போலீஸ் சோதனை தீவிரம்: ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டிய 50 பேர் மீது வழக்குபதிவு || police check dont wear helmet case file on 50 person
Logo
சென்னை 23-12-2014 (செவ்வாய்க்கிழமை)
  • சென்னை விமான நிலையத்தில் 4 கிலோ தங்கம் பறிமுதல்
  • சுங்கச்சாவடிகளில் பஸ், கார்களுக்கு சுங்க வரி விரைவில் ரத்து: புதிய திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு
  • ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஜார்கண்ட தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
  • காஷ்மீர் தேர்தல் முடிவுகள்: பா.ஜ.க 12, பி.டி.பி 9, தேசிய மா.கட்சி 7
  • ஜார்கண்டில் அர்ஜூன் முண்டா முன்னிலை
  • ஜார்கண்டில் ஹேமந்த் சோரன் முன்னிலை
  • ஜம்மு காஷ்மீரில் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் உமர் அப்துல்லா முன்னிலை
  • ஜார்கண்ட் தேர்தல் முடிவுகள்: பா.ஜ.க- 22, காங் 3, ஜெ.எம்.எம் 9
போலீஸ் சோதனை தீவிரம்: ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டிய 50 பேர் மீது வழக்குபதிவு
போலீஸ் சோதனை தீவிரம்: ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டிய 50 பேர் மீது வழக்குபதிவு
நாகர்கோவில், மார்ச் 31-
 
குமரி மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
 
இதையடுத்து போலீசார் அடிக்கடி வாகன சோதனை நடத்தி ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களை பிடித்து வழக்குபதிவு செய்து அபராதம் விதித்தனர். இதனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டினர்.
 
சமீப காலமாக போலீசாரின் சோதனை குறைந்திருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை தவிர்த்தனர். இதனால் விபத்துகளில் உயிர்பலி அதிகரித்தது. இதையடுத்து ஹெல்மெட் சோதனையை மீண்டும் தீவிரப்படுத்தும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் நேற்று உத்தரவிட்டார்.
 
இதையடுத்து நேற்று காலை முதலே மாவட்டம் முழுவதும் போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தினர். நேற்று ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 50 பேரை பிடித்து போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
 
இன்று 2-வது நாளாக போலீசாரின் சோதனை தீவிரமாக நடந்தது. நாகர்கோவிலில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் போலீசார் மணிமேடை சந்திப்பு, கோட்டார், செட்டிகுளம், வேப்பமூடு, வடசேரி உள்ளிட்ட பகுதிகளில் வாகன சோதனை நடத்தினர்.
 
இதில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 20 பேரை பிடித்து வழக்குபதிவு செய்தனர். இதுபோல மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் 50-க்கும் மேற்பட்டோர் சிக்கினர்.
 
இதுதவிர, லைசென்சு மற்றும் இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியவர்கள், டிரிப்பிள்ஸ் சென்றவர்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களையும் மடக்கிப் பிடித்து போலீசார் அபராதம் விதித்தனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - கன்னியாகுமரி

section1

நாகர்கோவிலில் லஞ்ச புகாரில் சிக்கிய மின்வாரிய அதிகாரி சஸ்பெண்டு

தமிழ்நாடு மின்வாரிய நாகர்கோவில் மண்டல கண்காணிப்பு பொறியாளராக பணியாற்றியவர் பகவதியப்பன். இவர் தற்போது நெல்லை கோட்டத்தில் ....»