தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஏற்படும் பயன்கள் || doing daily walking exercises benefits
Logo
சென்னை 01-04-2015 (புதன்கிழமை)
  • ரெயில்வே நடைமேடை கட்டணம் ரூ.10 இன்று முதல் அமல்
  • ரெயில் டிக்கெட் 120 நாட்களுக்கு முன்பாக பதிவு செய்யும் முறை இன்று முதல் அமல்
தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஏற்படும் பயன்கள்
தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஏற்படும் பயன்கள்

தினமும் நடைபயிற்சி செய்து வந்தால் உடல் வலிமை பெறுவதுடன், தேவையான சக்தியும் கிடைக்கிறது. தினமும் செய்ய முடியவில்லை என்றாலும் வாரம் 5 நாட்கள் செய்தால் போதுமானது. நடைப்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்..அவை... 

* இரத்த ஓட்டம் சீரடையும்

* நரம்பு மண்டலம் சுறுசுறுப்படையும் 

* நாளமில்லா சுரப்பிகள் புத்துணர்ச்சி பெறும். 

* அதிகப்படியான கலோரிகளை (Calories ) எரிக்க உதவுகிறது 

* முதுகு நரம்புகளை உறுதியாக்குகிறது 

* அடிவயிற்றுத் தொப்பையைக் குறைக்கிறது 

* மூட்டுக்களை இலகுவாக்குகிறது 

* எலும்புகளுக்கு உறுதியளிக்கிறது 

* உங்கள் கால்களையும் உடலையும் உறுதியான அமைப்பில் வைக்கிறது 

* கெட்ட கொழுப்புச்சத்தின் (Choles terol) அளவை குறைக்கிறது 

* மாரடைப்பு சர்க்கரை நோய் போன்றவற்றின் அபாயத்தைக் குறைக்கிறது 

* உடல் மற்றும் மனச்சோர்வை குறைக்கிறது 

* நல்ல தூக்கம் வர உதவுகிறது 

* நல்ல கண்பார்வையை வழங்குகிறது

- முறையாக நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் நலமாக வாழலாம். வீண் மருத்துவச் செலவை தவிர்க்கலாம். முப்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் நடைப்பயிற்சியை தினமும் 40 நிமிடங்கள் செய்தால் கூட போதுமானது.