சூதுகவ்வும் படம் கதை பிடித்ததால் வயதான வேடத்தில் நடிக்கிறேன்: விஜய் சேதுபதி || i like soodhukavvum film so i act
Logo
சென்னை 07-10-2015 (புதன்கிழமை)
சூதுகவ்வும் படம் கதை பிடித்ததால் வயதான வேடத்தில் நடிக்கிறேன்: விஜய் சேதுபதி
சூதுகவ்வும் படம் கதை பிடித்ததால் வயதான வேடத்தில் நடிக்கிறேன்: விஜய் சேதுபதி
சென்னை, மார்ச் 30-
 
விஜய்சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி ஜோடியாக நடிக்கும் படம் சூதுகவ்வும். ராதாரவி, சிம்ஹா,  அசோக், ரமேஷ், நெல்லை சிவா ஆகியோரும் நடித்துள்ளனர்.
 
இப்படத்தை நலன் குமாரசாமி இயக்குகிறார். சி.வி.குமார் தயாரிக்கிறார்.
 
ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா, ஸ்டூடியோ சுரேஷ் ஆகியோர் இணைந்து இப்படத்தை வெளியிடுகின்றனர்.
 
சூதுகவ்வும் படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
 
இந்த படத்தில் விஜய் சேதுபதி நரைமுடி தாடியில் நாற்பது வயது நிரம்பியவராக வருகிறார். வயதான கேரக்டரில் நடிப்பது குறித்து கேட்டபோது விஜய்சேதுபதி கூறியதாவது:-
 
சூதுகவ்வும் கதையை முதலில் குறும்படமாக உருவாக்கி இருந்தனர். அப்போதே இந்த கதை எனக்கு தெரியும். இயக்குனர் நலன் குமாரசாமியும் எனது நண்பர்.
 
இந்த கதை படமாகும் போது நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதன்படி இந்த கேரக்டரை நானே கேட்டுவாங்கினேன். கதாநாயகன் ஆன பிறகு எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம். நாற்பது வயதாக இருந்தாலும் அறுபதி வயதாக இருந்தாலும் நடிக்கலாம்.
 
இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்கள் சிவா, சீனிவாசன் போன்றோர் பங்கேற்றனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - சினிமா செய்திகள்

VanniarMatrimony_300x100px_2.gif