திருத்தணியை தமிழகத்தோடு இணைத்த 54 வது ஆண்டு விழா: பழ.நெடுமாறன் பங்கேற்பு || thiruthani tamilnadu joint 54 year Annual Festival palanedumaran participate
Logo
சென்னை 04-03-2015 (புதன்கிழமை)
  • உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் 11/1 (5)
  • நவாஸ் ஷெரிப் இன்று சவுதி பயணம்
  • உலக கோப்பை: ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்
திருத்தணியை தமிழகத்தோடு இணைத்த 54-வது ஆண்டு விழா: பழ.நெடுமாறன் பங்கேற்பு
திருத்தணியை தமிழகத்தோடு இணைத்த 54-வது ஆண்டு விழா:
 பழ.நெடுமாறன் பங்கேற்பு
திருத்தணி, மார்ச். 31-

திருத்தணி தமிழகத்தோடு 1-4-1960-ம் ஆண்டு இணைக்கப்பட்டது. விடுதலைப் போராட்ட வீரர் ம.பொ.சி. எல்லைப் போராட்டங்கள் நடத்தி திருத்தணியை தமிழகத்துக்கு மீட்டுத் தந்தார். திருத்தணி தமிழகத்தோடு இணைந்து 53 ஆண்டுகள் நிறைவடைந்து 54-வது ஆண்டு தொடக்க விழா நாளை (1-ந்தேதி) திருத்தணியில் நடக்கிறது. நாளை காலை 9.30 மணிக்கு திருத்தணி ம.பொ.சி. சிலை எதிரில் உள்ள வன்னியர் சத்திரத்தில் விழா நடக்கிறது.

விழாவுக்கு பழ.நெடுமாறன் தலைமை தாங்கி எல்லைப் போராட்ட வீரர்களை கவுரவிக்கிறார். ராஜேஸ்வரி மங்களகுமார் வரவேற்கிறார். ம.பொ.சி. அறக்கட்டளை நிறுவனர் மாதவி பாஸ்கரன் முன்னிலை வகிக்கிறார். இதில் கவிக்கோ ஞானசெல்வன், அரு.கோ, சி.என். பரமசிவம், கவிஞர் தாமரைச் செல்வன், வக்கீல் குப்பன், பாலாஜி லோகநாதன், சக்திவேல், கணேஷ், நரசிம் மன் கிருஷ்ணமூர்த்தி, ரா.கிருஷ்ணன், தணிகை சிலம்பன், கு.மு.கணேசன், சேகர்வர்மா ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள். பா.செந்தில்குமார் தொகுப்புரை வழங்குகிறார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - திருவள்ளூர்

section1

ஊத்துக்கோட்டையில் இடியுடன் பலத்த மழை

ஊத்துக்கோட்டையில் நேற்று மதியம் வெயில் சுட்டெரித்தது. மாலை 5.30 மணியளவில் கருமேகங்கள் சூழ்ந்து வானம் இருண்டு காணப்பட்டது. ....»

amarprakash160600.gif
amarprakash160600.gif