும் படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ளார். நலன் குமாரசாமி இயக்கியுள்ளார். திருட்டு தொழில் செய்யும் நண்பர்கள் பற்றிய கதை.

மூன்று பேர் மூன்று காதல் படத்தை வசந்த் இயக்கியுள்ளார். அர்ஜுன், விமல், சேரன் இணைந்து நடித்துள்ளனர். மூன்று இளைஞர்களை சுற்றி பின்னப்பட்ட காதல் கதை.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - சினிமா செய்திகள்

section1

கார்த்தி படத்தில் புதிய தொழில்நுட்பம்

‘கொம்பன்’ படத்திற்குப் பிறகு கார்த்தி தற்போது ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற படத்தை இயக்கிய கோகுல் ....»

தொடர்புடைய கேலரி
மூன்று பேர் மூன்று காதல் இசை
எதிர் நீச்சல்
சூது கவ்வும்
தொடர்புடைய வீடியோ
எதிர் நீச்சல் படக்குழு -பத்திரிகையாளர் சந்திப்பு
எதிர் நீச்சல் படக்குழு சிறப்பு பேட்டி
எதிர் நீச்சல் டிரைலர்