பாகிஸ்தானில் தீவிரவாதி சயீத்துடன் மேடையை பகிர்ந்துகொண்ட யாசின் மாலிக் வருகைக்கு சிவசேனா எதிர்ப்பு || yasin malik returns to India protests by shiv sena activists
Logo
சென்னை 27-05-2015 (புதன்கிழமை)
பாகிஸ்தானில் தீவிரவாதி சயீத்துடன் மேடையை பகிர்ந்துகொண்ட யாசின் மாலிக் வருகைக்கு சிவசேனா எதிர்ப்பு
பாகிஸ்தானில் தீவிரவாதி சயீத்துடன் மேடையை பகிர்ந்துகொண்ட யாசின் மாலிக் வருகைக்கு சிவசேனா எதிர்ப்பு
புதுடெல்லி, மார்ச். 10-

பாராளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குரு தூக்கிலிடப்பட்டான். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக், பாகிஸ்தானில் சமீபத்தில் உண்ணாவிரதம் இருந்தார்.

அப்போது 2008 மும்பை தாக்குதலில், 166 பேரை கொல்ல மூலகாரணமாக இருந்த லஷ்கர் இ தொய்பா தலைவன் ஹபீஸ் சயீத் மாலிக்கை சந்தித்து பேசினான். இந்த சந்திப்பு இந்தியாவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று அவர், இஸ்லமாபாத்திலிருந்து புதுடெல்லி வந்து சேர்ந்தார். அப்போது சிவசேனா கட்சியினர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்க முயன்றனர். முன்கூட்டியே, எச்சரிக்கையுடன் இருந்த போலீசார் இதை தடுத்து நிறுத்தினர்.

செய்தியாளர்களை சந்தித்த மாலிக் பேசியதாவது:-

அப்சல் குரு தூக்கிற்கு எதிராக பாகிஸ்தானில் போராட்டம் நடத்தினேன். நான் சயீத்தை அழைக்கவில்லை. நான் போராட்ட பேரணியும் நடத்தவில்லை. கடந்த 2006-ம் ஆண்டும் நான் சயீத்தை சந்தித்து பேசியிருக்கிறேன்.

அப்போது நான் குறிவைக்கப்படவில்லை. இப்பொழுது ஏன் என ஆச்சரியமாக இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் என்னை ஜெயில் போடுங்கள்.

இவ்வாறு மாலிக் பேசினார். 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

கருப்பு பணம்: யாஷ் பிர்லா உட்பட 5 இந்தியர்களின் பெயர்களை வெளியிட்டது சுவிஸ் வங்கி

சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கிவைத்திருப்பதாக பிரபல தொழில் அதிபர் யாஷ் பிர்லா உட்பட 5 ....»

MM-TRC-Set2-B.gif